போலீஸ் செய்திகள்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

25 ஜூன்
2016
20:57

இளம்பெண்பலாத்காரம்

சிவகங்கை: இளையான்குடி,சேத்துாரணி ராசு,45. இவரது மகளான 21 வயது இளம்பெண் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர். இவர் நேற்று முன்தினம் மாலை இயற்கை உபாதைக்காக வீட்டின் அருகே உள்ள மறைவிடத்திற்கு சென்ற போது,அதே ஊரைச் சேர்ந்த தர்மராஜ் என்ற சுழியன், 21, வழிமறித்து தாக்கியுள்ளார். பின்னர் பெண்ணின் வாயை பொத்தி, கற்பழித்துள்ளார்.

ராசு கொடுத்த புகாரின் பேரில் இளையான்குடி போலீசார் வழக்கு பதிந்து, தர்மராஜ் என்ற சுழியனை கைது செய்தனர்.


வரதட்சணைகணவர் கைது


காரைக்குடி: காரைக்குடி பெரியார்நகர் வீரமாகாளியம்மன் கோயில் தெரு பாண்டியன்,29. இவருக்கும் கற்பகம்,23 என்பவருக்கும் 2013 பிப்.14-ம் தேதி திருமணம் நடந்தது. மூன்று வயதில் பெண் குழந்தை உள்ளது. திருமணம் முடிந்த சில நாட்களில் பாண்டியன், அவரது தந்தை நாகு,59, தாயார் ராஜம்மாள்,52 துாண்டுதலின் பேரில், மனைவியிடம் வரதட்சணை கேட்டு, குடித்து விட்டு,கொடுமை படுத்தியுள்ளார். மாமியார் ராஜம்மாள் ஓட்டலில் வேலை பார்க்க சொல்லி கற்பகத்தை கொடுமைபடுத்தியுள்ளார்.

கடந்த 24-ம் தேதி அதிகாலை 12.30 மணிக்கு, பாண்டியன் தனது மனைவி கற்பகத்திடம்,தாலி செயினை கேட்டுள்ளார். அவர் மறுக்கவே தாக்கியுள்ளார். காயம் அடைந்த கற்பகத்தை அக்கம் பக்கத்தினர் காரைக்குடிதனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். புகாரின் பேரில், மகளிர் இன்ஸ்பெக்டர் ராதுராஜி வழக்கு பதிந்து, பாண்டியனை கைது செய்தார்.


நகை திருட்டு

சிவகங்கை: கீழச்சிவல்பட்டி முத்தலிபு மகன் ராஜா முகம்மது, 36. இவர் மகனுக்கு பெண் பார்ப்பதற்காக,மனைவியுடன் வெளியூர் செல்ல புறப்பட்டார். அப்போது ராஜா முகம்மது அவசர வேலையாக வெளியே சென்று விட்டார். அவரது மனைவி பீரோவை திறந்து, அதிலிருந்த 9 பவுன் தங்கச்சங்கிலி,1 பவுன் மோதிரம் ஆகியவற்றை அணிவதற்காக எடுத்துள்ளார்.

அருகில் இருந்த மேஜை மீது வைத்து விட்டு,முகம் கழுவ பாத்ரூம் சென்று விட்டு திரும்பி வந்து பார்த்தபோது நகைகளை காணவில்லை. அதற்குள் வீடுபுகுந்த மர்மநபர் நகைகளை திருடிச் சென்று விட்டார். அவற்றின் மதிப்பு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் ஆகும். ராஜா முகம்மது கொடுத்த புகாரின் பேரில், கீழச்சிவல்பட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


வாலிபர் தற்கொலை

திருப்புத்துார்: திருப்புத்துார் பொன்னாங்குடி நல்லதம்பி மகன் ராஜமாணிக்கம்,25.

இவர் சென்னையில் வேலை பார்த்துள்ளார். மூன்று நாட்களுக்கு முன்பு ஊருக்குத் திரும்பியவர் வீட்டில் தங்கியிருந்தார்.நேற்று காலை குடும்பத்தினர் மாடியில் ராஜமாணிக்கம் தங்கியிருந்த அறைக்கு சென்ற போது, அவர் வேட்டியால் துாக்கிட்டு இறந்து போனது தெரிந்தது. திருக்கோஷ்டியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

 

மேலும் சிவகங்கை மாவட்ட  செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X