மாஜி அமைச்சர் கொலையில் விசாரணை கைதி "எஸ்கேப்'
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

23 அக்
2010
02:32

புதுக்கோட்டை: அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வெங்கடாசலம் படுகொலை தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்திவந்த விசாரணை கைதி ஒருவர் ஆலங்குடி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து நேற்றுமுன்தினம் நள்ளிரவு தலைமறைவான சம்பவம் அப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அடுத்த வடகாட்டில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வெங்கடாசலம் கடந்த ஏழாம் தேதி இரவு படுகொலை செய்யப்பட்டார். வெள்ளை நிற மாருதி-800 காரில் பயங்கர ஆயுதங்களுடன் வந்த மர்ம நபர்கள் நான்கு பேர் அவரை அரிவாளால் வெட்டி விட்டு தப்பிச் சென்றனர்.இவர்களை அடையாளம் காண ஏதுவாக நான்கு இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள தனிப்படை போலீஸார் மதுரை, ராமனாதபுரம், திருநெல்வேலி உள்ளிட்ட வெளிமாவட்டங்களில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
படுகொலை தொடர்பாக வெங்கடாசலம் கார் டிரைவர் அரியலூரைச் சேர்ந்த பன்னீர்செல்வம்(30) என்பவரை கடந்த எட்டாம் தேதி தனிப்படை போலீஸார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். ஆரம்பத்தில் இரண்டு நாள் ஆலங்குடி போலீஸ் ஸ்டேஷனில் வைத்து விசாரணை செய்துவந்த போலீஸார் பாதுகாப்பு கருதி அவரை ஆலங்குடி மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு மாற்றினர்.அங்கு தனி செல்லில் அடைக்கப்பட்ட பன்னீர் செல்வத்திடம் வடகாடு, கறம்பக்குடி மற்றும் ஆலங்குடி போலீஸ் ஸ்டேஷன்களைச் சேர்ந்த போலீஸார் மட்டுமின்றி, தனிப்படை போலீஸாரும் மாறி, மாறி விசாரித்து வந்தனர்.நேற்றுமுன்தினம் நள்ளிரவு போலீஸ் ஸ்டேஷனுக்குள் இருந்து டிரைவர் பன்னீர் செல்வம் தப்பிச் சென்றுள்ளார். குற்றவாளிகள் குறித்து முழுமையான எந்த தகவலும் பெறாத நிலையில் அவரை போலீஸாரே தப்பிச்செல்ல வைத்துள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.விசாரணை கைதி ஒருவர் இரவோடு, இரவாக தலைமறைவான சம்பவம் ஆலங்குடி மற்றும் வடகாடு பகுதிகளில் நேற்று காலை பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.


 

மேலும் புதுக்கோட்டை மாவட்ட  செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (5)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
A.Pandi - Singapore,சிங்கப்பூர்
24-அக்-201006:03:22 IST Report Abuse
A.Pandi அந்த பகுதி மக்கள் முன்னாள் அமைச்சர் கொலையில் ஆளும் கட்சியின் முக்கிய புள்ளிகள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்று கூறியது உண்மை என்றே தோன்றுகிறது. பேய்கள் அரசாண்டால்!.
Rate this:
Share this comment
Cancel
பெரியார் - சென்னை,இந்தியா
24-அக்-201000:41:56 IST Report Abuse
பெரியார் பாவம். பன்னீர்செல்வம். இன்னும் கொஞ்ச நாளில் வேலைய கொடுத்தவர்களே இவரையும் போட்டு தள்ளி சாட்சி இல்லாதலால் கேசை மூடி விடுவார்கள்.
Rate this:
Share this comment
Cancel
Ramasamy - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
23-அக்-201016:17:48 IST Report Abuse
Ramasamy பல சம்பவங்களில் நம் தமிழ்நாடு போலீஸ் ஆறு மணி நேரத்தில் குற்றவாளிகளை பிடித்து நாம் தலை சிறந்த காவலர்கள் என்று பெயர் பெற்றவர்கள் இன்று குற்றவாளிகளை தப்பிக்க விட்டு, கஷ்டப்பட்டு பெற்ற பெயரை தக்கவைத்து கொள்ளாமல் இப்படி சிதறடித்து விட்டார்களே. இப்படி ஒருசில கவாலாளிகளால் மொத்த துறைக்கும் கெட்ட பெயர். திருந்துவார்கள இப்படிப்பட்டவர்கள்
Rate this:
Share this comment
Cancel
sundaram - Ruwais,ஐக்கிய அரபு நாடுகள்
23-அக்-201009:04:21 IST Report Abuse
sundaram குற்றவாளிகள் குறித்து முழுமையான எந்த தகவலும் பெறாத நிலையில் அவரை போலீஸாரே தப்பிச்செல்ல வைத்துள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்புன்னு நம்ம முதல்வர் அய்யா அடிக்கடி சொல்றாருங்களே!
Rate this:
Share this comment
Cancel
nalavan - hehe,இந்தியா
23-அக்-201003:14:39 IST Report Abuse
nalavan சூப்பருங்கோ, மாவட்ட காவல் துறைக்கு வாழ்த்துகளை சொல்லிருங்க நண்பரே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X