திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோவில் கொடியேற்றம்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

04 மார்
2017
23:57

திருவொற்றியூர்;திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி கோவிலில், பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது.திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில், நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு, கொடியேற்றத்துடன் மாசி பிரம்மோற்சவம் துவங்கியது. இந்நிகழ்வில், 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.


விழாவின் தொடர்ச்சியாக தினசரி, சந்திரசேகரர், ரிஷபம், சிம்மம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். அதோடு, விழா நடக்கும் அனைத்து நாட்களும், இரவு தியாகராஜ சுவாமி வீதி உலா நடக்க உள்ளது.முக்கிய நிகழ்வான தேரோட்டம் வரும், 9ம் தேதியும், திருக்கல்யாணம், 11ம் தேதி காலையும், இரவு மகிழடி சேவை மற்றும் 13ம் தேதி, பந்தம்பறி நிகழ்வுடன் பிரம்மோற்சவம் நிறைவு பெறும்.அய்யா அவதார திருநாள்

மணலி புதுநகர், அய்யா வைகுண்ட தர்மபதி திருக்கோவிலில், அய்யா வைகுண்ட பரம்பொருளின், 185-வது ஆண்டு அவதார திருநாள் ஊர்வலம் நடந்தது. நேற்று காலை, 6:00 மணிக்கு,

வண்ணாரப்பேட்டை தனியார் திருமண மண்டபத்தில் இருந்து, இரண்டு குதிரைகள் பூட்டப்பட்ட அலங்கார சாரட் வண்டியில், அய்யா அருளி செய்த அகில திரட்டு ஆகமத்தை வைத்து, ஊர்வலம் புறப்பட்டது.


தண்டையார்பேட்டை, சுங்கச்சாவடி, திருவொற்றியூர், லிப்ட் கேட், எம்.எப்.எல்., வழியாக, மணலி புதுநகர் அய்யா கோவிலை சென்றடைந்தது. ஊர்வலத்தில், 500-க்கும் மேற்பட்ட

பக்தர்கள், அய்யாவின் திருநாமக்கொடியை ஏந்திச் சென்றனர்.


ஊர்வலத்தைத் தொடர்ந்து, அய்யா வைகுண்ட தர்மபதி கோவிலில், மதியம், 12:00 மணிக்கு, பணிவிடை, உச்சிபடிப்பு; மாலையில், ஊஞ்சல் சேவை தாலாட்டு, சரவிளக்கு பணிவிடை, அய்யா தொட்டில் வாகனத்தில் பதிவலம் வருதல், வைகுண்ட ஜோதி ஏற்றுதல் நிகழ்வுடன், விழா நிறைவுற்றது.

 

மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X