போலீஸ் செய்திகள்...
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

01 மே
2016
21:10

டாஸ்மாக் விற்பனையாளர் மீது வழக்கு: மதுவிற்றவர் கைது

முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே திருவரங்கத்தை சேர்ந்தவர் அப்துல் குத்துாஸ், 36. இவர் திருவரங்கத்தில் மதுபாட்டில்கள் விற்றுள்ளார். கீழத்துாவல் இன்ஸ்பெக்டர் ராஜசேகர் அப்துல்குத்துாசை கைது செய்து, 95 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தார். அப்துல் குத்துாசுக்கு மதுபாட்டில்களை விற்பனை செய்த, திருவரங்கம் டாஸ்மாக் கடை விற்பனையாளர் சோலைராஜ் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


தி.மு.க., அ.தி.மு.க.,மோதல் 5 பேர் மீது வழக்கு

திருவாடானை: திருவாடானை தொகுதி பாண்டுகுடியில் தி.மு.க.வினர் வேன் பிரசாரம் செய்தனர். அப்போது, அ.தி.மு.க.,வினர் அங்கு சென்று முதல்வரைப் பற்றி தரக்குறைவாக பேசக்கூடாது, என்றனர். இதில், இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. தொண்டி போலீசார் சமரசப்படுத்தினர்.

பிரசாரம் செய்வதை அ.தி.மு.க.,வினர் தடுப்பதாக தி.மு.க.,வை சேர்ந்த ஜேம்ஸ் புகாரின்படி ஆறுமுகம், காளிமுத்தன் மீதும், முதல்வர் குறித்து தி.மு.க.,வினர் தரக்குறைவாக பேசுவதாக அ.தி.மு.க., வை சேர்ந்த ஆறுமுகம் புகாரின் படி ஜேம்ஸ், அய்யப்பன், முத்துராமன் ஆகியோர் மீதும் தொண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


போலீசாரின் மிரட்டலுக்கு பயந்து இளைஞர் தற்கொலை

முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே இளஞ்செம்பூரை சேர்ந்த லிங்கம், 33. இவர் மீது நேற்று இரவு செயின் பறிக்க முயற்சி, அத்துமீறி மற்றொரு வீட்டிற்குள் நுழைந்தது என பெண்கள் இருவர், இளஞ்செம்பூர் போலீசில் புகார் தெரிவித்தனர்.

இதனையடுத்து இளஞ்செம்பூர் போலீசார் விசாரணைக்கு லிங்கத்தின் வீட்டிற்கு சென்றனர். ஆனால், போலீசுக்கு பயந்த லிங்கம், போலீசாரிடம் நான் வரமுடியாது எனக்கூறி மறுப்பு தெரிவித்தார். போலீசாரும் லிங்கத்தின் வீட்டைவிட்டு செல்லாமல் காத்திருந்ததால், போலீசுக்கு பயந்து இளைஞர் லிங்கம் வீட்டிற்குள் துாக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து லிங்கத்தின் அத்தை காளிமுத்து, 65, போலீசாரின் மிரட்டலால் மருமகன் லிங்கம் தற்கொலை செய்து கொண்டதாக, இளஞ்செம்பூர் போலீசில் புகார் தெரிவித்தார்.


 

மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X