ரூ.1.10 கோடியில் சண்முகா நதி அணை பராமரிப்பு பணிகள்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

09 ஜூலை
2016
22:57

உத்தமபாளையம்: ரூ. ஒரு கோடியே 10 லட்சம் மதிப்பீட்டில் சண்முகாநதிஅணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதற்கான ஆரம்பகட்ட பணிகள் துவங்கியுள்ளது.

சண்முகா நதி அணை முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரால் கட்டப்பட்டது. ஹைவேவிஸ் மலையில் இருந்து கிடைக்கும் தண்ணீர் மற்றும் வறட்டாறு போன்றவற்றில் தண்ணீரை தேக்கி சண்முகாநதி இது கட்டப்பட்டது.

இந்த அணையின் மூலம் ஆனைமலையன்பட்டி, ராயப்பன்பட்டி, சின்னஓவுலாபுரம், கன்னிசேர்வைபட்டி, ஓடைப்பட்டி உள்ளிட்ட பல கிராமங்களை சேர்ந்த ஆயிரத்து 640 ஏக்கர் புன்செய் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இப்பகுதியில் நுாற்றுக்கணக்கான கிணறுகள் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்கு பயன்படுகிறது.

அனுமதி

பல ஆண்டுகளை கடந்தும் பராமரிப்பு பணிகள் செய்யவில்லை. எனவே பொதுப்பணித்துறை அதற்கு மதிப்பீடுகள் தயாரித்து அரசின் அனுமதியை பெற்றது. அதைத்தொடர்ந்து கோரப்பட்ட டெண்டர் இறுதி செய்யப்பட்டு, பணிகள் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதன்பேரில் தற்போது சண்முகாநதிஅணையில் பராமரிப்பு பணிகணிக்கான ஆரம்பகட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பொதுப்பணித்துறையினர் கூறுகையில், 'அணையில் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு செல்ல வசதியாக நடைமேடை அமைக்கவும், பல்வேறு பராமரிப்பு பணிகள் செய்யவும் நிதி அனுமதிக்கப்பட்டுள்ளது. டெண்டர் இறுதி செய்யப்பட்டு ஒப்பந்ததாரருக்கு அனுமதி தரப்பட்டுள்ளது. சண்முகா நதி அணையை பொறுத்தவரை தென்மேற்கு பருவமழையால் பயனடையாது. வடகிழக்கு பருவமழை தான் அணைக்கு தண்ணீர் வரத்து இருக்கும். எனவே இப்போது பணிகள் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது,' என்றனர்.

 

மேலும் தேனி மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X