ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி வடகாடு கல்லறை தோட்டத்தில் வெங்கடாசலம் உடல் அடக்கம்
Advertisement
 
 
Advertisement
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

09 அக்
2010
03:03

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வெங்கடாசலம் உடலுக்கு அரசியல்கட்சி பிரமுகர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அடுத்த வடகாட்டில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வெங்கடாசலம் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அவரது உடல் புதுக்கோட்டை அரசு தலைமை மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு நேற்று பகல் 12.50 மணிக்கு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.


மருத்துவமனையிலிருந்து ஆம்புலன்ஸ் வேன் மூலம் அவரது உடல் வடகாட்டுக்கு ஊர்வலமாக எடுத்துசெல்லப்பட்டது. வழி நெடுகிலும் ஏராளமானோர் திரண்டு நின்று அவரது உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். மாலை ஆறு மணிக்கு அவரது உடல் வடகாட்டில் உள்ள அவரது வீட்டின் முன் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.அ.தி.மு.க., மகளிர் அணி செயலாளர் கோகுல இந்திரா, விவசாய அணி செயலாளர் துரை கோவிந்தராஜன், எம்.பி., குமார், டாக்டர் வெங்கடேஷ், தினகரன், முத்தரையர் சங்க நிர்வாகிகள் விஷ்வநாதன், செல்லையா உட்பட அரசியல் கட்சி பிரமுகர்கள், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் ஆயிரக்கணக்கானோர் அவரது உடல்மீது மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். மாலை 7.30 மணிக்கு அவரது உடல் வீட்டின் அருகில் உள்ள கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.இறுதி ஊர்வலத்தைத் தொடர்ந்து வடகாடு மற்றும் ஆலங்குடியில் 2,000க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.


 

Advertisement
மேலும் புதுக்கோட்டை மாவட்ட  செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (7)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muthu - singapore,சிங்கப்பூர்
11-அக்-201017:25:43 IST Report Abuse
Muthu One of the best political leader for the four peoples in Pudukottai District. My condolence to their family and muthiriyar society... எஸ்...அவர் மீது ஒருசில குறைகள் இருந்தாலும் கட்சியையும் அவரின் சமுதாயத்தையும் ஒரு ஒற்றுமையுடன் வழி நடத்தி சென்றவர் ... அவரது சமுதாயத்திற்கு ஒரு பேரிழப்பு ......
Rate this:
Share this comment
Cancel
hamdun ashraf - portonovo,இந்தியா
11-அக்-201012:19:34 IST Report Abuse
 hamdun ashraf . My condolence to their family and muthiriyar society...
Rate this:
Share this comment
Cancel
D.M.Maran - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
11-அக்-201012:05:10 IST Report Abuse
D.M.Maran கட்ட பஞ்சாயத்து செய்தால் இதுதான் முடிவு என்பது தெளிவாகிறது. கட்ட பஞ்சாயத்து செய்பவர்கள் இனிமேலும் செய்யாது கோர்ட் வசம் விடவேண்டும். அடித்து நொறுக்கப்பட்ட, கொளுத்தப்பட்ட அரசு சொத்துக்கு அதற்கு உண்டான நட்டத்தை "ஜெ" உடனடியாக அரசுக்கு செலுத்தி தன்னுடைய புண்ணிய தன்மைக்கு இம்மியும் களங்கம் வராமல் பார்த்து கொள்ளவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
செந்தில் புதுக்கோட்டை - சிங்கப்பூர்,இந்தியா
11-அக்-201009:31:39 IST Report Abuse
செந்தில் புதுக்கோட்டை அன்னாரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தர்ருகும் சமுதாய மக்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.. அவர் மீது ஒருசில குறைகள் இருந்தாலும் கட்சியையும் அவரின் சமுதாயத்தையும் ஒரு ஒற்றுமையுடன் வழி நடத்தி சென்றவர் ... அவரது சமுதாயத்திற்கு ஒரு பேரிழப்பு ...
Rate this:
Share this comment
Cancel
Ramasamy - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
09-அக்-201011:16:12 IST Report Abuse
Ramasamy One of the best political leader for the four peoples in Pudukottai District. My condolence to their family and muthiriyar society
Rate this:
Share this comment
Cancel
பா.சிதம்பரம் - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
09-அக்-201011:03:38 IST Report Abuse
பா.சிதம்பரம் காவல்துறை கொலைகாரர்களை கைது செய்தார்களா இல்லை வழக்கம் போல் உண்மை குற்றவாளிகளை தப்பிகவிட்டு கைது செய்வது போல் நாடகம் அடுகிரர்களா? ஒரு வெங்கடாசலம் மறைந்தால் என்ன அதே மண்ணில் இன்னும் பல வெங்கடாசலம் தோன்றுவார்கள் என்று நம்புகிறான். அன்னாரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தர்ருகும் சமுதாய மக்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்
Rate this:
Share this comment
Cancel
nalavan - uk,இந்தியா
09-அக்-201009:31:04 IST Report Abuse
nalavan நன்றி ,புதுக்கோட்டை மாவட்ட காவல்துறைக்கு எப்படி எச்சரிகை கொடுக்க போறிங்க ,மக்களுக்கு பயன்படாத மாவட்ட காவல் துறை லஞ்ச துறை
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.