| குடந்தை பகுதி குறித்த புதிய இணையதளம் : குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் துவக்கிவைப்பு Dinamalar
குடந்தை பகுதி குறித்த புதிய இணையதளம் : குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் துவக்கிவைப்பு
Advertisement
 
Advertisement

பதிவு செய்த நாள்

08 நவ
2010
23:48

தஞ்சாவூர்: தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில்  மக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் சண்முகம் தலைமையில் நடந்தது. பொது விநியோகத்திட்டத்துக்கான ரேஷன் கார்டு, இலவச வீட்டுமனைப்பட்டா, வேலைவாய்ப்பு, கல்விக்கடன், முதியோர் உதவித்தொகை உட்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் கலெக்டரிடம் வழங்கினர். மனுக்களை பரிசீலித்து பொதுமக்கள் மனுக்கள் மீது குறித்த காலத்துக்குள் நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். முந்தைய மக்கள் குறைதீர் கூட்டங்களில் அளிக்கப்பட்ட மனுக்களின் மீது விரைவான நடவடிக்கையாக பேராவூரணி தாலுகாவைச் சார்ந்த நான்கு பேருக்கு இந்திராகாந்தி தேசிய விதவை உதவித்தொகை அளிக்கும் திட்டத்தின் கீழ் மாதம் 400 ரூபாய் பெறுவதற்கான உத்தரவை கலெக்டர் வழங்கினார்.


விவசாயிகள் சமூக பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் மகனை விபத்தில் பறிகொடுத்த ஒரத்தநாடு தாலுகா சென்னியவிடுதியை சேர்ந்த இடும்பாயி ரெங்கசாமிக்கு விபத்து மரண நிவாரண நிதியுதவியாக ஒரு லட்சத்து இரண்டாயிரத்து 500 ரூபாய், ஒருவருக்கு இயற்கை மரண நிவாரண நிதியுதவியாக 12 ஆயிரத்து 500 ரூபாய், இதே திட்டத்தின் கீழ் ஒரு நபருக்கு மகன், மகள் திருமண நிதியுதவியாக  3,000 ரூபாய், 5,000 ரூபாய்க்கான "செக்'குகளை கலெக்டர் சண்முகம் வழங்கினார். கும்பகோணத்தை சேர்ந்த சபாபதி என்பவர் கும்பகோணம் நகரத்தின் வரலாற்று, கோவில்கள், சிறப்புகள், வழிகள், அருகே உள்ள பிற கோவில், முக்கிய ஊர்களுக்கான தூரம், செல்லும் வழி போன்றவைகளை அறிந்து கொள்ளும் வகையில் வடிவமைத்துள்ள "தீதீதீ.டுதஞீச்ட்ணிணிடுத.ஞிணிட்' என்ற இணைய தளத்தையும் கலெக்டர் சண்முகம் துவக்கி வைத்தார். டி.ஆர்.ஓ., சுரேஷ்குமார், மாவட்ட வழங்கல் அலுவலர் சக்திவேல், சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை கலெக்டர் ரவிக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.


 



We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X