ஜீவா நூற்றாண்டு அறக்கட்டளை புற்றுநோய் மருத்துவமனை சிகிச்சை துவக்கம்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

08 நவ
2010
23:49

தஞ்சாவூர்: தஞ்சை விளார் பைபாஸ் ரோட்டில் புதிதாக கட்டப்பட்ட ஜீவா நூற்றாண்டு அறக்கட்டளை புற்றுநோய் மருத்துவமனையில் நேற்று முதல் சிகிச்சை துவங்கியது. மருத்துவமனையில் சிகிச்சை துவக்கம் மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகள் விவாத கூட்டம் நடந்தது. தரமான, மிகக்குறைந்த கட்டணத்தில் புற்றுநோய்க்கான மருத்துவ சிகிச்சை வழங்குவது குறித்து டாக்டர் ரமணன் ஆகியோர் பேசியதாவது: மேலை நாடுகளில் ஒரு லட்சம் பேரில் 200 முத்ல 300 பேர் புற்றுநோயாளிகளாக உள்ளனர். ஆனால், இந்தியாவில் மிகக்குறைவாக ஒரு லட்சத்துக்கு 100 பேர் மட்டுமே புற்றுநோயாளிகளாக உள்ளனர் என்பது நிம்மதி அளிக்கிறது. வளர்ந்து வரும் மக்கள் தொகை, அதிகரிக்கும் வாழ்நாள், பெருகி வரும் மாசு ஆகியவை 2020 - 2030ல் இந்தியாவும், சீனாவும் உலகில் அதிகமான புற்றுநோயாளிகளை கொண்ட நாடாகும் ஆபத்து உள்ளது.


புற்றுநோயாளிகளுக்கான மருத்துவம், உறுப்புக்களை இழக்காமல், வாழ்நாளை அதிகரிப்பதாக வளர்ந்து வருகிறது. புற்றுநோய்க்கான மருத்துவம், கதிர்வீச்சு, அறுவை சிகிச்சை, நுண்ஆய்வு, மருத்துவ ஆலோசனை, நம்பிக்கையூட்டல் என அனைத்தும் ஒருங்கிணைந்த முழுமையான மருத்துவம் கிடைக்க செய்ய வேண்டும். "ஒருங்கிணைந்த புற்றுநோய் மருத்துவம்,' என்ற தலைப்பில் டாக்டர் ஜெகதீஷ்சந்திரபோஸ் பேசுகையில், ""உயர்ந்த, தரமான, ஏற்றதாழ்வற்ற மருத்துவம் வழங்க இம்மருத்துவமனை அமைய வேண்டும். போட்டி உணர்வின்றி தஞ்சை மாவட்டத்தின் அனைத்து மருத்துவர்களையும், மருத்துவமனைகளையும் தொடர்டு கொண்டு தரமான மருத்துவம் கிடைக்கச் செய்ய வேண்டும்.நோய் பற்றி தேவையற்ற பயத்துடன் வரும் மக்களுக்கு பயத்தை போக்கி, நோயின் உண்மை தன்மை, மருத்துவ வாய்ப்புகள், குணமாகும் வாய்ப்புகள் குறித்து தெளிவாக விளக்க வேண்டும்.  இவ்வாறு அவர் கூறினார். கடந்த 14 ஆண்டுக்கு முன் மார்பக புற்றுநோய் மருத்துவம் பெற்று நலமாக வாழும் சரஸ்வதி என்பவர் தனது அனுபவத்தை விளக்கினார். டாக்டர் மருதுதுரை நன்றி கூறினார்.


 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X