கூடல்நகர் ஸ்டேஷனை மேம்படுத்த எதிர்பார்ப்பு! ரயில்வே நிர்வாகம் முன்வருமா?
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

10 மார்
2015
01:13

மதுரை : மதுரை ரயில்வே ஸ்டேஷனில் நெரிசலை தவிர்க்கவும், நகரின் வடக்கு பகுதி வளர்ச்சி பெறவும் கூடல்நகர் ஸ்டேஷனை மேம்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மதுரை ஸ்டேஷனுக்கு தினமும் 35 ஆயிரம் பயணிகள் வந்து செல்கின்றனர். 88 ரயில்கள் தினமும் இயக்கப்படுகின்றன. காலை, இரவு ஸ்டேஷனிற்கு வரும் வாகனங்களால் மேலவெளி வீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, ரயில்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டு வருகிறது.ஸ்டேஷனில் நிலவும் நெரிசலை தவிர்க்க கூடல்நகர் ஸ்டேஷனில் ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலதரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். மதுரையில் மின்மயமாக்கப்பணி நடந்த போது முக்கிய ரயில்கள் கூடல்நகரிலிருந்து இயக்கப்பட்டன.

முக்கிய ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுத்தால் மதுரை ஸ்டேஷனில் நெரிசலை குறைக்க முடியும். அதற்கு ஏற்ப கூடல்நகர் ஸ்டேஷனுக்கு செல்லும் ரோடு, தெரு விளக்கு, போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு வசதிகள உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து ரயில்வே நிர்வாகம் செய்ய வேண்டும்.தற்போது திண்டுக்கல், விழுப்புரம், குருவாயூர் உட்பட சில ரயில்கள் மட்டும் நின்று செல்கின்றன. பயணிகள் இறங்கவே பயப்படும் அளவிற்கு ஸ்டேஷன் பாதை முட்புதர்கள் மண்டி படுமோசமாக உள்ளது. ஆட்டோ வசதியும் இல்லை. பிளாட்பார மேற்கூரை போதியதாக இல்லை. கழிப்பறை முட்புதர்களுக்குள் உள்ளது.

பாண்டி, லோடுமேன்: கூடல்நகர் குட்ஷெட்டில் 300 லோடுமேன்கள் பணிபுரிகிறோம். இந்த ஸ்டேஷனை கடந்துதான் செல்ல வேண்டும். ஸ்டேஷனில் எந்த வசதியும் இல்லை. முட்புதர்களாக இருப்பதால் பாம்பு, பூச்சி தொல்லை அதிகம். பயணிகள் பயமின்றி வந்து செல்ல நடவடிக்கை தேவை.

விஜயராஜ், தனியார் வங்கி ஊழியர்: கூடல்நகரில் பாண்டியன், வைகை ரயில்கள் நின்று சென்றால், இப்பகுதியினர் இங்கேயே ஏற முடியும். அதுமட்டுமின்றி நகரின் வடக்கு பகுதியும் வளர்ச்சி பெறும். அதற்கு ஏற்ப கூடல்நகர் ஸ்டேஷனை கான்கர் பகுதிக்கு மாற்றியும் விளாங்குடி சந்திப்பிலிருந்து வாகனங்கள் வந்து செல்ல தனி ரோடு அமைக்கவும் வேண்டும்.

கோட்ட அதிகாரி ஒருவர், ''தற்போது கூடல்நகரில் தினமும் சராசரியாக 50க்கும் குறைவான டிக்கெட்கள் விற்பனையாகின்றன. பயணிகள் குறைவு. இருப்பினும் ஸ்டேஷனை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. படிப்படியாக ரயில்கள் நின்று செல்லவும் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

 

மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Loganathan - Madurai,இந்தியா
10-மார்-201507:23:18 IST Report Abuse
Loganathan ரயில் வரும் நேரங்களில் பயணிகளின் வசதிக்காக பேருந்துகள் ரயில் நிலையத்திலிருந்து இயக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X