India Supreme Court News, High Court News, Legal News, Crime News
இதை எனது முதல் பக்கமாக்கு
Get Font | Sitemap |   RSS Feed
கோர்ட் செய்திகள்  
மாஜி அமைச்சரின் நேர்முக உதவியாளர் ஜாமீன் மனு விசாரணை 9ம் தேதிக்கு ஒத்திவைப்பு
நவம்பர் 07,2009,00:00  IST

ஈரோடு: சிவபாலன் தாக்கப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சரின் நேர்முக உதவியாளர் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணை, வரும் 9ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.



ஈரோடு மாவட்டம், பெருந்துறை ஆள்கடத்தல் வழக்கின் முக்கிய சாட்சியான சிவபாலன் தாக்கப்பட்ட சம்பவத்தில், முன்னாள் அமைச்சர் ராஜா உட்பட 10 பேர் மீது வழக்கு பதிவானது. ராஜா, அவரது இரண்டாவது மனைவி உமாமகேஸ்வரி ஆகியோர் தலைமறைவாக உள்ளனர். ராஜாவின் நேர்முக உதவியாளர் காஞ்சிகுமார், வேல்முருகன், கார் டிரைவர் அசோக்குமார், தி.மு.க., மாவட்ட பிரதிநிதி செந்தில் முருகன் ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர்.



இவர்களுக்கு ஜாமீன் கேட்டு, பெருந்துறை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில், கடந்த 3ம் தேதி, மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நேற்று நடந்தது. காஞ்சிகுமார் தரப்பில் வக்கீல் திருமலை ஆஜரானார். அரசு தரப்பு வக்கீல் வராததால், விசாரணையை தள்ளி வைக்குமாறு சி.பி.சி.ஐ.டி., டி.எஸ்.பி., சாம்பசிவம் கேட்டுக் கொண்டார். இதையடுத்து, ஜாமீன் மனு மீதான விசாரணையை, வரும் 9ம் தேதிக்கு ஒத்தி வைத்து, பெருந்துறை குற்றவியல் நடுவர் நாராயணசாமி உத்தரவிட்டார்.

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


வாசகர் கருத்து
No Comments Found!
Post Your Comments for the Article

 

Your Name  :
Initial : Name :
Your Email Id :
Your city (or) location  :  
Your country  :  
Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)


மேலும் கோர்ட் செய்திகள்
  இ-பேப்பர்