ஒரு ரூபாயில் மருத்துவ காப்பீடு... சபாஷ் போடுங்க! தொழிலாளருக்கு "சூப்பர்' திட்டம்!
Advertisement
 
 
Advertisement
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

17 மார்
2017
08:37
பதிவு செய்த நாள்
மார் 17,2017 00:38

திருப்பூர் : தினமும் ஒரு ரூபாய் செலுத்தி, ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரையிலான மருத்துவ வசதி பெறும்வகையிலான சிறப்பு காப்பீடு திட்டத்தை ஏற்றுமதியாளர் சங்கத்தினர், நேற்று

அறிமுகப்படுத்தினர்.


திருப்பூரில் உள்ள ஏற்றுமதி ஆடை உற்பத்தி நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கான சிறப்பு மருத்துவ காப்பீடு திட்டம் மற்றும் ஆடை உற்பத்தி நிறுவனங்களுக்கான பொது காப்பீடு திட்டம் துவக்க விழா, ஏற்று

மதியாளர் சங்க அலுவலகத்தில் நேற்று நடந்தது. சங்க தலைவர் ராஜாசண்முகம் தலைமை வகித்தார்.

மூலப்பொருள் மொத்த கொள்முதல் கமிட்டி தலைவர் சோமசுந்தரம் முன்னிலை வகித்தார். ஆடை உற்பத்தி நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு, ஒரு ரூபாய் வீதம், ஆண்டுக்கு 365 ரூபாய் செலுத்தி,

ரூ.1 லட்சம் மதிப்பிலான மருத்துவ காப்பீடு பெறுவதற்காக, மும்பை எடல் வைஸ் புரோக்கிங் நிறு

வனத்துடன் ஒப்பந்தம்

மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சிறப்பு மருத்துவ காப்பீடு திட்டம், நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது. மூலப்பொருள் கொள்

முதல் கமிட்டி ஆலோசகர் ராமநாதன் மற்றும் சங்க

நிர்வாகிகள், காப்பீடு நிறுவன பிரதிநிதிகள் இணைந்து, புதிய காப்பீடு திட்டத்தை வெளியிட்டனர்.

இத்திட்டத்தில், தொழிலாளி மட்டுமின்றி, மனைவி, குழந்தைகள், பெற்றோர் என, குடும்ப அங்கத்தினரும் இணையலாம். குடும்பதாரர்கள் வேறு ஊரிலோ, வெளிமாநிலத்தில் இருந்தாலும், அங்கு மருத்துவ உதவி பெறமுடியும். இன்சூரன்ஸ் திட்டத்தில் இணைந்த மறுநாள் முதல், இதன் பயன்களை பெறலாம். ஏற்கனவே உள்ள உடல் பிரச்னை

களுக்கும், இத்திட்டத்தில் சிகிச்சை பெறமுடியும்.

மருத்துவமனைக்கு செல்லும் பயனாளிகள், ஒரு லட்சம் ரூபாய் வரை, பணம் செலுத்தாமல், சிகிச்சை பெறமுடியும். ஆண்டுக்கு ஒருமுறை, தொழிலாளர்களுக்கு, மருத்துவ காப்பீடு நிறுவனம் வாயிலாக, இலவச மருத்துவ பரிசோதனை நடத்தப்படும்.

காப்பீடு செய்தவர், விபத்தினால் பணிக்கு செல்ல முடியாமலிருந்தால், வாரம் ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும். உயிரிழப்பு

ஏற்பட்டால், குடும்பத்தினருக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும்.

நிறுவனங்களுக்கான காப்பீடு திட்டத்துக்கு, எடல் வைஸ் புரோக்கிங் நிறுவனம் மற்றும் திருப்பூரை சேர்ந்த ஷீல் இன்சூரன்ஸ், ஓம் மாருதி இன்சூரன்ஸ் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்திட்டத்தில், ஆடை உற்பத்தி நிறுவனங்கள், அனைத்துவகை பாதிப்புகளுக்கும், இழப்பீடு பெறமுடியும்.

ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜாசண்முகம் பேசியதாவது:

ஆடை உற்பத்தி நிறுவன தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு ஒரு ரூபாய் செலுத்தி, ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரையிலான மருத்துவ சிகிச்சை பெறும் வகையில், சிறப்பு காப்பீடு

திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதுபோல், நிறுவனங்களுக்காக,

தீ விபத்து, வெள்ளம், சரக்குகளை கொண்டுசெல்லும்போது ஏற்படும் சேதம் என, எல்லாவகை இழப்புகளுக்கும் பொதுவான காப்பீடு திட்டமும் நடைமுறைப்படுத்தப்

படுகிறது.

காப்பீடு திட்ட நிறு

வனங்கள், திருப்பூர் தொழில் நிறுவனங்

களுக்கு உகந்த காப்பீடு சரத்துக்களை பட்டியலிட்டு வைத்துள்ளன. ஆடை உற்பத்தி துறை

யினர், இவ்விவரங்களை பெற்று, தங்கள் தொழிலாளர்களை மருத்துவ காப்பீடு திட்டத்தில் இணைக்கவேண்டும்; தங்கள் நிறுவனங்களையும் காப்பீடு செய்துகொள்ள வேண்டும், என்றார்.

சங்க பொதுச்

செயலாளர் விஜய

குமார், பொருளாளர் மோகன் உள்பட நிர்வாகிகள், உறுப்பினர்கள்

பங்கேற்றனர்.


 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.