போலீஸ் செய்திகள்...
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

17 மார்
2016
21:32


சிறுமிகளுக்கு திருமணம் செய்ய முயன்றவர் கைது

திருவாடானை: திருப்பாலைக் குடியை சேர்ந்த மேகனா,15, என்ற சிறுமிக்கும், அதே கிராமத்தை சேர்ந்த செந்தில்குமாருக்கும் திரு மணம் நடத்த முயற்சி செய்வதாக மாவட்ட சமூக நல அலுவலர் குணசேகரி, திருவாடானை மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். திருமண முயற்சிக்கு காரணமான மோகனாவின் தந்தை மோகன்ராஜ், தாய் செல்வி, செந்தில்குமார் மற்றும் தாயாரம்மாள் ஆகிய 4 பேரை இன்ஸ்பெக்டர் சசிகலா தேடி வருகிறார்.


* தொண்டி அருகே முள்ளிமுனை கிராமத்தை சேர்ந்த சிங்கமுகம் மகள் சிநேகா,15. இவருக்கும் திருப் பாலைக்குடியை சேர்ந்த அரிராம னுக்கும் திருமணம் நடத்த முயன்ற தால் அரிராமனை திருவாடானை மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சசிகலா கைது செய்தார். அவரது தந்தை ராமமூர்த்தியை தேடிவருகிறார்.


21 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது

ராமநாதபுரம்: ராமநாதபுரம் கேணிக்கரை இன்ஸ்பெக்டர் சீனிவாசகன் தலைமையில் போலீசார் குயவன்குடி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு புதருக்குள் மறைத்து வைத்து கஞ்சா விற்ற 3 பேர் சிக்கினர். விசாரணையில் வாலாந்தரவைச் சேர்ந்த கார்த்திக்,35, ராஜேஸ்வரன்,34, அருண்குமார்,32, என்பதும், இவர்கள் கஞ்சா விற்றதும் தெரிந்தது. அவர்களை கைது செய்த போலீசார் 21 கிலோ கஞ்சா, ரூ.12 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

வைகையில் மணல் திருட்டு 3 டிராக்டர்கள் பறிமுதல்

பரமக்குடி: பரமக்குடி வைகை ஆற்றில் நேற்று பகல் 3 மணிக்கு சிலர் திருட்டு மணல் அள்ளுவதாக தகவல் வந்தது. அங்கு சென்ற தாசில்தார் செய்யதுமுகம்மது, மண்டல துணைத் தாசில்தார் மீனாட்சி ஆகியோர் அங்கிருந்த 3 டிராக்டர்களை பறிமுதல் செய்தனர். டிரைவர்கள் தப்பியோடினர். விசாரணையில், இளமனூர் ஊராட்சி தலைவர் சத்தியேந்திரன், செல்வலிங்கம், ராமநாதபுரம் முத்துகிருஷ்ணன் ஆகியோரது டிராக்டர்கள் என தெரிய வந்தது. இது குறித்து சப் கலெக்டர்


சமீரன் விசாரணை செய்து வருகிறார்.எஸ்.ஐ., யை தாக்கியவர் கைது

பரமக்குடி: பரமக்குடி அருகே சத்திரக்குடி காவல் நிலையத்தில் சிறப்பு எஸ்.ஐ.,யாக பணியாற்றி வருபவர் மீனாட்சிஅய்யான். இவர் நேற்று சத்திரக்குடி பேருந்து நிறுத்தம் அருகே பணியில் இருந்தார். அப்போது டிராபிக் நெரிசலில் நின்று கொண்டிருந்த சரக்கு வாகன டிரைவருடன் ஏற்பட்ட தகராறில், மென்னந்தியைச் ÷சர்ந்த டிரைவர் வீரபாண்டி, 20, எஸ்.ஐ.,யை தாக்கினார். வீரபாண்டியை சத்திரக்குடி போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.


வரதட்சணை கொடுமை கணவர் கைது

கீழக்கரை: ரெகுநாதபுரம் மேல வலசையை சேர்ந்தவர் கண்ணன், 33. இவர் திருப்பூரில் மளிகை கடை வைத்துள்ளார். இவருக்கும் பெரிய பட்டினம் ஜலாலியா நகரை சேர்ந்த ஹேமலதா, 30, என்பவ ருக்கும் கடந்த 2008ல் திருமணம் நடந்தது. 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். தனக்கு, ரூ.30 லட்சமும், 10 ஏக்கர் நிலமும் வரதட்சணை கேட்டதோடு இரும்புக் கம்பியால் தாக்கி கண்ணன் ஹேம லதாவை வீட்டை விட்டு விரட்டி யுள்ளார். இதுகுறித்து ஹேமலதா கீழக்கரை அனைத்து

மகளிர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ் பெக்டர் செல்வி வழக்குபதிந்து கண்ணனை கைது செய்தார். மாமனார் கோபால், மாமியார் முனீஸ்வரி, சரவணன் ஆகியோரை போலீசார் தேடிவருகின்றனர்.

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X