மதுரை: காரைக்குடியை சேர்ந்த கண்ணன், மதுரை ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு: புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அரசு மாணவர் விடுதியில் வார்டனாக வேலை பார்த்து 1999 ல் ஓய்வு பெற்றேன்.
நான் பணியில் இருந்த காலத்தில் அரசு அனுமதித்த தொகையை விட கூடுதலாக செலவு செய்ததாக கூறி, புதுக்கோட்டை மாவட்ட தனி தாசில்தார் 25,895 ரூபாயை செலுத்தும்படி 14-11-2005ல் உத்தரவிட்டார். பின், எனது சம்பளத்தில் இருந்து 24 ஆயிரம் ரூபாய் பிடித்தம் செய்தார். தனி தாசில்தார் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கோரியிருந்தார். மனுதாரர் சார்பில் வக்கீல் விஸ்வலிங்கம் ஆஜரானார். இம்மனு, நீதிபதி எஸ். நாகமுத்து முன் விசாரணைக்கு வந்தது. ஓய்வு பெற்று ஆறு ஆண்டுக்கு பின், சம்பள பாக்கியை பிடித்தம் செய்தது பென்ஷன் விதிகளுக்கு எதிரானது. தனித்தாசில்தார் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. பிடித்தம் செய்த தொகையை மனுதாரருக்கு வழங்க உத்தரவிட்டார்.
| வாசகர் கருத்து |