காங்கிரஸ் புத்துயிர் பெறுகிறதா?

கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறறுள்ளது. மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசு பல்வேறு பிரச்னைகளைச் சந்தித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்த ‌வெற்றிச் செய்தி வந்துள்ளது. இதை காங்கிரசின் செல்வாக்கு புத்துயிர் பெற்றுள்ளதாக எடுத்துக் கொள்வதா? பா.ஜ.,வின் உட்பூசல் காரணமா?

ஆம் (14%)

பா.ஜ.,வே காரணம் (86%)

Advertisement
ஆம் (7 Comments)
 1. Pugazh V

  Pugazh V


  Coimbatore / Cochin,இந்தியா


  11-மே-2013 21:14:11 IST

  பி ஜே பி கட்சியிடம், நாட்டை வளமாக்கும் திட்டங்கள் எதுவும் இருப்பதாக இன்று வரை அவர்களால் சொல்லவே முடியவில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வோம் என்று எந்த தலைவரும் பேசுவதே இல்லை. ஊழல் மலிந்துவிட்ட விஷயம் அனைவரும் அறிந்த ஒன்றே. அரைத்த மாவையே அரைப்பதால் பலனில்லை. மேலும் மக்களவையில் வலுவான வாதங்கள் செய்வதற்குப் பதில் அமளிகள் மட்டுமே செய்வதால் மக்கள் கடுப்பாகி இருக்கிறார்கள்.

  1. Rate this:
  2. Share
 2. sheik

  sheik


  dubai,ஐக்கிய அரபு நாடுகள்


  11-மே-2013 17:40:01 IST

  காங்கிரசுக்கு நல்லது, பிஜேபி கு மறுபடியும் சாவு மணி

  1. Rate this:
  2. Share
 3. RAVINDREN

  RAVINDREN


  Thoothukudi,இந்தியா


  11-மே-2013 14:54:47 IST

  ஏதோ எடியுரப்பவால் தான் காங்கிரஸ் வென்றுள்ளதாக சில அதிமேதாவிகள் கருத்து சொல்கிறார்கள். உண்மை என்னவென்றால், கர்நாடகாவில் கடந்த முறையும் காங்கிரஸ் கட்சிதான் பாஜகவை விட அதிக ஓட்டுகள்(1.5% ) பெற்றது. தேவகவுட கட்சி ஓட்டை பிரித்ததால்தான், கடந்தமுறை காங்கிரஸ் ஆட்சியை பிடிக்க முடியவில்லை. இந்தமுறை எடியுரப்பா மற்றும் பாஜக ஓட்டுகளை கூட்டினாலும் போனமுறை அவர்கள் வாங்கிய மொத்த ஓட்டுகளை விட குறைவு. அதேசமயம் காங்கிரஸின் ஓட்டு சதவீதம் உயர்ந்துள்ளது. இதே நிலை 2014 நாடாளுமன்ற தேர்தலிலும் எதிரொழிகும் என்பது திண்ணம்.

  1. Rate this:
  2. Share
 4. Mahendran Puru

  Mahendran Puru


  Madurai,இந்தியா


  11-மே-2013 08:39:25 IST

  ம.பி யிலும் பா.ஜ.க ஆட்சி இழக்கும். இதுவரை 18 மந்திரிகள் லோக் ஆயுக்தாவின் நடவடிக்கையால் பதவி இழந்துள்ளார்கள். சுமார் 200 MLA களுக்கு எதிரான அலை வீசுவதாக முதல்வரே கவலையில் இருக்கிறார்.

  1. Rate this:
  2. Share
 5. rathinam ramakrishnan

  rathinam ramakrishnan


  Singapore,சிங்கப்பூர்


  09-மே-2013 05:08:43 IST

  பாஜ வின் ஊழல் தான் முக்கிய காரணம். காங்கிரீஸ் வளர்ச்சி கண்டுள்ளது என்பது உண்மை.

  1. Rate this:
  2. Share
 6. Hasan Abdullah

  Hasan Abdullah


  Jeddah,சவுதி அரேபியா


  08-மே-2013 18:48:25 IST

  இந்தியாவில் ஆட்சி அமைக்க காங்கிரஸ்-யை தவிர வேறு கட்சிகளுக்கு தகுதி இல்லை, காங்கிரஸ்-யை மத்திய ஆட்சியில் அமர்த்தவே பாஜகவில் பலர் வரிந்து கட்டி செயல்படுகின்றனர். 2004 தேர்தலின் பிரசாரத்தில் இறுதி பகுதியில் சில பிஜேபி அமைச்சர்களே, எங்களுக்கு ஓட்டளிக்காவிட்டாலும் பரவாயில்லை, கமுனிஸ்ட்க்கு வாக்களிக்காதீர்கள், அதற்க்கு பதிலாக காங்கிரஸ்கேனும் வாக்களியுங்கள் என்று சொன்னார்கள். அது தான் இப்போதும் நடக்க போகிறது. இன்னொரு முறை பிஜேபி யை ஆட்சி கட்டிலில் வைக்க மக்கள் தயாராக இருந்தாலும், மாநில கட்சிகளின் தலைமைகள் தயாராக இல்லை. இந்த மாநில கட்சிகள் இல்லாமல் இனி யாரும் மத்தியில் ஆட்சி அமைக்க முடியாது. ஆக தேர்தலில் காங்கிரஸ் குறைந்த இடங்களை பெற்றாலும், தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி மூலம், காங்கிரஸ் மீண்டும் ஆட்சி கட்டிலில் அமரும். அதற்கு கர்நாடக தேர்தல் ஒரு முன்னோடி.

  1. Rate this:
  2. Share
 7. n.sivanandam

  n.sivanandam


  Coimbatore,இந்தியா


  08-மே-2013 17:18:18 IST

  ஊழல் செய்பவர்களை கண்டிப்பாக மக்கள் தண்டிப்பார்கள் என்பது இதிலிருந்து உறுதியடைந்துள்ளது. மாநில அளவில் காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்தாலும் இந்திய அளவில் அதற்கு தண்டனையைத்தர மக்கள் காத்திருக்கிறார்கள்.

  1. Rate this:
  2. Share
பா.ஜ.,வே காரணம் (40 Comments)
 1. g.s,rajan

  g.s,rajan


  chennai ,இந்தியா


  11-மே-2013 23:03:53 IST

  யானை தன் தலையில் மண்ணை வாரி போட்டுக்கொண்டது போல எடியுரப்பா ஒட்டைப்பிரித்து மாபெரும் ஊழல் கட்சியான அனைத்து இந்திய இந்திரா காங்கிரஸ் கட்சி வெற்றி பெற எளிதாக வழி செய்து கொடுத்து விட்டார். இதற்கு ஏதும் கையூட்டு அவர் பெற்று இருந்தாலும் ஒன்றும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை .

  1. Rate this:
  2. Share
 2. Advertisement
 3. thirumalai

  thirumalai


  singapore,சிங்கப்பூர்


  11-மே-2013 20:37:52 IST

  பா.ஜ செய்த ஊழல் முக்கிய காரனம். இதுபோல் மத்தியல் காங்கிரசின் ஊழலுக்கு வரும் நாடாளும் மன்றம் பதில் சொல்லும்

  1. Rate this:
  2. Share
 4. Vel Murugan

  Vel Murugan


  Chennai,இந்தியா


  11-மே-2013 19:15:50 IST

  பிஜேபி எடியுரப்ப விஷயத்தை சரியாக கையாளவில்லை.அதனால் வந்த முடிவு தான் இது.

  1. Rate this:
  2. Share
 5. Stavdn

  Stavdn


  Tirunelveli,இந்தியா


  11-மே-2013 17:06:43 IST

  வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்பதைப்போல் பாஜக தேய்வதால் காங். வளர்வதைப்போல் தோன்றுகிறது.

  1. Rate this:
  2. Share
 6. Madabhooshi Rajan

  Madabhooshi Rajan


  Chennai,இந்தியா


  11-மே-2013 15:22:34 IST

  முந்தைய சட்டமன்ற தேர்தலில் பெற்ற அதே வாக்கு சதவீதம் இந்த தேர்தலில் காங் பெற்றுள்ளது. பிஜேபி யின் பிளவு மற்றும் ஊழல் நிர்வாகம் காரணமாக காங் இந்த முறை வெற்றி பெற்றுள்ளது. ஆனால் இதே நிலை பாராளுமன்ற தேர்தலில் ஒலிக்குமா என்பது சந்தேகமே.

  1. Rate this:
  2. Share
 7. sharavana

  sharavana


  Hosur,இந்தியா


  11-மே-2013 14:49:09 IST

  வெறும் வார்த்தை ஜாலங்களை வைத்து அரசியல் செய்தால் இப்படித்தான் நடக்கும். காங்கரஸ் பலம் பலவீனம் இரண்டும் அவர்களுக்குள் பரிசோதனை முயற்சியாக அமைந்து விடுகிறது. ஆனால் பாஜக அதை கண்டு ஏமார்ந்து விடுகிறது.

  1. Rate this:
  2. Share
 8. PR Makudeswaran

  PR Makudeswaran


  madras,இந்தியா


  11-மே-2013 13:13:40 IST

  பா ஜ க மட்டுமல்ல காரணம் உருப்படாத இந்திய எதிர்க்கட்சிகளால் லஞ்ச இயக்கம் மீண்டும் தலையை தூக்குகிறது.

  1. Rate this:
  2. Share
 9. SIVA

  SIVA


  TIRUNELVELI,இந்தியா


  11-மே-2013 12:12:59 IST

  congress இன் கடைசி வெற்றி இதுவே...

  1. Rate this:
  2. Share
 10. SIVA

  SIVA


  TIRUNELVELI,இந்தியா


  11-மே-2013 12:08:18 IST

  Light is very brightness while before fuse out...

  1. Rate this:
  2. Share
 11. Karuvi Bala

  Karuvi Bala


  Karuvi,இந்தியா


  11-மே-2013 07:55:37 IST

  பலம் பொருந்தியவர்கள் தங்களுக்குள் சண்டையிட்டு கொண்டால் பலமற்றவர்கள் எவ்வித பாதிப்பும் அறிவதில்லை, குஜராத்தில் மோடி என்ற வளர்ச்சி நாயகனை மக்கள் புறக்கணிக்க வில்லை. ஆனால் அந்த வளர்ச்சியை இந்திய அளவில் விஸ்தரிக்க காங்கிரசின் மதவாத ஆயுதத்தை மக்கள் புறக்கணிக்க வேண்டும், பாரதிய ஜனதாவில் உள்ள மிகப்பெரும் அறிவாளிகள் கூட்டம் தங்களுக்குள் சண்டையிட்டால் எப்படி வெற்றி கிட்டும், இப்போதுள்ள நிலையில் காங்கிரசில் மன்மோகன், பிரணாப், சிதம்பரம் கபில் சிபல் அந்தோணி ஆகியோரை தவிர்த்து திறமையுள்ள அமைச்சர்களை காட்டுங்கள் பார்க்கலாம் உலகின் மிகப்பெரிய விவசாய நாட்டின் உரத்துறை அமைச்சர் ஆங்கிலம் தெரியாமல் பாராளுமன்றத்தை புறக்கணிக்கிறார் என்றால் காங்கிரசின் கையாலாகாத தனத்தை பாருங்கள், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி சரளமாக தெரியக்கூடிய நிறைய பேரை காங்கிரஸ் கவர்னர் என்ற பொம்மையாக்கி வைத்துள்ளது ஒருவேளை மீண்டும் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் மக்கள் பாரதிய ஜனதாவை புறக்கணித்தால் நாட்டின் வளர்ச்சி மட்டும் கேள்விக்குரியல்ல பாதுகாப்பும்தான் ஏன் எனில் பலமான சிந்தனையுள்ள பிஜேபியை விட பலவீனமான காங்கிரசை தான் அண்டை நாடுகள் விரும்புகின்றன

  1. Rate this:
  2. Share