அதனால் தான்
வாலி வதம் போரில் ராவணனை மன்னித்து, "இன்று
போய் நாளை வா!' என்று மானிடரைப் போல
கூறிய நிகழ்ச்சிகள் ராமாயணத்தில்
நடந்தன.
சப்த ரிஷிகளில் ஒருவர் மரீஷ மகரிஷி.
இவர் ஒரு சமயம் ராமபிரானை நினைத்து
கடும் தவமிருந்தார். கடவுள் அவருக்குப்
பிரத்யட்சமான போது, "ராமர் என்பது
மானிடப்பிறவி. எனினும், நீ சங்கு,
சக்கரத்துடன் மகாவிஷ்ணுவாகக்
காட்சியளித்து மக்களை ரட்சிக்க
வேண்டும்!' என்று வேண்டினார்.
ராமபிரானும் இதற்கு சம்மதித்தார்.
உள்ளத்தில் ராமராகவும், உலகுக்கு
மகாவிஷ்ணுவாகவும் தோற்றமளித்த கோலமே
பச்சை வண்ணன். புதனின் அதிதேவதை விஷ்ணு;
புதனின் நிறமும் பச்சை. ஜாதகப்படி புத
திசையில் போதாத காலம் உள்ளவர்கள் இங்கு
வந்து பச்சை வண்ணனை தரிசித்தால்
பிரச்னைகள் எளிதில் தீரும். இங்குள்ள
தாயார் சீதாப்பிராட்டி. எனினும், அவரை
மரகதவல்லி என்றும், யந்திர புர வாசனி
என்றும் அழைக்கின்றனர். உற்சவர்
கஜலட்சுமியாக தாமரைப் பூவில்
அமர்ந்திருக்கிறார். நீ ஷûக்த
மந்திரத்தில் இடம் பெறும் ஒவ்வொரு
மந்திரத்துக்கும் ஓர் இயந்திரம் உண்டு.
அதனால், இங்கு கருங்கல் பீடத்தில்
இயந்திரங்களை ஸ்தாபிதம் செய்து,
மரகதவல்லியை மூலவராகப் பிரதிஷ்டை
செய்திருப்பது விசேஷம்.
சீதாலட்சுமி. கஜலட்சுமி, மரகதவல்லி
என்ற மூன்று ரூபத்தையும், ஒன்றாக
நினைத்து வழிபடக் கூடிய தாயார்.
லட்சுமி சஹஸ்ரநாமம் சொல்லும் போது, "யந்திர
புர வாசனியே நம...' என்று ஒரு வரி
வரும். அந்த வாசனி இவரே! வைகானச
ஆகமப்படி கட்டப்பட்ட கோவில் இது.
தாயார் சன்னதியில் உள்ள
சீதாப்பிராட்டிக்கு ஆதிசேஷன் வடிவில்
நின்று காவல் காக்கிறார் லட்சுமணன்.
அது பாம்பு ரூபத்தில் உள்ள விளக்கு.
அந்த விளக்கில் தான் நெய், எண்ணெய்
விட்டு சுடர் விடச் செய்கின்றனர்.
இங்கு ஆதிசேஷினின் லட்சுமணன்
ரூபத்திலிருப்பது ஒரு வித்தியாசமான
செய்தி.
தை வெள்ளிக்கிழமைகளில் தாயாருக்கு
திருமஞ்சனமும், தொடர்ந்து ஊஞ்சல்
உற்சவ சேவையும் இங்கு சிறப்பாக
நடக்கிறது.
உலகைக் காக்கும் சக்தி மிகுந்த
இயந்திரங்களின் மீது லட்சுமியாக
வீற்றிருக்கும் சீதாப்பிராட்டியையும்,
சங்கு சக்ரதாரியாக மஹாவிஷ்ணுவாகக்
காட்சியளிக்கும் ராமபிரானையும்
தரிசித்து ஆனந்தமும், அமைதியும்
பெறுவோமாக.