போலீஸ் செய்திகள்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

13 ஜூன்
2016
21:51

அரிவாள் வெட்டு கணவன் கைது

தேவகோட்டை: தேவகோட்டை அருகே கட்டனுாரைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி பரிமளா.32., அதே ஊரைச் சேர்ந்தவர் கணேசன் 40., இவரது மனைவி பானுமதி. திருப்பதி மகளும், கணேசன் மகளும் சூராணம் பள்ளியில் ஒன்றாக படிக்கின்றனர். இரண்டு குடும்பத்திலும் முன்விரோதம் காரணமாக பேசிக் கொள்வதில்லை. நேற்று திருப்பதி மகள் பஸ்சுக்கு நேரமாகிவிட்டது என கணேசன் மகளை அழைத்துள்ளார்.

இருவரும் சென்றுவிட்டனர். இந்நிலையில் இரு குடும்பத்திற்கு பகை இருக்கும் நிலையில் பஸ்சிற்கு எப்படி கூப்பிடலாம் எனக் கேட்டு கணேசன், திருப்பதி மனைவி பரிமளாவிடம் தகராறு செய்து அரிவாளால் பரிமளாவை தலையில், இடுப்பு பகுதிகளில் வெட்டினார். அவருக்கு ஆதரவாக கணேசன் மனைவி பானுமதியும் சேர்ந்து தாக்கியுள்ளார்.

படுகாயமடைந்த பரிமளா சிவகங்கை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். பரிமளா கொடுத்த புகாரின் பேரின் திருவேகம்பத்துார் போலீசார் வழக்கு பதிவு செய்து கணேசனை கைது செய்தனர். மனைவி பானுமதியை தேடி வருகின்றனர்.

மூதாட்டியிடம் செயின் பறிப்பு

திருப்புத்துார்: திருப்புத்துார் அருகே செவ்வூரில் மூதாட்டியிடம் 4 பவுன் செயினை பறித்துச் சென்ற வாலிபரை பூலாங்குறிச்சி போலீசார் கைது செய்தனர்.

செவ்வூரைச் சேர்ந்த லெட்சுமணன் மனைவி ரெங்கம்மாள் செவ்வூரில் கடை நடத்தி வருகிறார். கடந்த 29ம் தேதியன்று டூ வீலரில் வந்த இருவர் இட்லி வேண்டும் என்று ஆர்டர் செய்து சென்றனர்.

மறுநாள் அதிகாலை 5.30 மணிக்கு 'இட்லி ரெடியாகி விட்டதா' என்ற பேச்சுக் கொடுத்தவாறே வாலிபர் ஒருவர் ரெத்தினம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் செயினை பறித்தார். பின்னர் இருவரும் டூ வீலரில் சென்று விட்டனர்.

மூதாட்டி கூறிய அடையாளங்களை வைத்து தனிப்பிரிவு போலீசார் மர்ம நபரை அடையாளம் கண்டறிந்தனர். பையூரைச் சேர்ந்த சின்னையா மகன் வீரபாண்டியன்,27 என்பவரை இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி கைது செய்து 4 பவுன் நகையையும் கைப்பற்றினார்.


 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X