முன்னாள் அமைச்சர் கொலை வழக்கு இருவருக்கு ஒரு நாள் போலீஸ் காவல்
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

03 நவ
2010
01:03

புதுக்கோட்டை: அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வெங்கடாசலம் கொலை வழக்கில், சரணடைந்த இரண்டு பேரையும், மீண்டும் ஒருநாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க ஆலங்குடி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அடுத்த வடகாட்டில், கடந்த ஏழாம் தேதி இரவு அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வெங்கடாசலத்தை முகமூடி அணிந்த மர்ம நபர்கள் நான்குபேர் வீடு புகுந்து அரிவாளால் வெட்டி கொலை செய்தனர். 


கொலை வழக்கு தொடர்பாக தஞ்சை மாவட்டம் பேராவூரணி அடுத்த வீரக்குடி கிராமத்தைச் சேர்ந்த முத்துக்குமார், ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனையைச் சேர்ந்த மணிகண்டன் என்ற முத்துக்கிருஷ்ணன் ஆகியோர் மதுரை ஜே.எம்-4 நீதிமன்றத்தில் சரணடைந்தனர். மதுரை சிறையில் அடைக்கப்பட்ட இவர்களை ஒருவாரம் வரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்திய தனிப்படை போலீஸார் மீண்டும் மதுரை சிறையில் அடைத்தனர். சரணடைந்த இருவரும் முன்னாள் அமைச்சர் வெங்கடாசலம் கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் தான் என்பதை உறுதி செய்வதற்காக கைதிகள் அணிவகுப்பு நடத்தப்பட்டது. மதுரை சிறையில் நடந்த அணிவகுப்பில் வெங்கடாசலத்தின் மகன் ராஜபாண்டியன், மகள் தனலெட்சுமி, ஆசிரியர் செல்வராஜ் ஆகியோர் சரணடைந்த இருவரையும் அடையாளம் காட்டினர்.


இதையடுத்து அவர்களை மீண்டும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்த தனிப்படை போலீஸார், இருவரையும் மதுரை சிறையிலிருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆலங்குடி ஜே.எம்., நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தினர். இருவரையும் ஒரு நாள்  (இன்று மதியம் 2.45 மணிவரை) போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்து நீதிபதி வடிவேலு உத்தரவு பிறப்பித்தார். இருவரையும் போலீஸார் அழைத்துச் சென்றனர். சம்பவத்தை தொடர்ந்து ஆலங்குடி நீதிமன்ற வளாகத்தில் நேற்று காலை முதலே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.


 

Advertisement
மேலும் புதுக்கோட்டை மாவட்ட  செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.