விலைக்கு வாங்கிய நிலத்தில் ஆக்கிரமிப்பு : அகற்றக்கோரி கலெக்டரிடம் மக்கள் மனு
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

08 நவ
2010
23:48

தஞ்சாவூர்: விலைக்கு வாங்கி உயர்நீதிமன்ற உத்தரவுப்படி அங்கிருந்த ஆக்கிரமிப்புக்களை அகற்றக்கோரி பல முறை முறையிட்டும் பலனில்லை எனக்கோரி கிராம மக்கள் நேற்று தஞ்சை கலெக்டர் சண்முகத்திடம் மனுக்கொடுத்தனர். தஞ்சை மாவட்டம், பூதலூர் யூனியன் பாலையப்பட்டி தெற்கு பகுதியில் உள்ள மாதா கோவில் தெருவைச் சேர்ந்த ஆரோக்கியதாஸ் உட்பட 100க்கும் மேற்பட்டவர்கள் கலெக்டர் சண்முகத்திடம் கொடுத்த புகார் மனு விபரம்: நாங்கள் அனைவரும் பாலையப்பட்டி கிராமத்தில் வசிக்கிறோம். பாலையப்பட்டி தெற்கு நில உச்சவரம்புக்கு உட்பட்ட நிலத்தில் 2002ம் ஆண்டு நாங்கள் 53 பேர் கிரயம் செய்ய தொகை செலுத்தினோம். 2004 ஏப்ரல் 24ம் தேதி அந்த இடத்துக்கு அனைவரும் பட்டா பெற்றுள்ளோம். இந்த இடத்தை சுவாதீனம் எடுத்துக் கொடுக்க 2005 அக்டோபர் மாதம் அதிகாரிகள் வந்தனர்.


எந்த ஆதாரமும் இல்லாத நபர்கள் சட்டத்துக்கு விரோதமாக நாங்கள் வாங்கிய அதே இடத்தை ஆக்ரமிக்க முயற்சித்தனர். இதுபற்றி, வருவாய்த்துறையினர் முன்னிலையில் அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. மாவட்ட நிர்வாகத்திடம் பல முறை மனுக்கொடுத்துள்ளோம். பட்டா உள்ளவர்களுக்கு நிலத்தை அளந்து கொடுக்க வேண்டும் என பல முறை கேட்டுள்ளோம். தற்போது, அந்நபர்கள் எங்கள் இடத்தை ஆக்கிரமித்துள்ளனர். அத்துடன், அவர்கள் ஒரு சர்வே எண்ணை அதே இடத்துக்கு பெற்று பிரச்னை செய்கின்றனர். இங்கு ஆக்கிரமித்துள்ள அனைவருக்கும் ஏற்கனவே, வீடு, மாடி வீடு போன்றவை உள்ளது. உயர்நீதிமன்றத்தில் முறையிட்டு மூன்று முறை உத்தரவு வாங்கியும், மாவட்ட நிர்வாகம் பட்டாதாரர்களுக்கு நிலத்தை அளந்து கொடுக்கவில்லை. சட்டத்துக்கு விரோதமாக ஆக்கிரமித்துள்ளவர்களை அகற்றவும் இல்லை. எந்த ஆதாரமும் இன்றி குடியிருப்பவர்களை அகற்றவிட்டு பட்டாதாரர்களை முறையாக அந்த நிலத்தில் குடியமர்த்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


 

Advertisement
மேலும் தஞ்சாவூர் மாவட்ட  செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.