கோவையில் மீட்பு பணியின்போது பரிதாபம்: ராட்சத கிரேன் கவிழ்ந்து இருவர் பலி
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

04 மார்
2017
02:34

கோவை;கோவையில், ரோட் டில் பழுதாகி நின்ற மணல் லாரியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டபோது, ராட்சத கிரேன் கவிழ்ந்தது. இதில், மீட்பு பணியை வேடிக்கை பார்த்த இருவர், உடல் நசுங்கி பலியாகினர்.கோவை, பெரியகுயிலியை சேர்ந்தவர் பேச்சிமுத்து; இவருக்கு சொந்தமான 'டிப்பர்' லாரி, கழிவு மணல் லோடு ஏற்றிக் கொண்டு, நேற்று காலை விளாங்குறிச்சி நோக்கி சென்றது. திண்டுக்கல், கிழக்கு வீதியை சேர்ந்த பாண்டி முருகன், 22, லாரியை ஓட்டி சென்றார்.


புலியகுளத்தில் இருந்து லட்சுமி மில் சந்திப்பை நோக்கி, தாமு நகர் அருகே காலை, 7:30 மணிக்கு சென்றபோது, திடீரென லாரியின் இடதுபுற முன்பக்க டயர் வெடித்தது. நிலை தடுமாறி, 'சென்டர் மீடியன்' மீது மோதிய லாரி, நடுரோட்டில் நின்றதால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


ராமநாதபுரம் போலீ சார், நடுரோட்டில் நின்ற லாரியை கிரேன் மூலம் மீட்க ஏற்பாடு செய்தனர். பீளமேட்டில் இருந்து 'ஏ1ராயல்' நிறுவன கிரேன் வரவழைக்கப்பட்டது. கிரேனை பீளமேட்டை சேர்ந்த செந்தில்குமார் இயக்கினார்.லாரி மீது கிரேனில் இருந்து இரும்பு கொக்கி கள் போட்டு, ரோட்டோரம் இழுத்துச்செல்ல முயற்சித்தனர். அப்போது, திடீரென மணல் லாரி நகர்ந்ததால், எடை தாங்க முடியாமல் 'கிரேன்' கவிழ்ந்து ரோட்டில் விழுந்தது.


மீட்பு பணியை வேடிக்கை பார்த்த, புலிய குளம், கருப்பராயன் கோவில் வீதியை சேர்ந்த பெயின்டர் பரமசிவம், 32, கிரேன் அடியில் சிக்கி, உடல் நசுங்கி பலியானார்.

இதேபோன்று, ரோட்டோரம் பேக்கரியில் நின்று கொண்டிருந்த புலியகுளத்தை சேர்ந்த காவலாளி சின்னப்பராஜ், 69, கிரேன் அடியில் சிக்கி படுகாயமடைந்தார். கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவரும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


ரோட்டில் பழுதாகி நின்ற லாரி, சரிந்து விழுந்த கிரேன் ஆகியவை, மேலும் இரண்டு கிரேன்கள் வரவழைக்கப்பட்டு, அப்புறப்படுத்தப்பட்டன. அதுவரை போக்குவரத்து, மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டது.


விபத்து தொடர்பாக, கிரேன் டிரைவர் செந்தில்குமார் மீது போக்குவரத்து புலனாய்வு கிழக்கு பிரிவு போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.


டிரைவர்கள் இருவர் கைது: 'கிரேன்' கவிழ்ந்து இருவர் உயிரிழந்த சம்பவத்தில், லாரி டிரைவர் பாண்டி முருகன், 'கிரேன்' டிரைவர் செந்தில்குமார் மீது வழக்கு பதிந்த கோவை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், இருவரையும் கைது செய்துள்ளனர்.


லாரிகளில் நிர்ணயிக்கப்பட்ட அளவை காட்டிலும் அதிகமாக லோடு ஏற்றி செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை போக்குவரத்து துறை அதிகாரிகள், போலீசார் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், அதிகளவு லோடு ஏற்றி செல்லும் லாரி உள்ளிட்ட கனரக வாகனங்களை மாமூல் வாங்கி கொண்டு விட்டுவிடுவதால் இதுபோன்ற விபத்துக்கள் ஏற்படுகின்றன.


பழுதாகி ரோட்டில் நின்ற மணல் லாரியை கிரேன் மூலம் மீட்கும்போது, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு துறையினரை அழைத்திருக்க வேண்டும். ஆனால், அசம்பாவிதம் நடந்த பின் தான் தீயணைப்பு துறை வீரர்கள் சென்று, சடலத்தை மீட்டனர்.


திட்டமிடாததால் உயிரிழப்பு!

'டிப்பர்' லாரி முழுவதும் கழிவு மணல் லோடு இருந்தது. மணலை அப்புறப்படுத்திவிட்டு, லாரியை மட்டும் மீட்டிருந்தால், எளிதில் வேலை முடிந்திருக்கும். அவ்வாறு செய்யாமல், மணலுடன் சேர்த்து லாரியை, கிரேன் மூலம் மீட்க முயற்சித்துள்ளனர். இதனால், கிரேன் சரிந்து விபத்து ஏற்பட்டு இருவர் உயிரிழந்தனர்.

மேலும், மீட்பு பணியின்போது, நுாற்றுக்கணக்கான பேர் கிரேனுக்கு அருகே கூடி நிற்க அனுமதித்ததும், உயிரிழப்புக்கு காரணமாக அமைந்து விட்டது.

 

மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X