சிவாலயங்களில் சனிப்பெயர்ச்சி விழா
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

16 டிச
2014
23:37

கோவை : கோவையிலுள்ள சிவாலயங்களில், சனிப்பெயர்ச்சி விழா விமரிசையாக நடந்தது.

சனி ஒரு ராசியை விட்டு மற்றொரு ராசிக்கு இடம் பெயர்வதை சனிப்பெயர்ச்சி என்கிறோம். நேற்று மதியம் 2:44 மணிக்கு சனிப்பெயர்ச்சி நடந்தது. இதையொட்டி, நேற்று சரவணம்பட்டியிலுள்ள சிரவையாதீனம் கவுமார மடாலய வளாகத்தில் தனிக்கோவில் கொண்டுள்ள சனிபகவானுக்கு, காலை 7:00 மணிக்கு அமுத நீராட்டு, 10:30 மணிக்கு பெருந்திருமஞ்சனம், 12:00 மணிக்கு பேரொளி வழிபாடு, பகல் 2:44 மணிக்கு சிறப்பு பேரொளி வழிபாடு செய்யப்பட்டது.இரவு. 8:30 மணி வரை பரிகார வேள்வி நடந்தது. திருநள்ளாறு நளதீர்த்தம், கங்கை, காவிரி, பவானி, கோதாவரி போன்ற புண்ணிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனிதநீர், கோவில் வளாகத்திலுள்ள சிறிய குளத்தில் விடப்பட்டு, அங்கு புனிதநீராடல் நடைபெற்றது.

புலியகுளம் மாரியம்மன் கோவில்வளாகத்தில் தனி சன்னதியில் எழுந்தருளியுள்ள சனீஸ்வர பகவானுக்கு, நேற்று மதியம், பால், தயிர், பன்னீர், தேன் உள்ளிட்ட சகலவித திரவியங்களில் அபிஷேகம் செய்யப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார்.சிங்காநல்லுார் இரட்டைவீதி அக்ரஹாரத்திலுள்ள மகாபிரத்யங்கிரா ஆலயத்தில் நேற்று சிறப்புயாகம் நடந்தது. பேரூர் பட்டீசுவரர் கோவில், வெள்ளலுார் சித்தலிங்கேஸ்வரர் கோவில், ஒத்தக்கால்மண்டபம் புற்றிடங்கொண்டீசர் கோவில், கோட்டை ஈஸ்வரன் கோவில், ராம்நகர் கோதண்டராமர் கோவில், கோனியம்மன் கோவில், தண்டுமாரியம்மன் கோவில், சாரதாம்பாள் கோவி்ல்,ஆர்.எஸ்.புரம் காமாட்சியம்மன் கோவில்களில் சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு, சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன.

 

மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
பொது
பிரச்னைகள்
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X