முத்தாயம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி வாரியத் தேர்வில் மாநில சாதனை
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

23 டிச
2014
07:30

ராசிபுரம் : சென்னை தொழில் நுட்பக் கல்வி இயக்கம் சார்பில், பாலிடெக்னிக் கல்லூரிக்கான வாரியத்தேர்வில், ராசிபுரம் முத்தாயம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி மாணவரில், மூன்றாம் ஆண்டு ஐந்தாம் பருவத் தேர்வில், சிவில் ஆட்டோமொபைல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், தகவல் தொழில்நுட்ப தேர்வில், 100 சதவீத தேர்ச்சியும், மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் துறைகளில், 99 சதவீத தேர்ச்சியும் பெற்றுள்ளனர்.

இரண்டாம் ஆண்டு, மூன்றாம் பருவ தேர்வில், எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர், தகவல் தொழில் நுட்பத்துறைகளில், 100 சதவீத தேர்ச்சியும், இதே பிரிவில் சிவில் மெக்கானிக்கல், ஆட்டோமொபல், எலக்ட்ரிக்கல் துறைகளில், 95 சதவீத தேர்ச்சியும், மூன்றாம் ஆண்டு, ஐந்தாம் பருவத்தில் பயிலும் கட்டிடவியல் துறை மாணவி மணிமொழி, மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறையில் மாணவர் பிரவின்குமார், கம்ப்யூட்டர் துறையில் மாணவி பிரபா, மாணவர் அண்ணாமலை, தகவல் தொழில் நுட்பத்துறையில் மாணவி திவ்யபாரதி, இரண்டாம் ஆண்டு மூன்றாம் பருவம் பயிலும் மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறையில் மாணவி சாகரி உள்ளிட்ட 6 பேர், 700க்கு, 700 மதிப்பெண் பெற்று, மாநில அளவில் சாதனை படைத்தனர்.

ஐந்தாம் பருவத்தில் பயிலும் கட்டிடவியல் துறை மாணவர் ஆனந்தகோபாலன், இயந்திரவியல் துறை மாணவர் தினகரன், மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை மாணவர் பாலமுருகன், கம்ப்யூட்டர் துறை மாணவியர் ராதிகா, பிரியதர்ஷினி, ரேவதி மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை மாணவி கிரிஜாதேவி உள்ளிட்ட ஏழு பேர், 700க்கு, 699 மதிப்பெண் பெற்று சாதனை படைத்தனர்.முதலாமாண்டு முதல் பருவம் மின்னணுவியல் மற்றும் தொலை தொடர்புத்துறையில் பயிலும் மாணவர் லாவனேஸ்வரன், 800க்கு, 793 மதிப்பெண்ணும், இயந்திரவியல் துறை மாணவர் பிரபாகரன், 786 மதிப்பெண்ணும், கம்ப்யூட்டர்துறை மாணவி விஜயரூபினி, 782 மதிப்பெண்ணும் பெற்றுள்ளனர். முதலாம் ஆண்டின் முதல் பருவத்தில், 92 சதவீத மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மூன்றாம் ஐந்தாம் பருவ தேர்வில், 700க்கு, 700 மதிப்பெண், ஆறு பேரும், 699 மதிப்பெண், ஏழு பேரும், 698 மதிப்பெண் ஆறு பேரும், 697 முதல் 695 வரை மதிப்பெண், 38 பேரும், 684 முதல் 680 வரை மதிப்பெண், 82 பேரும், 679 முதல் 675 வர 50 பேரும், 674 முதல், 670 வரை, 75 பேரும் மதிப்பெண் பெற்று, சாதனை படைத்துள்ளனர். தொடர்ந்து, 14 ஆண்டுகளாக வாரியத்தேர்வில், மாநில அளவில் சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.இவர்களை, கல்லூரி தாளாளர் ராமசாமி, செயலாளர் ஜெயப்பிரகாஷ், பொருளாளர் பிரேம்குமார், முதல்வர் விஜயகுமார், துறை தலைவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் பாராட்டி வாழ்த்தினர்.

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X