700 மீட்டர் உயரத்தில் வசித்த போதைமலை குள்ளர்கள்: அடையாளங்களை அழித்து வரும் கும்பலால் அதிர்ச்சி
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

21 ஜன
2016
07:38

நாமகிரிப்பேட்டை: கடல்மட்டத்தில் இருந்து, 700 மீட்டர் உயரத்தில் உள்ள போதைமலை பகுதியில், பல நூற்றாண்டுக்கு முன் வாழ்ந்த குள்ளர்களின் வசிப்பிடங்கள், சிலர் அழித்து வருவதாக, அப்பகுதியில் வசிக்கும் மழைவாழ் மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.


நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த, போதமலை பகுதியில் கீழூர், மேலூர் ஆகிய இரண்டு கிராமங்கள் உள்ளன. வடுகம் மலை அடிவாரத்தில் இருந்து, ஏழு கிலோ மீட்டர் தொலைவில் கீழுரும், அங்கிருந்து, இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் மேலூரும் உள்ளது. கடல் மட்டத்தில் இருந்து, 700 மீட்டர் உயரத்தில், இந்த கிராமங்கள் உள்ளன. கொல்லிமலைப்பகுதியை சேர்ந்த மலைவாழ் மக்கள் தான், பல நூறு ஆண்டுக்கு முன், இப்பகுதியில் குடியேறி உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த, 13ம் நூற்றாண்டு கல்வெட்டுகள் கீழூரில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இம்மலையில் அதீத சக்தி வாய்ந்த குள்ளவர்கள் வாழ்ந்த வீடு இருப்பதாகவும், அப்பகுதியில் புதையல் இருக்க வாய்ப்புள்ளதாகவும் கூறி, பல்வேறு மாவட்டங்களில் இருந்து, சாமியார்கள் உள்ளிட்ட பலர் வந்து செல்கின்றனர். மேலும், அப்பகுதிக்கு செல்பவர்கள், பாண்டியராஜன் எனப்படும் அரண்மனை வீடுகளை சேதப்படுத்தி வருவதாக புகார் எழுந்துள்ளது.


பாண்டியராஜன் வீடுகள்: கீழூரில் இருந்து, 3 கிலோ மீட்டர் அல்லது மேலூரில் இருந்து, 2 கிலோ மீட்டர் வனப்பகுதியில் நடந்து சென்றால், மிகப்பெரிய பாறை உள்ளது. இங்கு தான் பாண்டிய ராஜன் வீடு, அரண்மனை என்றக்கப்படும், சிறிய வீடுகள் உள்ளன. மூன்று அடி உயரம், அகலம், நான்கு அடி நீளம் உள்ள பாறைகளால் உருவாக்கப்பட்ட, 20க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. வாயில் பக்கம், ஒரு அடி விட்டத்தில் நுழைவாயில் அமைத்துள்ளனர். ஒவ்வொரு வீட்டின் உள்ளேயும் நுழைவாயிலை மூடுவதற்கு பலகை கற்களை வைத்துள்ளனர். மேலும், இந்த பாறையின் மேலே, கோபுரம் போல், சுற்றி கற்களை அடுக்கி வைத்துள்ளனர். ஒவ்வொரு வீட்டின் மேலேயும் கூரையாக, 20 டன் எடையுள்ள பலகை கற்களை வைக்கப்பட்டுள்ளன. மேலும், கற்களால் உருவாக்கப்பட்ட, அரை அடி நீளமே உள்ள கற்கால ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.


அரசு நடவடிக்கை தேவை: இதுகுறித்து, கீழூர் பகுதியை சேர்ந்த பழனிசாமி கூறியதாவது: என் தாத்தா, அவரது அப்பா, ஆகியோர் சொல்லி தான் குள்ளர்கள் வசித்த பாண்டியராஜன் வீடுகள் பற்றி தெரியும். இங்கு, சர்வ சக்தி படைத்த குள்ளர்கள் வசித்ததாக இப்பகுதியை சேர்ந்த மலைவாழ் மக்கள் நம்பி வருகிறோம். அவர்கள், இரண்டு அடி மட்டுமே இருந்ததாகவும், அதற்கு ஏற்றார் போல், கற்களால் அமைக்கப்பட்ட வீடுகளை உருவாக்கி வசித்துள்ளனர். குள்ளர்களின் வீடுகளில் கூரைகளாக போடப்பட்டுள்ள கற்களை, 200 பேர் சேர்ந்தால் கூட தூக்க முடியாது. ஆனால், அதீத சக்தி வாய்ந்த குள்ளர்கள், எளிதாக தூக்கி வைத்துள்ளனர். எனவே இவர்கள் நிறைய புதையல் வைத்திருப்பதாக நம்பி, வெளி நபர்கள் நிறைய பேர் வந்து செல்கின்றனர். அவர்கள், இந்த வீடுகள், மற்றும், இப்பகுதியில் அரண்மனை போல் கற்களால் அமைக்கப்பட்ட கோபுரங்களை சேதப்படுத்தியுள்ளனர். குள்ளர்கள் வசித்த இப்பகுதியை பாதுகாக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


மூதாதையர் நினைவு: இதுகுறித்து, தமிழ் மற்றும் கல்வெட்டுகளை ஆய்வு செய்து வரும், வெள்ளக்கல்பட்டி தமிழாசிரியர் துரைசாமி கூறியதாவது: போதைமலையில் உள்ள இந்த வீடுபோன்ற அமைப்பு, 5,000 ஆண்டுகளுக்கு முந்தைய நடுகற்கள் வகையை சேர்ந்ததாக இருக்கலாம். புதிய கற்காலத்தை சேர்ந்த ஆயுதங்களும், அங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளது. எனவே, புதிய கற்கால மனிதர்கள் தங்களது மூதாதையர் நினைவாக இந்த வீடுகளை கட்டியிருக்கலாம். மற்றபடி, குள்ளர்கள் வாழ்ந்தார்கள் என்பதற்கான எவ்வித ஆதாரமும் இல்லை. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கற்களை எப்படி பலகையாக வெட்டினர். வட்டமாக நுழைவாயில் எப்படி அமைத்தனர் என்ற விவரங்கள் என்னிடம் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.


 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X