ஒரே இடத்தில் அடுத்தடுத்து 9 'போர்வெல்':மக்கள் எதிர்ப்பால் வெளியேறிய அதிகாரிகள்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

05 மார்
2017
02:00
பதிவு செய்த நாள்
மார் 05,2017 01:28

ஊமச்சிகுளம்;திருப்பாலை அருகே குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் ஒரே இடத்தில் 9 'போர்வெல்கள்' அமைத்த மாநகராட்சி அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் இயந்திரங்களுடன் வெளியேறினர்.


மாநகராட்சி 24வது வார்டில் உள்ளது திருப்பாலை. இதன் அருகே தபால்தந்தி நகர் விரிவாக்கப் பகுதியான தென்றல் நகர் உள்ளது. இங்கு ஏராளமான வீடுகள் உள்ளன. நகரின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய இங்குள்ள சிறிய ஊரணியில் 'போர்வெல்' அமைக்க மாநகராட்சி அதிகாரிகள் திட்டமிட்டனர்.நேற்று முன்தினம் காலையில் இந்த ஊரணிக்கு 2 'போர்வெல்' அமைக்கும் இயந்திரங்களுடன் வந்த உதவி பொறியாளர்கள் ஜெயா, அலெக்ஸாண்டர் ஆகியோர்,


அதிகாரிகள் தேர்வு செய்து கொடுத்த இடங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைக்க கூறினார்.

ஊரணியை சுற்றி 6 இடங்களிலும், அருகில் உள்ள திருப்பாலை உயர்நிலைப் பள்ளி அருகே 2 இடங்கள் என 9 இடங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைத்தனர்.


மாநகராட்சியின் இச்செயலால் தங்கள் வீடுகளுக்கு தண்ணீர் வராது என்பதை உணர்ந்த

பொதுமக்கள் 'போர்வெல்' லாரி மற்றும் அதிகாரிகளை முற்றுகையிட்டனர்.

மூர்த்தி எம்.எல்.ஏ., மற்றும் செயற்பொறியாளர் ராஜேந்திரன் ஆகியோர் பொதுமக்களிடம்

பேச்சுவார்த்தை நடத்தி இயந்திரங்கள், அதிகாரிகளை அங்கிருந்து அனுப்பி வைத்தனர். யாருக்கும் பாதிப்பு இல்லாமல் குடியிருப்புகள் இல்லாத பகுதியில் உள்ள கண்மாய்களில் 'போர்வெல்' அமைக்கும்படி எம்.எல்.ஏ., கூறினார்.


சிந்தாமணி, தென்றல் நகர்: மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டு 7 ஆண்டுகளாகியும் இன்னும் இப்பகுதியில் தண்ணீர் வசதி செய்து கொடுக்கவில்லை. காவிரி கூட்டுக் குடிநீர் வசதியும் செய்து கொடுக்கவில்லை. பலமுறை மனு கொடுத்தும் எந்தப் பயனும் இல்லை. வீடுகளில் 150 அடிக்குதான் ஆழ்துளை கிணறுகள் அமைத்துள்ளோம். மாநகராட்சியினர் இங்கு 700 அடி ஆழத்திற்கு 6 இன்ச் பெரிய 'போர்கள்' அமைக்கின்றனர். வீடுகளை சுற்றி அமைப்பதால் நிலத்தடி நீர் அனைத்தும் அங்கு சென்றுவிடும். எங்களுக்கு தண்ணீர் கிடைக்காது.பாலகிருஷ்ணன், தென்றல்நகர்: நேற்று காலை வந்த அதிகாரிகள் அருகில் உள்ள பள்ளிக்கு தண்ணீர் வசதி செய்து கொடுப்பதற்காக ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்படுகிறது என்றனர்.


ஊரணியை சுற்றி 30 மீட்டர் இடைவெளியில் 9 'போர்கள்' அமைத்துள்ளனர். இங்கிருந்து தண்ணீர் உறிஞ்சும்போது வீடுகளில் உள்ள 'போர்கள்' வறண்டுவிடும்.6 ஆண்டுகளாக நாங்கள் தண்ணீர் கேட்டும், ஊரணி வரத்து வாய்க்கால்களை சீரமைத்து தண்ணீர் கொண்டுவர கோரி

மனுகொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காத அதிகாரிகள், இங்குள்ள தண்ணீரை உறிஞ்சினால் நாங்கள் தண்ணீருக்கு எங்கே செல்வது. ஆழ்துளை கிணறுகளை மூட வேண்டும்.

ராஜேந்திரன், செயற்பொறியாளர்: வைகை அணையில் தற்போது 25 நாட்களுக்கு தேவையான தண்ணீர் உள்ளது. அதற்குள் மழை பெய்தால் இவை பயன்பாட்டிற்கு வராது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே இங்கு 'போர்வெல்' அமைத்துள்ளோம், என்றார்.

 

மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Amirthalingam Sinniah - toronto,கனடா
05-மார்-201708:07:24 IST Report Abuse
Amirthalingam Sinniah அதிகமாக ஆழத்தில் துளையிடும்போது நல்ல தண்ணீர் மாறி கசப்பான ஊற்றுகள் வர சாத்தியம் உண்டு.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X