வளமான பாரம்பரியம் கொண்ட "இந்திய சென்சஸ்':15-வது கணக்கெடுப்பு பணி பிப்.9-ல் துவக்கம்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

15 ஜன
2011
02:54

திண்டுக்கல்:தேசிய முக்கியத்துவம் வாய்ந்த மக்கள்தொகை கணக்கெடுப்பு(சென்சஸ்-2011) வரும் பிப்.9ல் துவங்கி பிப்.28ல் முடிகிறது. சென்சஸ் சிறப்புக்களை அறிவோம்.முதல் சென்சஸ்: முதல் இந்திய கணக்கெடுப்பு 1872ல் நடந்தது. வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு காலகட்டங்களில் நடந்தது.1881ல் நாடு முழுவதும் ஒரே நேரத்தில் நடந்தது. அதுமுதல் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை சென்சஸ் நடக்கிறது. தற்போது நடப்பது 15-வது கணக்கெடுப்பு. சுதந்திரத்திற்கு பின் 7-வது கணக்கெடுப்பு.


நோக்கம்: ஐந்தாண்டு, ஓராண்டு திட்டங்கள் உட்பட பல்வேறு திட்டங்களுக்கான அடிப்படை புள்ளி விபரங்களுக்கு சென்சஸ் அவசியம். பார்லிமென்ட், சட்டசபை, உள்ளாட்சி அமைப்புகளின் உறுப்பினர்களின் எண்ணிக்கையை நிர்ணயிக்க சென்சஸ் புள்ளி விபரம் தேவைப்படுகிறது.


* குறிப்பிட்ட சமயத்தில் நாடு மற்றும் நாட்டு மக்களை ப் பற்றி அறிய தகவல்களை தருகிறது. கல்வியாளர்கள், வியாபாரிகள், தொழிலதிபர்கள், திட்டமிடுபவர்கள் மற்றும் தேர்தல் அதிகாரிகள் ஆகியோரின் தேவை, பொதுநிர்வாகத்தை திறம்பட நிர்வகிக்க சென்சஸ் விபரம் தேவைப்படுகிறது. இப்பணியை மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் மேற்கொள்கிறது.
சென்சஸ்-2011: வீட்டுபட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு என இரு கட்டங்களாக பணி நடக்கிறது. முதல் கட்டமாக கடந்த ஜூன் 1 முதல் ஜூலை 15 வரை வீட்டுபட்டியல் தயாரிக்கப்பட்டது. 2ம் கட்ட பணி பிப். 9 முதல் பிப். 28 வரை நடக்கிறது. மார்ச் முதல் தேதி அதிகாலை 00.00 மணியை கணக்காக கொண்டு இக் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. மார்ச் 1 முதல் மார்ச் 5 வரை சரிபார்க்கும் பணி நடக்கிறது. அதுவரை எந்த ஊரிலும் பெயர் சேர்க்கப்படாதவர்கள் இருந்தால் அவர்களும் கணக்கெடுப்பில் கொண்டு வரப்படுவர்.


29 கேள்விகள்: நபர் விபரம், குடும்ப தலைவருக்கு உறவு முறை, இனம், பிறந்த தேதி, வயது, திருமண நிலை, மதம், எஸ்.சி.,/எஸ்.டி., மாற்றுத்திறன், தாய்மொழி, அறிந்த பிற மொழி, எழுத்தறிவு, கல்விநிலையம் செல்லும் நிலை, அதிகபட்ச கல்வி, வேலை, தொழில், பிறந்த இடம், கடைசியாக வசித்த இடம், இடம்பெயர்ச்சிக்கான காரணம், கிராம/நகரில் தங்கிய விபரம், பிறந்த மொத்த குழந்தைகள், உயிருடன் வாழும் குழந்தைகள், கடந்த ஓராண்டில் பிறந்த மொத்த குழந்தைகள் போன்ற 29 கேள்விகளுக்கு பதில் சேகரிக்கப்படுகிறது.
தயார் தானே: வளமான பாரம்பரியமும், உலகின் மிகச்சிறந்த கணக்கெடுப்பில் ஒன்று என்ற பெருமை கொண்டது இந்திய சென்சஸ். நமது நாட்டின் முன்னேற்றத்திற்கு முக்கிய தேவையான சென்சஸ் பணியின் போது, முழு விபரங்களை தர இந்திய குடிமகனாகிய நீங்களும் தயார் தானே...


சென்சஸ்-2001-தமிழகம்-சில புள்ளி விபரம்:* மக்கள் தொகை-6,24,05,629, நகர்புறம்-27.8%,கிராமப்புறம்-72.2%,
* எஸ்.சி.,-16.2%,எஸ்.டி.,8.2%, பாலின விகிதம்(பெண்கள்/ஆயிரம் ஆண்களுக்கு): 987, கல்வி நிலை-73.5%, ஆண்கள்-82.4%, பெண்கள்-64.4%, பணிசெய்வோர் விகிதம்-44.7%, ஆண்கள்-57.6%, பெண்கள்-31,5%
* கிராமங்கள்-16,317,மாவட்டங்கள்-30, தாலுகாக்கள்-201, ஒன்றியங்கள்-385,ஊராட்சிகள்-12,620, நகரங்கள்-832,மாநகராட்சிகள்-6, நகராட்சிகள்-104, பேரூராட்சிகள்-611.


 

மேலும் புதுச்சேரி செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mokkayan - Samoua,சமோ
15-ஜன-201112:57:26 IST Report Abuse
Mokkayan வழக்கம்போல கையெழுத்தை மட்டும் வாங்கி விட்டு, கணக்கேடுப்போரே எல்லா விவரத்தையும் எழுதிக் கொடுக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள் !. கையெழுத்து போடும் நபர் தன்னைப்பற்றி, குடும்பத்தை பற்றி தேவக பதிவு செய்வாரேயானால், அது, அவருக்கும், இந்த நாட்டிற்கும் அவர் செய்யும் மிகப்பெரிய உதவி என்பதை விளம்பரங்கள் மூலம் அறிவுறுத்த வேண்டும் !.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X