India Supreme Court News, High Court News, Legal News, Crime News
இதை எனது முதல் பக்கமாக்கு
Get Font | Sitemap |   RSS Feed
கோர்ட் செய்திகள்  
மிரட்டல் நடிகை, நடிகர்கள் நவ.30ல் ஆஜராக உத்தரவு ஸ்ரீவி., கோர்ட் உத்தரவு
நவம்பர் 07,2009,00:00  IST

ஸ்ரீவில்லிபுத்தூர்: பத்திரிகையாளர்களை மிரட்டும் வகையில் பேசிய நடிகை, நடிகர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் நவ.,30ல் ஆஜராக மாஜிஸ்திரேட் ராஜ்குமார் உத்தரவிட்டார்.பத்திரிகையாளர் ஆர்.வி.ராமனாதன் தொடர்ந்த வழக்கில் நேற்று அவர் அளித்த வாக்கு மூலத்தில் கூறியிருப்பதாவது



,தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்க கூட்டத்தில் நடிகை ஸ்ரீபிரியா பேசுகையில்,"பத்திரிகையாளர்களை கேடு கெட்ட நல்ல தாய், தந்தைக்கு பிறக்காத ஈனப்பசங்க என்று மேடையிலேயே காறி துப்பினார். நடிகர் விஜயகுமார் பேசுகையில்," பத்திரிகை பிசினஸ் படுத்து விட்டால் அக்கா , தங்கைகளை விபச்சாரத்திற்கு அனுப்பட்டும். செய்தி கிடைத்ததும் நேராக பத்திரிக்கை அலுவலகத்திற்குள் புகுந்து நாலு பேரையாவது வெட்டணும்' என பேசியுள்ளார்.



சத்யராஜ் பேசுகையில்,"பத்திரிகையாளர்களின் கையை உடைக்கணும், கண்ணை நோண்டனும், உள்காயம் தெரியாமல் அடிக்கணும், ஸ்ரீபிரியாவுக்கு ஆதரவாக கையை உயர்த்த வேண்டும் அப்படி செய்தால் என்ன புடுங்குவான்' என பேசியுள்ளார். சூர்யா பேசுகையில்," நடிகையின் கால்களுக்கிடையில் உட்கார்ந்து போட்டோ எடுக்கும் ஈனப்பசங்க' என பேசியுள்ளார்.விஜய் அருண் பேசுகையில்,"பத்திரிகையில் எழுதினவனை இழுத்து வந்து மஞ்சுளா காலடியில் போட்டு மன்னிப்பு கேட்க வைப்பேன்.' என பேசியுள்ளார்.



சேரன் பேசுகையில்," ராஸ்கல் .. உங்க அக்கா,தங்கை ஓடிப்போனா தெரியும்டா வலி' என பேசியுள்ளார். விவேக் பேசுகையில்," ஒரு அப்பனுக்கு ஆத்தாவுக்கு பிறந்திருந்தா பெயரை போட்டு எழுது. ஒரு குவார்ட்டருக்கும், கோழிப்பிரியாணிக்கும் எழுதும் ஈனப்பசங்க. உங்க அக்கா, தங்கை, ஆத்தா படங்களை தாருங்கள் கிராபிக்ஸ் போட்டு ஜட்டி, பிரா போட்டு சென்னை முழுவதும் போஸ்டர் ஒட்டுவேன்' என பேசியுள்ளார். இவர்களது பேச்சுகள் கடந்த அக். 9ம் தேதி "விண்' டிவியில் வெளியானது.



இதை பார்த்த எனது நண்பர்கள் என்னிடம் விசாரித்தனர். இதனால் நான் மன வேதனையடைந்ததோடு எனது தொழிலுக்கு இழுக்கையும் புகழுக்கு களங்கத்தை ஏற்படுத்திய நடிகர்கள், நடிகை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.' என அதில் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக வக்கீல் ஏ.விஜயராஜன் வாதிட்டார்.இதை தொடர்ந்து மாஜிஸ்திரேட் ராஜ்குமார், மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய நடிகை, நடிகர்கள் வரும் 30ம் தேதி கோர்ட்டில் ஆஜராக உத்தரவிட்டார்.



 

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


வாசகர் கருத்து
 ஒரு சினிமா படம் ஓட வேண்டும், வெற்றி பெற வேண்டும் என்றால் அதற்கு பத்திரிக்கை ஆதரவும்,மக்கள் ஆதரவும் வேண்டும்.இரண்டு பேரையும் பகைத்துக் கொண்டார்கள் இந்த சினிமா காரர்கள்.பத்திரிக்கையில் ,விளம்பரம் வெளியாகி ,பிறகு அதை மக்கள் படம் பார்த்தல் தான் சினிமாக்காரர்கள் அத்தனை பேரும் பிழைக்க முடியும்.இப்படி எல்லாம் இருந்தும் நடிகர்,நடிகைகளின் பேட்சு,நடவடிக்கைகள் அத்து மீறி சென்றுள்ளது.காரணம் வெளி வுலகையும் இவர்கள் சினிமா என்றே நினைத்து கொண்டார்கள்.ஏதோ பொழுது போக்கிற்காக பார்க்கிறோம் என பொது மக்களும் ,பத்திரிக்கை வளர்சிக்காக விளம்பரம் செய்கிறோம் என பத்திரிக்கை காரர்களும் சமாதானம் சொல்லி கொள்ளலாம்.இதனை பயன் படுத்தி கொண்டு தான் நினைத்ததை எல்லாம் சகட்டு மேனிக்கு பேசி தள்ளி வுள்ளர்கள்.குடும்ப பெண்களை குறைவு படுத்தி பேசியுள்ளார்கள்.ஆனால் சினிமா என்ற பெயரில் இந்த நடிகன்,நடிகைகளின் அந்தரங்க விவகாரங்களை அலசி ஆராய முற்பட்டால் இவர்களின் வண்ட வாளங்கள் ரயில் தண்ட வாளங்களில் ஏறும் என்பது நிச்சயம்.ஆகவே திரை வுலகினர் பத்திரிக்கை தர்மம் ,மக்கள் தர்மம் அறிந்து செயல் பட கடமை பட்டுள்ளார்கள்.நீங்கள் மீறினால் நாங்களும் மீறுவோம்.எச்சரிக்கை.எச்சரிக்கை,எச்சரிக்கை.............  
by குடும்பஸ்தன்.மக்கள் நல விரும்பி,,abudahabi,uae.,India    11/8/2009 1:18:09 AM IST
 uselesse actore and actresses 
by r goviraja,qatar,India    11/8/2009 12:20:26 AM IST
 பத்திரிகைகள் இல்லன சினிமா இல்ல.cinema இல்லாம கலைஞர் இல்ல.கதை வசனம் எழுதியவர்க்கு இன்று சிம்மாசனம்.அவர்க்கு என் இனம் இலங்கைல சாவது தெரியாது ,கேட்காது.இந்த மாத்ரி விசயங்கள் எல்லாம் உடனே நடவடிக்கை எடுபார்.புகழ்தான் முக்கியம். 
by kumar mohan,chennai,India    11/7/2009 10:21:08 PM IST
 தேவை இல்லாத அசிங்கமான வார்த்தைகளை இவ்வளவு பப்ளிக்காக பேசியுள்ளார்கள் இவர்களை என்ன செய்யலாம் ?
இவர்களுக்கு சரியான பாடம் புகட்டவேண்டும் . 
by n srini,india,India    11/7/2009 9:22:59 PM IST
 இந்த பேச்சின் மூலம் தாங்கள் சாக்கடை என்று நடிகர்கள் நிருபித்துவிட்டார்கள் .மேடை போட்டு திட்டினவுங்கள சும்மா விடக்கூடாது.பத்திரிகையாளர் தங்கள் யார் என்று நிருபிக்க வேண்டும் .Also we should not watch their films and should never allow a actor to rule tamilnadu. 
by A Selva,Doha,Qatar    11/7/2009 9:11:10 PM IST
 citizen படத்தின் வசனத்தை இப்படி எழுதினால்!!!

விவேக்கின் கலைமாமணி விருது மட்டுமல்லாது அவருடன் ஒழுக்கம் தவறி பேசிய எல்லார் விருதும் சேர்த்து பறிக்கப்படவேண்டும். 
by தமிழன்,Bangalore,India    11/7/2009 7:51:40 PM IST
 very good good judgement 
by p ramesh,kalugumalai,India    11/7/2009 4:00:41 PM IST
 ஏணிப்படிகள் படத்துல, ‘பெட் ரூம்ல லைட் ஆஃப் ஆனாதான், செட்ல லைட் ஆன் ஆகும்”னு ஒரு சினிமாக்காரன் சொல்லுவான். அப்படின்னா... சினிமா உலகம் நடிகைகளை எப்படி வச்சிருக்கு? இதை சினிமா எடுத்து ஒத்துக்கிட்டவங்க, பத்திரிகைக்காரங்களுக்கு எதிரா பேச எந்த அருகதையுமில்ல. எதுக்கெடுத்தாலும். ‘நானும் பத்திரிகையாளர்தான்”னு பீத்திக்குவாரு கருணாநிதி. அப்படிப் பாத்தா நடிகர் நடிகைங்க அவரையும் சேத்துதான் திட்டியிருக்காங்க. 
by அ ஆரா,chennai,India    11/7/2009 3:59:43 PM IST
 i didnt expect from this vivek i thought he is very much litereted and brilliant person,but he has behave very cheap ,also in public they (actors) should not talk like this rather they could complient and govt will take action,yet they have spoile their image 
by viji viji,chenai,India    11/7/2009 2:33:54 PM IST
 இதுபோன்ற கீழ்த்தரமான பேச்சுக்களை விஜயகுமார், சத்யராஜ் போன்ற சீனியர் நடிகர்களிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. இனிமேலாவது திரைத்துறைக்கு தேவையில்லாத முக்கியத்துவம் அளிப்பதை நிறுத்த வேண்டும். 
by ஸ்வரூபா,turban,South Africa    11/7/2009 1:55:04 PM IST
  சூப்பர். வாழ்க,வளர்க சினிமா புகழ் ஹஹ்ஹ்ஹ்ஹா  
by Y.D Yousuf,Chennai,India    11/7/2009 1:15:58 PM IST
 நல்ல நியாயமான தீர்ப்பு பத்திரிக்கைக்கு கிடைக்கும் என நம்புகிறேன். (அரசியல் தலையீடு இல்லாமல் இருக்க வேண்டும்) 
by KS குண சேகரன் ,JIDALI,Bahrain    11/7/2009 12:55:26 PM IST
 திரையுலக நடிகர், நடிகைகள் வானத்திலிருந்து குதித்து வந்தவர்களா? அவர்களும் சக மனிதர்கள்தான். அவர்களை ஒரேயடியாக தூக்கி வைப்பது பத்திரிகை உலகம்தான். இவர்கள் எப்போதுமே கற்பனை உலகில் வாழ்பவர்கள். தங்களால்தான் இந்த உலகமே இயங்குவதாக நினைப்பு. இவர்களால் நான்கு பேருக்காவது நன்மை உண்டா?. இவர்களின் படங்களை கள்ளத்தனமாவது பார்த்து இரசிக்கும் இரசிகர்களுக்கு அவர்கள் செல்ல வேண்டிய நல்ல பாதையை காட்டி இருப்பார்களா?. பான்பராக் என்னும் போதை அரக்கனிடம் சிக்குண்டு அவதியுறும் இன்றைய இளைய தலைமுறைக்கு அவர்களால் கோடிகளில் புரண்டு மகிழும் எவராவது தவறு என்று சுட்டிக் காட்டியது உண்டா?. புகை மது தவறு, தாய் தங்கை பாசம் என்பதை எல்லாம் எம். ஜி. ஆர் படங்களில் போதித்தார். அதனால் அவர் காலத்து தலைமுறை இன்றும் நல்ல முறையில் வாழ்கிறது. தன்னை தூக்கி வைத்து ஆடும் இன்றைய தலைமுறைக்கு இவர்கள் என்னதான் செய்யப்போகிறார்கள்?. சிந்திப்பார்களா?.  
by K.M. சோழன் ,Chennai,India    11/7/2009 12:51:38 PM IST
 பத்திரிக்கை கரங்க சினிமக்காரனை பத்தி நியூஸ் போடவே தேவை இல்லை.அவனை பத்தி கிசு கிசு எழுதி அவனுங்களை எல்லாம் பெருசாக்கி விடுகிரிர்கள். சூர்யா 10 வருசத்துக்கு முன்னாடி ௦ஜிரோ.
 
by tamil தமிழன் aashik,dubai,United Arab Emirates    11/7/2009 12:05:55 PM IST
 நடிகர்களின் பேச்சு சரி இல்லை. தெரு சண்டை போல இருக்கு. இனிமேலே இவர்களை நம் திரையில் காணும் போது நமக்கு நல்ல அபிப்ராயமே ஏற்படாது. அவங்க யூஸ் பண்ற வார்த்தைகள் நாம் எதிர்பராதது . Actualy they dont know , how to keep their respect. Sarry SathiyaRaj sir,& Ceran your all so... .. 
by sam,Doha,Qatar    11/7/2009 11:49:12 AM IST
 சினிமாவில் நடித்து நடித்து சினிமா பாணியிலேயே ஆவேச, அநாகரீகமாக பேசி இருக்கும் இவர்களை தக்க முறையில் தண்டிக்க வேண்டும்.
 
by A Neem,chennai,India    11/7/2009 11:03:54 AM IST
 இவங்களுக்கு கொடுக்கப்படுற தண்டணை மிக கடுமையா இருக்கணும். இவங்களுக்கு எப்பவுமே ஒரு திமிர் மனசுல இருக்கு நாம எது சொன்னாலும் மக்கள் கேட்ப்பார்கள் நம்புவார்கள் என்ற எண்ணம். எல்லோருமே ரொம்ப திமிர் பிடிச்சவங்க இவங்களை அடக்கணும் இவங்க படங்களை யாரும் பார்க்க கூடாது.  
by v Balapriya,Cuddalore,India    11/7/2009 10:25:00 AM IST
 CHIEF MINISTER USED HIS POWER AGAINST JOURNALISTS, FORCED AND PRESSURED BY CINEMA ACTORS & ACTRESS. BECAUSE, AS HE IS DOING AS CINEMA SCRIPTER AND STILL HE IS DOING THE SAME, WHEN HE GET THE TIME APART FROM POLITICAL. SO, HE DID FAVOUR FOR HIS PROFESSIONA AND PROFESSIONALMADE AND COLLEGUES. IF HE GENUINE CM, HE MUST HAVE ACTION AGAINST FEW ACTOR & ACTRESS. BUT HE DID NOT DO LIKE. FROM THIS HE IS NOT GENUINE CM IN INDIAN POLITICAL HISTORY. 
by k tamilan,dubai,India    11/7/2009 10:24:36 AM IST
 
குப்பையை கிழறினால் நாற்றம் வரும்
உண்மையை எழுதினால் கோபம் வரும்
 
by m kalidasan,pvi,India    11/7/2009 10:13:59 AM IST
 நடிகர், நடிகைகள் ஒன்றும் கடவுள் இல்லை. அவதுறாக பேசியவர்களை சட்டம் உரிய முறையில் காலம் தாழ்த்தாமல் தண்டனை வழங்கவேண்டும். அதுவே நிரபராதிகளுக்கு சட்டம் வழங்கும் நீதி.  
by M Karthik,kerala,India    11/7/2009 9:18:50 AM IST
 இவர்களை தமிழ்நாடு முழுவதும் அலையவிட வேண்டும்.அப்போதாவது புத்தி வரு தா பாப்போம். கூத்தாடிகளுக்கு இது பெரியதண்டனையாக இருக்காது.எனவே பத்திரிகைகள் இவர்களை பிரபலபடுத்துவதை முழுவதும் நிறுத்தவேண்டும். அட்டை படங்களில் இவர்கள் போட்டோகளை போடகூடாது.நன்றி 
by c ஜெகன்,nagercoil,India    11/7/2009 8:27:51 AM IST
 காலுக்கு அடியில இருந்து எடுத்த போட்டோவால தான் நீங்க கார், பங்களா என்று வாழுறீங்க. இந்த சமுதாயத்த சீர் கெடுததில உங்கள விட யாருக்கு சார் பங்கு அதிகம்? பத்திரிக்கையால வந்த பப்ளிசிட்டி பிடிக்குமாம் ஆனா பத்திரிக்கை காரங்கள புடிக்காதாம்.
உங்கள சொல்லி பிரயோஜனம் இல்ல, இந்த மக்கள் தான் திருந்தனும்.  
by R Sethu,Chennai,India    11/7/2009 7:56:14 AM IST
 நடிகன் என்றால் எது வேண்டுமானாலும் பேசலாமா? கலைஞர் அப்பப்போ விருது விழா எடுத்தால் எது வேனாலும் செய்யலாமா? கலைஞர் seivadhu sariyillai  
by T PIKKU,Doha,Qatar    11/7/2009 6:08:46 AM IST
 திரையுலக நடிகர்களும் நடிகைகளும் ஸ்ரீ ராமருமில்லை, கண்ணகியுமில்லை. இவர்களுக்கு மானம் இருந்தால் தானே போவதற்கு. இவர்கள் புகார் கொடுத்தவுடன் மின்னல் வேகத்தில் செயல்பட்ட முதலமைச்சர், ஒரு சாராரை மகிழ்விக்கவே தமது அதிகாரத்தை பயன்படுத்தியுள்ளார் என சந்தேகப்படுகிறேன்.  
by M தங்கம்.முருகேசன் ,Erode,India    11/7/2009 6:01:42 AM IST
 எல்லா நடிகர் நடிகைகளும் உரிய முறையால் தண்டிக்கப்படனும் 
by r sasi,gurgaon,India    11/7/2009 2:19:26 AM IST
Post Your Comments for the Article

 

Your Name  :
Initial : Name :
Your Email Id :
Your city (or) location  :  
Your country  :  
Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)


மேலும் கோர்ட் செய்திகள்
  இ-பேப்பர்