12.இதுதாங்க, சிவகாசி ஸ்டைல்!
( முருகராஜ்)
ஆயிரம் வாலா, 10 ஆயிரம் வாலா. 20 ஆயிரம் வாலா
என நீள, நீளமான சரவெடிகளை தெரு முழுவதும் விரித்து
அதன் திரியில் தீ வைத்து பட, படவென, பல நிமிடம்,
கேட்பவர் காது கிழிய வெடிக்கும் சர வெடிக்கு "பைபை'
சொல்லி விட்டு, அமைதி யாய் அழகு காட்டும் வெடிகளை
இந்த முறை அறிமுகம் செய்துள்ளது சிவகாசி.
சரவெடிகள் தயார் செய் வது பெரும்பாலும் பெண் கள்
தான், அவர்கள் தான் பூ கோர்ப்பது போல அழகாக
சரவெடிகளை பின்னி, பின்னி உருவாக்குவர், ஆனால்,
ஆபத்தில்லாத வேறு வகை தொழில்களால் இதைவிட அதிகம்
சம் பாதிக்க முடிகிறது |
|
|
|
இப்படி பெண்
ஊழியர் பற்றாக்குறை காரணமாக வும்,
சப்தம் என்றாலே அலர்ஜி என எண்ணு
வதாலும் பெரும்பாலான பட்டாசு தயாரிப்பு
நிறு வனங்கள் இந்த வருடம் தரையில்
துவங்கி, வானம் வரை வண்ண, வண்ண
வானவேடிக்கைகள் காட்டும் வெடிகளை அறி
முகம் செய்துள்ள னர். அவற்றில் கொஞ்சம்
சாம்பிள் பார்ப்போமா:
ஒ... கொல்கத்தா: பெரிய பரிசுப் பெட்டி
போன்ற தோற் றம் கொண்டு இருந்தா லும்
இது ஒரே வெடி தான். வீட்டின் வாசலில்
வைத்து கொளுத்தினால் போதும், தொடர்ந்து
500 வினாடிகளுக்கு வித, விதமான
வண்ணத்தில் வான வேடிக்கை காட் டும்,
துளிக் கூட சப்தம் எந்த இடத்திலும்
இருக் காது. வடமாநிலங்களில் இது
மாதிரித்தான் வேண் டும் என்று கேட்டதன்
பேரில் இந்த பட்டாசை அறிமுகம்
செய்துள்ளனர்.
என் பதால் பெண் ஊழியர்கள்
அந்த பக்கம் சாய்ந்து விட்டனர். |
பனோரமா:
இதுவும் கிட்டத்தட்ட ஒ... கொல்கத்தா
போன்ற ரகம் தான். ஆனால், நம்மூர்
மக்களுக்கு கொஞ்சமாவது சப்தம்
இருந்தால் தான் சந்தோஷம் வரும்
என்பதால் வானத்தில் போனதும் லேசாய்
வெடித்து, பின் வண்ண மத்தாப்பூக்களை
கொட் டும். தொடர்ந்து 500 வினாடிகள்
பல வித வண்ணங்களில் வான வேடிக்கை
வெடித்து காட்டும் இந்த ரகம் தமிழ்
நாட்டுக்காரர்களுக்காம். |
|
|
|
பார்ட்டி
பேப்பர்: பிறந்தநாளின் போது கேக்
வெட்டும் குழந்தை கள் மீதும், திருமண
விழா வில் திருமணம் செய்யும் ஜோடிகள்
மீதும் வண்ண, வண்ண காகித மழை பொழியும்
பார்ட்டி பட்டாசை தயாரிப்பதில்
சீனர்கள் கெட்டிக்காரர் கள். இந்த
மாதிரி பட்டாசை முதலில் திரி வைத்து
வெடித்தனர், பிறகு, அடியில் தொங் கும்
நூலை இழுத்து வெடித்தனர். இப்போது,
இன்னும் இதில் கூடுதல் கவனம் செலுத்தி
லேசாய் திருகினால் போதும், "டப்' என்ற
சப்தத்துடன் வெடித்து விழா நாயகர்கள்
மீது வண்ண காகிதங்களை நெளிவு, நெளிவாக
கொட்டும். இந்த சீன தொழில்நுட்பத்
துடன் தயாரிக்கப்பட்ட பார்ட்டி பட்டாசு
இப் போது தீபாவளிக்கும் நன்றாக
விற்கிறது. தீபாவளி அன்று வீட் டிற்கு
உள்ளேயே வீட்டில் உள்ள பெரியவர்கள்
மீது விடலாமே என்பதால் மற்ற பட்டாசு
ரகங் களுடன் இந்த பட்டாசை யும்
சேர்த்து வாங்கிக் கொள்கின்றனர். |
டூ-இன்-ஒன்:
பல காலமாக பட்டா சில் எந்த
வித்தியாசமும் இல்லை என்று சலித்துக்
கொள்பவர்களுக்காக சில
வித்தியாசங்களுடன் சில பட்டாசுகள்
அறிமுகமாகியுள்ளது. தரையில் சுற்றும்
சங்கு சக்கரத்தையும், புஸ்வானத்தையும்
இணைத்து டூ-இன்-ஒன் என்று அறிமுகம்
செய்துள்ளனர். இதனை கொளுத்தியதும் தீயை
கக்கியபடி சக்கரமும் சுழலும்,
புஸ்வானமும் கொட்டும்
இதே போல வீட்டு டைனிங் டேபிளில் வைத்து
கொளுத்தக் கூடிய மினியேச்சர் புஸ்
வானம், கார்ட்டூன் வெடி கள்,
விசிலடித்த படி சுழலும் சக்கரம்
போன்றவை களுடன் வழக்கமாக உங் களை
கவரும் விதம், விதமான வெடிகளும் கூட
உண்டு. வாங்கி கொளுத்தி தீபாவளியின்
சந்தோஷத்தை அதிகமாக்கி கொள்ளுங்கள். |
|
|