Home இதை எனது முதல் பக்கமாக்கு | வணக்கம்...வணக்கம்... யூ.எஸ்.ஏ தினமலர் வாசகரே ..! Get FontSite Map |

தினமலர்

16.சமையல்



கலர் ரசகுல்லா!: ரசகுல்லா செய்யத் தெரியுமா? கலர், கலர் ரசகுல்லா செய்யத் தெரியுமா? இதோ உங்களுக்காக:

மாங்காய், ஆரஞ்சு, திராட்சை, ஏலுமிச்சை ரசகுல்லா:

தேவையான பொருட்கள்: தனித்தனி சுவை, ருசிக்குத் தனித் தனியாக ஒரு லிட்டர் பால், 150 கிராம் பொடித்த சர்க்கரை, அரை கிலோ சர்க்கரை, மாங்காய், திராட்சை, ஆரஞ்சு, எலுமிச்சை ஆகிய சுவை கொண்ட எசன்ஸ்கள், மற்றும் தேவையான கலர். (பெரிய கடைகளில் கிடைக்கும்).
 

செய்முறை: சூடான பாலில் சிறிதளவு எலுமிச்சை சாறு பிழிந்து, பாலைத் திரிய வைக்கவும்.

அதை, சுத்தமான, மெல்லிய துணியில் கட்டி, தண்ணீரை வடிய விடவும். திரிந்த பகுதியைத் திரட்டி வேறு பாத்திரத்தில் போட்டு, பொடித்த சர்க்கரை, எசன்ஸ் ஆகியவற்றை கலந்து, கையால் நன்கு பிசையவும். இந்தக் கலவை நன்கு மிருதுவாகும் வரை பிசைய வேண்டும். பிறகு, சிறு உருண்டை களாக உருட்டி கொள்ளவும். வேறு ஒரு பாத்திரத்தில் சர்க்கரையைப் போட்டு, பாகு காய்ச்சவும். சர்க்கரை நன்கு கரைந்து, ஐந்து நிமிடம் கொதித்ததும் அதில் இந்த உருண்டைகளைப் போட்டு மேலும் ஐந்து நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும். சூடான, கலர், கலரான ரசகுல்லா ரெடி!

குறிப்பு: ஒவ்வொரு சுவைக்கான ரசகுல்லாவுக்கு, தனித் தனியாக எசன்ஸ் கலந்து உருண்டை செய்ய வேண்டும். சர்க்கரை பாகு காய்ச்சும் போதும் அதே சுவை கொண்ட எசன்சையும் பாகில் சிறிது ஊற்ற வேண்டும்.!

கடலை பருப்பு சந்தேஷ்!: தேவையான பொருட்கள்: கால் கிலோ கடலை பருப்பு, 25 கிராம் மில்க் மெய்ட், இளம் தேங்காய் விழுது சிறிதளவு, 100 கிராம் பொடித்த சர்க்கரை, ஒரு கரண்டி புளித்த தயிர், நெய் 2 சேர்க்கவும் 100 மி.லி., இளநீர்.

செய்முறை: கடலைப் பருப்பை வேக வைத்து மசித்துக் கொள்ளவும். இதில், மில்க் மெய்ட், தேங் காய் விழுது, நெய், தயிர், இளநீர் ஆகியவற்றைப் போட்டு நன்கு கலக்கவும். இதில், தேவைப் பட்டால் உங்கள் விருப்பத்திற்கேற்ற எசன்ஸ் ஊற்றிக் கொள்ள லாம். இந்தக் கலவையை ஒரு தட்டில் கொட்டி, சமமாக்கி, ஆவியில் 20 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்.

தொட்டால் கையில் ஒட்டிக் கொள்ளாமல் இருக்கும் வரை வேக வைத்து, அடுப்பிலிருந்து இறக்கி, இரண்டு மணி நேரம் ஆற வைக்க வேண்டும். பின்னர், மைசூர் பாகு போல் கத்தியால் சிறு துண்டுகளாக வெட்டி னால், கடலைப் பருப்பு சந்தேஷ் ரெடி!

பூசணி போண்டா: தேவையான பொருட்கள்: அரை கிலோ பூசணிக்காய், தேவையான அளவு உப்பு, 200 கிராம் கடலை மாவு, இஞ்சி, பூண்டு, ஏலக்காய் ஆகியவை ஒன்றாக அரைத்த விழுது, பொடியாக நறுக்கப்பட்ட 50 கிராம் பச்சை மிளகாய், பொடியாக நறுக்கப்பட்ட வெங்காயம் சிறிது, பொறிக்கத் தேவையான அளவு எண்ணெய், சிறிது மிளகாய் பொடி.

செய்முறை: பூசணிக்காயைத் தோல் நீக்கி, மிக்சியில் அரைத்துக் கொள் ளவும். உப்பு கலந்து, 10 நிமிடம் ஊற வைக்கவும். பிறகு, பூசணியை நன்கு பிழிந்து, தண்ணீரை முற்றிலும் நீக்கவும். சதைப் பற்று மட்டும் கெட்டியாகக் கிடைக் கும். இதில், மேலும் சிறிது உப்பு, பச்சை மிளகாய், அரைத்த விழுதுகள், வெங்காயம் ஆகியவற்றை கலந்து மிக்சியில் அரைக்கவும். இதை சிறிய உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.

கடலை மாவில், மிளகாய் பொடி, சிறிதளவு உப்பு சேர்த்து, போண்டாவின் மேல் மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, அடுப்பில் வைக்கவும். உருண்டைகளை எண்ணெய் காய்ந்ததும், போண்டா மாவில் தோய்த்து எடுத்து, எண் ணெயில் போட்டு பொறித்து எடுக்கவும். எண்ணெயில் பொறிப் பதற்கு பதிலாக, இட்லி தட்டில் வேக வைத்தும் எடுக்கலாம்.

BACK NEXT

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font        |   மின்னஞ்சல்   |  | 

முதல் பக்கம்
வாசகர் கடிதம் International Edition Font Help ? Advertisment Tariff

Dinamalar Publications
Copyright 2008 www.dinamalar.com. All rights reserved. Designed and Hosted by Web Division,Dinamalar  
coordinator@dinamalar.in and webmaster@dinamalar.in