| ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்திற்குரூ.5 லட்சம் வழங்கிய மாணவர்கள் Dinamalar
ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்திற்குரூ.5 லட்சம் வழங்கிய மாணவர்கள்
Advertisement
 
Advertisement

பதிவு செய்த நாள்

29 ஆக
2016
21:37

சென்னை;தரமணியில் உள்ள ரோஜா முத்தையா ஆராய்ச்சி நுாலகத்திற்கு,

திருச்சி தனியார் பள்ளி மாணவர்கள், ஐந்து லட்சம் ரூபாய் நிதி வழங்கி உள்ளதை, நுாலகத் துறையினர் வரவேற்றுள்ளனர். திருச்சி, சமயபுரத்தில் உள்ள, எஸ்.ஆர்.வி., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், கடந்த, 27ம் தேதி, 'அறிஞர் போற்றுதும் அறிஞர் போற்றுதும்' என்ற தலைப்பில், தமிழ் அறிஞர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது.


ஆவண காப்பகம்;அதில், சென்னை, தரமணியில் உள்ள ரோஜா முத்தையா ஆராய்ச்சி நுாலகத்தின் வளர்ச்சிக்காக, ஐந்து லட்சம் ரூபாய் சிறப்பு நிதி, மாணவர்களின் சார்பாக வழங்கப்பட்டது. இதுகுறித்து, ரோஜா முத்தையா ஆராய்ச்சி நுாலகத்தின் இயக்குனர், சுந்தர் கூறியதாவது:

சென்னையில் உள்ள, ரோஜா முத்தையா ஆராய்ச்சி நுாலகம், தமிழ் நுால்கள் மற்றும் இதழ்களுக்கான ஆவண காப்பகமாக உள்ளது. இதன் வளர்ச்சிக்காக, பெரு நிறுவனங்களிடமிருந்து, தேவையான வைப்பு நிதியை திரட்டி வருகிறோம்.


ஊக்கப்படுத்தும் விதத்தில்...இச்சூழலில், சமயபுரம் எஸ்.ஆர்.வி., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்களிடமிருந்து கிடைத்திருக்கும் இந்த நிதி, நுாலகத்தை ஊக்கப்படுத்தும் விதமாக அமைந்துள்ளதோடு, மாணவர்களிடம், ஆராய்ச்சி நுாலகத்தைப் பற்றிய பெரிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதையும் நிரூபிப்பதாக உள்ளது. இதன் மூலம், ஆவணப் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு மற்ற பள்ளி மாணவர்களிடம் ஏற்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்