கச்சத்தீவை மத்திய அரசு கை கழுவுவது சரியா?

ராமேஸ்வரத்திலிருந்து, 11 கடல் மைல் தூரத்திலும், இலங்கையின் தலைமன்னாரிலிருந்து, 18 கடல் மைல் தூரத்திலும் கச்சத் தீவு உள்ளது. இந்தியாவுக்கு சொந்தமான இத்தீவை, இலங்கைக்கு, இந்தியா தாரை வார்த்தது. இருந்தாலும், தமிழக மீனவர்கள், இப்பகுதிக்கு செல்லவும், மீன் பிடிக்கவும் உரிமை அளிக்கப்பட்டது. ஆனால், இந்த உரிமையை இலங்கை தொடர்ந்து மறுக்கிறது. கச்சத் தீவு பகுதிக்கு செல்லும் மீனவர்களை, சுட்டுக் கொல்வதும், அடித்து விரட்டுவதுமாக, இலங்கை கடற்படை அத்துமீறுகிறது. சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளுடன் இலங்கை கைகோர்த்திருப்பது, இந்திய கடல் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என, எச்சரிக்கப்படுகிறது. இந்நிலையில், கச்சத் தீவை மீட்க, தமிழக அரசும், தி.மு.க.,வும் வழக்கு தொடர்ந்துள்ளன. இந்த வழக்கில், பதில் மனு தாக்கல் செய்த மத்திய அரசு, கச்சத் தீவு இந்தியாவுக்கு சொந்தமில்லாத பகுதி என, கூறியுள்ளது. மத்திய அரசின் பதில், தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

சரிதான் (5%)

சரியில்லை (95%)

Advertisement
சரிதான் (3 Comments)
 1. Kesavan Subramaniam

  Kesavan Subramaniam


  Chennai,இந்தியா


  11-செப்-2013 07:58:14 IST

  இது நம் தமிழக அரசு, இலங்கைக்கு தானமாக கொடுத்தது, இப்ப மத்திய அரசு என்ன செய்யும். கலைஞர் முதல்வராக இருந்த போது நடந்ததுதான். அப்போது நாமே கொடுத்து விட்டு இப்போ இன்னொருவரை குற்றம் சொல்வது தான் அரசியலோ. ஒன்னும் புரியல. எத்தனை பிரச்னை இருக்கு அத விட்டுவிட்டு இந்த பேச்சு வெட்டி பேச்சு தான்.

  1. Rate this:
  2. Share
 2. Prabhakaran Shenoy

  Prabhakaran Shenoy


  CHENNAI,இந்தியா


  10-செப்-2013 06:58:23 IST

  கச்ச தீவு இருக்கட்டும் சீனாவின் ஆக்கிரமிப்பை என்ன செய்யபோகிறீர்கள்.?

  1. Rate this:
  2. Share
 3. murugan

  murugan


  thoothukudi,இந்தியா


  09-செப்-2013 20:27:50 IST

  இந்த நிமிடம் முதல் வரப்போகும் நிமிடம் நமக்கு சொந்தம் இல்லை. தானம் தரப்பட்டதை திரும்ப கேட்பது தமிழனுக்கு அழகில்லை. வரப்போவதை முன்கூட்டியே அறிய கூடிய திறன் இல்லாத தலைவர்கள் தாரை வார்த்தை திரும்ப கேட்பது வழியில் போகிற ஓணானை எடுத்து வேட்டிக்குள் விட்ட பின் குத்துதே குடையுதே என்பதுதான் நினைவுக்கு வருகிறது. நமது அரசாங்கம் ஏராளமான பணத்தை ராணுவத்திற்கு செலவிடுகிறது. நமது அரசாங்கத்தின் மேல் நம்பிக்கை வையுங்கள். அவர்கள் சீனா மற்றும் பாகிஸ்தானை விரட்டி அடிப்பார்கள். .

  1. Rate this:
  2. Share
சரியில்லை (68 Comments)
 1. m n thanumurthy

  m n thanumurthy


  nagercoil,இந்தியா


  20-செப்-2013 20:27:06 IST

  மத்திய அரசு, கச்சத் தீவினை இந்திய பகுதி இல்லை என கூற வேண்டிய சூழல் ஏற்கனவே தாரைவார்க்கப் பட்டதால் வந்த விளைவாக இருந்தாலும் கூட சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் உரசி நட்பு கோர்க்கும் நிலையில் உள்ள ஸ்ரீலங்கா தனது நாட்டின் தமிழ் பகுதிகளை எல்லாம் ஓரளவிற்கு காவு கொண்ட பழியுடன், தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை அடிக்கடி தாக்குதல் உடன் குறு யுத்தம் நடத்தும் இலங்கைக்கு கட்டாயம் முக்கியத்துவம் வழங்கி பேச்சு வார்த்தை நடத்தி முடிவு காணப்பட வேண்டும் ...இருந்தும் மத்திய அரசு போதிய அளவிற்கு உடனடி முக்கியத்துவம் வழங்காதது ஏன்? என தமிழக மக்களை யோசிக்கத்தான் வைக்கிறது ....................

  1. Rate this:
  2. Share
 2. Advertisement
 3. vasudevanmuthukrishnan

  vasudevanmuthukrishnan


  chennai,இந்தியா


  12-செப்-2013 21:21:20 IST

  சொந்த நாட்டில் அனாதைகளை போல நமது மீனவர்களை ஆக்கும் செயல் இது புரட்சி தலைவி அம்மா தான் இதற்கு முடிவு கட்டவேண்டும் அவரால் மட்டுமே முடியும்

  1. Rate this:
  2. Share
 4. NAGARAJ

  NAGARAJ


  namakkal,இந்தியா


  12-செப்-2013 21:02:57 IST

  தனக்கு மிஞ்சி தான் தானம்.கச்சத்தீவு நம் உடமை அதை மீட்பது நம் கடமை

  1. Rate this:
  2. Share
 5. VenkatR

  VenkatR


  Coimbatore,இந்தியா


  12-செப்-2013 20:37:40 IST

  கச்சத்தீவை மீட்கவும்,தமிழக மீனவர்களின் பிரச்சினை தீரவும் எல்லா அரசியல் கட்சிகளும் ஒற்றுமையாகவும் , ஆக்கபூர்வமாகவும் செயல்படவேண்டும். ஊர் ரெண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்.

  1. Rate this:
  2. Share
 6. saravanan

  saravanan


  Dindigul,இந்தியா


  12-செப்-2013 20:35:18 IST

  நம் நாட்டுடன் நட்புறவை புறம் தள்ளும் இலங்கைக்கு கட்ச தீவை அனுபவிக்க விடக்கூடாது

  1. Rate this:
  2. Share
 7. paavapattajanam

  paavapattajanam


  chennai,இந்தியா


  12-செப்-2013 20:33:46 IST

  காங்கிரஸ் காரர்கள் விட்டால் நம்மையே இத்தாலிக்கு விற்கபோகிறார்கள் - தரங்கெட்ட அரசியல் கொலைகாரர்கள். ஒழிக. கட்சிதீவை மீட்டி தருக.

  1. Rate this:
  2. Share
 8. Rathinasami Kittapa

  Rathinasami Kittapa


  Ambur,இந்தியா


  12-செப்-2013 20:21:37 IST

  இரண்டாம் உலகப் போரின்போது இங்கிலாந்துப் படை இத்தாலியின் கரையை நெருங்கியபோது உறங்கிக் கொண்டிருந்த ஹிட்லரை எழுப்பி எதிர் தாக்குதல் நடத்த அனுமதிக்காகக் காத்திருந்தனாறாம் நாஜிப் படையினர்.ஹிட்லர் எழும் முன்னரே உள்ளே நுழைந்துவிட்டனர் எதிரிப் படையினர்.அது போல நமது அரசு அனுமதி கொடுத்தால் தானே பாக்,சீனா மீது தாக்குவார்கள் நம் படைவீரர்கள்.அதுதானே இந்திய சட்டம். இந்திய அரசு எப்போது விழித்தெழுவது ?

  1. Rate this:
  2. Share
 9. Siva Velummylum

  Siva Velummylum


  Toronto,கனடா


  12-செப்-2013 19:56:43 IST

  இது தமிழ்நாட்டின் பாதுகாப்பு பத்தி சிந்திக்க பட வேண்டிய விஷயம். மத்திய அரசாங்கம் பின்பக்கமாக தமிழ்நாட்டை, ஸ்ரிலங்கவிட்கு விற்க பார்கிறது. மத்திய அரசாங்கம் தமிழ்நாட்டை ஒருமித்த இந்தியாவிற்குள் வைதிருந்து அளவேண்டுமைன், தமிழ்நாட்டை பதுககவேண்டும். இல்லாவிட்டால் தமிழ்நாட்டின் வருங்கால சந்ததியின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு, தமிழ்நாடு இந்தியாவில் இருந்து பிரிந்து போக வேண்டும்.

  1. Rate this:
  2. Share
 10. VEZHAVENDHAN.Ka

  VEZHAVENDHAN.Ka


  Pudukkottai,இந்தியா


  12-செப்-2013 19:01:44 IST

  கச்சத்தீவு நமது பாரம்பரிய சொத்து மட்டுமல்ல:நாட்டின் பாதுகாப்புக்கு மிகவும் இன்றியமையாத இடமும் கூட.எனவே இதனைக் கைகழுவுவது ஏமாளித்தனம் என்பதுடன் முட்டாள்தனமும் ஆகும்

  1. Rate this:
  2. Share
 11. JPMSRI

  JPMSRI


  Bangalore,இந்தியா


  12-செப்-2013 18:01:21 IST

  சரிதான் என்று தேர்வு செய்தவர்கள் நம் நாட்டில் தமிழனுக்கு எதிராக திரிந்து கொண்டிருகிறார்கள். இவர்களை போன்று அயல் நாட்டவர்களை ஆதரிப்பவர்களை நாட்டை விட்டு துரத்த வேண்டும்.

  1. Rate this:
  2. Share