அ.தி.மு.க., மாஜி அமைச்சர் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் மீட்பு
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

10 அக்
2010
03:55

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வெங்கடாசலம் கொலை வழக்கில் தொடர்புடைய கொலையாளிகள் விட்டுச்சென்ற பயங்கர ஆயுதங்களை போலீஸார் மீட்டுள்ளனர்.


ஆலங்குடி, வடகாடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மூன்றாவது நாளாக நேற்றும் பதட்டம் நீடித்ததால் பஸ்கள் ஓடவில்லை.புதுக்கோட்டை மாவட்டம் வடகாட்டில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வெங்கடாசலம் கடந்த ஏழாம் தேதி இரவு படுகொலை செய்யப்பட்டார். மூகமூடி அணிந்த மர்ம நபர்கள் மூன்றுபேர் பயங்கர ஆயுதங்களுடன் வீடு புகுந்து அவரை வெட்டி சாய்த்துவிட்டு காரில் தப்பிச் சென்றனர்.கொலையாளிகள் விட்டுச்சென்ற மாருதி-800 கார் பட்டுக்கோட்டை அடுத்த நடுவிக்கோட்டையில் ஏற்கனவே மீட்கப்பட்டது. அவர்கள் விட்டுச் சென்ற ஆயுதங்களும் மீட்கப்பட்டுள்ளது.கறம்பக்குடி அருகில் உள்ள குமரகுளத்தில் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் கிடப்பதாக அப்பகுதியினர் கொடுத்த தகவலின்பேரில், அங்கு விரைந்த கறம்பக்குடி போலீஸார் குளத்தின் கரையில் கிடந்த அரிவாள், பட்டாக்கத்தி, பர்தா மற்றும் பெட்ரோல் குண்டுகள் தயார் செய்வதற்கான பாட்டில், பிளாஸ்டிக் டப்பாக்கள் ஆகியவற்றை மீட்டனர்.


ஆயுதங்களில் ரத்தக்கறை படிந்திருந்ததால் அவை வெங்கடாசலம் கொலை வழக்கில் தொடர்புடைய கொலையாளிகள் விட்டுச்சென்ற ஆயுதங்களாக இருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.கார் மற்றும் ஆயுதங்கள் மீட்கப்பட்ட இடங்களை வைத்து பார்க்கும்போது வடகாட்டிலிருந்து தப்பிச்சென்ற கொலையாளிகள் வாணத்தன்காடு, கருக்காக்குறிச்சி வழியாக பட்டுக்கோட்டைக்கு தப்பிச்சென்றிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.கொலையாளிகளை கைது செய்வதற்காக இன்ஸ்பெக்டர்கள் பாலகுரு, பன்னீர்செல்வம், தமிழ்மாறன், பாலமுருகன் ஆகியோர் தலைமையில் நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை தொடர்கிறது.இதற்கிடையே வெங்கடாசலம் படுகொலையைத் தொடர்ந்து ஆலங்குடி, வடகாடு மற்றும் சுற்றுவட்டார கிராமப்பகுதிகளில் மூன்றாவது நாளாக நேற்றும் பதட்டம் நீடித்தது.


ஆலங்குடி அடுத்த கல்யாணராமபுரத்தில் நேற்று அதிகாலையில் 15 பேர் கொண்ட கும்பல் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக ரோட்டோரம் இருந்த மரத்தை வெட்டி ரோட்டின் குறுக்கே போட்டது. தகவலறிந்து விரைந்து சென்ற போலீஸார் அந்த மரத்தை அகற்றினர். ஆலங்குடி, வடகாடு உள்ளிட்ட பகுதிகளில் மூன்றாவது நாளாக நேற்றும் பஸ்கள் ஓடவில்லை. இயல்புநிலை திரும்பியபின்னரே அப்பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படும் சூழ்நிலை உள்ளது.ஆலங்குடி தாலுக்கா முழுவதும் மூன்றாம் நாளாக நேற்றும் அரசு பள்ளிகள், தனியார் கல்லூரிகள், தனியார் இன்ஜினியரிங் கல்லூரி என கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட வில்லை.இதனால் அப்பகுதி மக்கள் அனைவரும் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். "கொலையாளிகளை கைது செய்யும் வரை இயல்புநிலை திரும்புவது சந்தேகம்' என, போலீஸார் தெரிவித்தனர்.


 

Advertisement
மேலும் புதுக்கோட்டை மாவட்ட  செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kalai - pudukkottai,இந்தியா
11-அக்-201018:59:09 IST Report Abuse
kalai good
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.