சென்னை மாவட்ட மூத்தோர் தடகளம்:300 வீரர், வீராங்கனைகள் பங்கேற்று அசத்தல்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

29 ஆக
2016
21:37

பெரியமேடு;சென்னை மாவட்ட அளவிலான, மூத்தோர் தடகள போட்டியில், சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்று அசத்தியுள்ளனர்.

சென்னை மாவட்ட மூத்தோர் தடகள சங்கம் சார்பில், மாவட்ட அளவிலான, 14வது தடகள போட்டி, சென்னை பெரியமேடு நேரு விளையாட்டு அரங்கில், நேற்று முன்தினம் நடந்தது.

அதில், சென்னையைச் சேர்ந்த, 35 வயதுக்கு மேற்பட்ட வீரர், வீராங்கனைகள், 85 வயதுக்கு மேற்பட்ட சீனியர் வீரர், வீராங்கனைகள் என, 300க்கும் மேற்பட்ட மூத்தோர் பங்கேற்று அசத்தி உள்ளனர்.


அதில், 5 கி.மீ., நடை ஓட்டம், ஓட்டப் பந்தயத்தில், 100 மீ., 200 மீ., 400 மீ., 800 மீ., 1,500 மீ., 5,000 மீ., 10 ஆயிரம் மீட்டர் போட்டிகளிலும்; சங்கிலி குண்டு எறிதல், குண்டு எறிதல், வட்டு, ஈட்டி எறிதலிலும் முதிய வீரர், வீராங்கனைகள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், மும்முறை தாண்டுதல், கோல் ஊன்றி தாண்டுதல் போன்ற போட்டிகளும் நடந்தன.போட்டிகளில் பங்கேற்று முதலிடம் பிடித்தவர்களுக்கு தங்க பதக்கம், இரண்டாம் இடம் பிடித்தவர்களுக்கு வெள்ளி பதக்கம், மூன்றாம் இடம் பிடித்தவர்களுக்கு வெண்கல பதக்கங்களுடன், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

வெற்றி பெற்றவர்கள், மாநில போட்டியிலும், மாநில போட்டியில் வெற்றி பெற்றவர்கள் தேசிய போட்டியிலும் பங்கேற்க உள்ளனர்.

 

மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X