மதுரை விட்டவாசலை பாதுகாக்க வழக்கு
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

04 மார்
2016
02:04

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே, பழமையான நினைவுச் சின்னமான விட்ட

வாசலை பாதுகாக்க நடவடிக்கை கோரிய வழக்கில், மத்திய தொல்லியல்துறை விளக்கமளிக்க அவகாசம் அளித்து, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஒத்திவைத்தது.

மதுரை வழக்கறிஞர் பாண்டிய அரசன் தாக்கல் செய்த பொதுநல மனு:மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அம்மன் சன்னதி தெருவில், விட்டவாசல் உள்ளது. இதை 13 ம் நுாற்றாண்டில் பாண்டிய மன்னர்கள் கட்டினர். மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றி இருந்த கோட்டையின் ஒரு வாசலாகவும், நகர் எல்லையில் வாசலாகவும் விட்டவாசல் இருந்தது. மதுரையில் 1857 ல் ஜான் பிளாக்பேர்ன் கலெக்டராக இருந்தபோது நகரின் எல்லை, நான்கு புறமும் விரிவுபடுத்தப்பட்டது. விட்டவாசலை தவிர்த்து, மற்ற வாசல்கள் அகற்றப்பட்டன.

1935ல் அப்போதைய நகர் செயற்பொறியாளர் ஜி.எப்.பிலிப் பெயரில், விட்டவாசலில்

கல்வெட்டு குறிப்பு உள்ளது. அதில், 'இது பாண்டிய மன்னர் கோட்டையின் நுழைவாயிலாக இருந்தது. அதை யாரும் அகற்ற, அசுத்தப்படுத்த, மாற்றம் செய்யவோ கூடாது,' என உள்ளது.

அதிகாரிகளின் அலட்சியத்தால், விட்டவாசலை ஆக்கிரமித்து கடைகள் வைத்துள்ளனர். விட்டவாசலை சேதப்படுத்தி, கான்கிரீட் கட்டுமானம் செய்துள்ளனர். விட்டவாசலின் புனிதத் தன்மையை கெடுத்துவிட்டனர். விட்டவாசலை பாதுகாக்க நடவடிக்கை கோரி, மத்திய அரசுக்கு மனு அனுப்பினேன்.

ஐ.ஏ.எஸ்.,அதிகாரி தலைமையில் தொல்லியல் நிபுணர்கள், சர்வேத்துறை அதிகாரிகள் குழு அமைத்து, பழமையான சின்னமான விட்டவாசலை பழைய நிலைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும். அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள கட்டடங்களை அகற்றி, விட்டவாசலை பாதுகாக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு, பாண்டிய அரசன் மனு செய்திருந்தார்.நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சி.டி.செல்வம் கொண்ட அமர்வு விசாரித்தது. உதவி சொலிட்டர் ஜெனரல் ஜி.ஆர்.சாமிநாதன், “இவ்விவகாரம் தொடர்பாக மத்திய தொல்லியல்துறை

அதிகாரிகளிடம் விபரம் கோர வேண்டியுள்ளது,” என்றார். நீதிபதிகள் மார்ச் 10 க்கு ஒத்திவைத்தனர். மனுதாரர் வழக்கறிஞர் சுரேஷ்குமார் ஆஜரானார்.

 

மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X