05.சென்னையைச் சுற்றி
நவகிரகத் தலங்கள்! (எஸ்.உமாபதி)
தஞ்சை, நாகை மாவட்டங்களில் அமைந்துள்ள ஆலங்குடி (குரு),
திருநாகேஸ்வரம் (ராகு), திருநள்ளாறு (சனி),
திங்களுர் (சந்திரன்), சூரியனார் கோவில் (சூரியன்),
கஞ்சனூர் (சுக்கிரன்), வைத்தீஸ்வரன் கோவில் (செவ்வாய்),
திருவெண்காடு (புதன்), கீழப்பெரும்பள்ளம் (கேது)
ஆகியவையே நவக்கிரக தலங்கள் என்று
அழைக்கப்படுகின்றன. ஆனால், சென்னையைச் சுற்றியும்
நவக்கிரக தலங்கள் உள்ளன என்பது பலர் அறியாத விஷயம்.
சென்னையைச் சுற்றியுள்ள இடங்களான கொளப்பாக்கம்
(சூரியன்), சோமமங்கலம் (சந்திரன்), பூந்தமல்லி (செவ்வாய்),
கோவூர் (புதன்), போரூர் (குரு), மாங்காடு (சுக்கிரன்),
பொழிச்சலூர் (சனி), குன்றத்தூர் (ராகு),
கெருகம்பாக்கம் (கேது) ஆகியவை பல ஆண்டுகளுக்கு முன்
நவக்கிர தலங்களாக சிறப்புடன் இருந்துள்ளன. இந்த
ஒவ்வொரு தலங்களும் நவகிரக வழிபாட்டிற்கு ஏற்றவை.
|
|
|
|
சென்னை
நகரில் இருந்து 20 கி.மீ., தொலைவு
கொண்ட கொளப்பாக்கத்தில் அகஸ்தீஸ்வரர்
கோவில் அமைந்துள்ளது. ஆயிரத்து 300
ஆண்டுகள் பழமையான இக்கோவில் வரலாற்று
காலத்தில் இருந்தே சூரியனுக்குரிய
தலமாக போற்றப்பட்டு வந்துள்ளது.
சென்னையில் இருந்து குன்றத்தூர்
செல்லும் பஸ் மூலமாக கொளப்பாக்கம்
சென்றடைய முடியும். சென்னை நகரில்
இருந்து 30 கி.மீ., தூரத்தில்
அமைந்துள்ள சோம மங்கலத்தில்
சோமநாதீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.
பல்லவர்கள் காலத்தில் கட்டப்பட்ட
இக்கோவில் மிகவும் பழமையானது. நவகிரக
தலத்தில் இது சந்திரனுக்குரிய தலம்.
தட்சனின் சாபத்தால் சந்திரனுக்கு
க்ஷயரோகம் ஏற்பட, இங்கு வினைத்
தீர்த்தம் அமைத்து நீராடி, லிங்கம்
நிறுவி சந்திரன் யாகம் செய்து வழிபட்ட
தலம் என்பதால் இத்தலம்
சந்திரனுக்குரியதாக விளங்குகிறது.
குன்றத்தூர், பிராட்வே, காஞ்சிபுரம்
ஆகிய இடங்களில் இருந்து
சோமங்கலத்திற்கு நேரடி பஸ்
இயக்கப்படுகிறது. |
சென்னையில்
இருந்து 25 கி.மீ., தொலைவில் உள்ள
பூந்தமல்லியில் அமைந்துள்ளது
வைத்தீஸ்வரன் கோவில். சோழர்களால்
கட்டப்பட்ட இது ஆயிரத்து 300 ஆண்டுகள்
பழமையானது. நவகிரக தலங்களில் அங்காரக
(செவ்வாய்) தலமாக விளங்குகிறது.
செவ்வாய் கிழமையன்று ராகு கால
நேரத்தில் அங்காரகனுக்கும், விஷ்ணு
துர்கைக்கும் மாவிளக்கு தீபம்
ஏற்றுவதன் மூலம் பல்வேறு பிரச்னைகள்
தீரும் என்பது ஐதீகம். பூந்தமல்லிக்கு
சென்னை நகரின் அனைத்து பகுதிகளில்
இருந்தும் பஸ் போக்குவரத்து உள்ளது.
|
|
|
|
சென்னையில்
இருந்து
25 கி.மீ.,
தொலைவில்
உள்ளது
கோவூர்.
இங்குள்ள
சுந்தரேஸ்வரர்
கோவில்
சோழர்
காலத்தில்
கட்டப்பட்டது.
ஆயிரத்து
300
ஆண்டுகள்
பழமை
வாய்ந்த
இத்தலத்தில்
திருமேனி
ஈஸ்வரரான
சிவபெருமானை
தியாகப்
பிரம்மா
சுந்தர
வடிவுடையவனாக
நினைத்து
பாடியதால்,
அங்கு
வீற்றிருக்கும்
ஈசுவரன்
சுந்தரேசுவரன்
என பெயர்
பெற்றார்.
பஞ்ச
ரத்ன
கீர்த்தனை
பாடல்
பெற்றது
இக்கோவிலின்
மற்றொரு
சிறப்பு.
நவக்கிரகங்களில்
ஒன்றான
புதனுக்குரிய
வழிபாடு
இங்கு
நடக்கிறது.
ஒவ்வொரு
புதன்கிழமையும்
வில்வ இலை
பூஜை
இங்கு
விசேஷம்.
சென்னை-
பெங்களூரு
சாலையில்
அமைந்துள்ளது
போரூர்.
இங்குள்ள
ராமநாதீஸ்வரர்
கோவில்
800
ஆண்டுகள்
பழமையானது.
சீதையை
தேடி
வந்த
ராமபிரான்
இத்தலத்தில்
48 நாள்
தங்கி
விரதம்
இருந்து
பின்னர்
ராமேஸ்வரம்
புறப்பட்டதாக
வரலாறு
கூறுகிறது. |
சிவபெருமானை
குருவாக பாவித்து ராமர் வழிபட்டதால்
நவகிரக தலங்களில் குரு தலமாக இத்தலம்
விளங்குகிறது. சென்னை நகரின் பல்வேறு
பகுதிகளில் இருந்தும் போரூருக்கு நேரடி
பஸ் வசதி உண்டு.
சென்னையில் இருந்து 30 கி.மீ.,
தொலைவில் மாங்காட்டில் உள்ள மிகவும்
பழமையான கோவில் வல்லீஸ்வரர்
திருக்கோவில். நவகிரக தலங்களில்
சுக்கிரனுக்குரியதாக இத்தலம்
விளங்குகிறது. சுக்ர பகவான் இங்கு ஈசனை
வணங்கியதால் சுக்ர வார வழிபாடு
சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இக்கோவிலில் புனரமைக்கும் பணிகள்
முடிவடைந்து, விரைவில் கும்பாபிஷேகம்
நடைபெற உள்ளது. |
|
|
|
மாங்காடு
காமாட்சியம்மன் கோவிலுக்கு அருகில்
இக்கோவில் அமைந்துள்ளது. சென்னை
மற்றும் தாம்பரம் ஆகிய இடங்களில்
இருந்து ஏராளமான பஸ் வசதி
மாங்காட்டிற்கு உள்ளது. பல்லாவரத்தில்
இருந்து 5 கி.மீ., தூரத்தில் உள்ள
பொழிச்சலூர் அகஸ்தீஸ்வரர் கோவில்
ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது.
இரண்டாம் குலோத்துங்க சோழர் காலத்தில்
கட்டப்பட்டது. அகத்திய முனிவரால்
ஸ்தாபிக்கப்பட்டு, பூஜிக்கப்பட்டு
வந்துள்ளதால் இங்கு வீற்றிருக்கும்
இறைவன் அகஸ்தீசுவரர் என்று
அழைக்கப்படுகிறார்.
|
ஒரு புண்ணிய
தலத்திற்கு தேவையான தலம், மூர்த்தி,
தீர்த்தம் என இவை மூன்றும் இத்தலத்தில்
சிறப்பாக அமைந்துள்ளது.
திருநள்ளாருக்கு அடுத்ததாக சனீஸ்வர
தலமாக இக்கோவில் உள்ளது. நளதீர்த்த
குளமும் இங்குள்ளது. சென்னையில்
இருந்து பொழிச்சலூருக்கு ஏராளமான பஸ்
வசதி உண்டு. சென்னையில் இருந்து 30
கி.மீ., தொலைவில் உள்ளது முதலாம்
குலோத்துங்கனால் கி.பி.1070ல்
கட்டப்பட்ட குன்றத்தூர் திருநாகேஸ்வரர்
கோவில். நவகிரகங்களில் ராகு தலமான
இங்கு ராகு வழிபாடுகள் சிறப்பாக
நடைபெறுகிறது. |
|
|
|
சென்னையில்
இருந்து 35 கி.மீ., தொலைவில்
அமைந்துள்ளது கெருகம்பாக்கம்.
இங்குள்ள திருநீலகண்டேஸ்வரர்
திருக்கோவில் சிறப்பு பெற்றது.
சோழர்களால் கட்டப்பட்ட இக்கோவில்
ஆயிரத்து 200 ஆண்டுகள் பழமையானது.
நவகிரகங்களில் கேதுவின் தலமான இங்கு
கேதுக்குரிய வழிபாடுகள் நடக்கின்றன.
போரூரில் இருந்து குன்றத்தூர் செல்லும்
அனைத்து பஸ்களும் கெருகம்பாக்கத்தில்
நின்று செல்லும்.
|
சென்னையை
சுற்றியுள்ள நவகிரக தலங்கள் மொத்தம்
40 கி.மீ., வட்டத்தில் அமைந்துள்ளன.
ஒவ்வொரு திசையிலும் ஒரு கோவில்
அமைந்துள்ளது. அனைத்து கோவில்களுக்கும்
பஸ் வசதி உள்ளது.
|
|
|