சென்னை புறநகரில் குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க கிணற்று நீர்! பாலாற்றில் இருந்து குடிநீர் கிடைக்கும் என எதிர்பார்ப்பு
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

18 மார்
2017
05:07

பல்லாவரம்: பம்மல், அனகாபுத்துார் நகராட்சிகளில், நாளுக்கு நாள் குடிநீர் பிரச்னை அதிகரித்து வரும் நிலையில், கோடையை சமாளிக்கும் விதமாக, கிணற்று நீரை வாங்கி, குளோரின் கலந்து வினியோகிக்கும் நடவடிக்கைகள் துவங்கியுள்ளன. மேலும், பாலாற்றில்இருந்து குடிநீர் கிடைக்கும் என, இந்த நகராட்சி களின் அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.


சென்னை புறநகரில் பம்மல், அனகாபுத்துார் நகராட்சிகளில் குடிநீர் பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளது. இங்கு, குடிநீர் ஆதாரம் என்பது, 'மெட்ரோ வாட்டர்' மட்டுமே. சில மாதங்களாக, மெட்ரோ வாட்டர் நிர்வாகத்திடமிருந்து, மிகக் குறைந்தளவு நீரே கிடைப்பதால், மக்களின் தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை. அதுவும், 10 - 15 நாட்களுக்கு ஒருமுறை வினியோகம் செய்யும் நிலையால், குடிநீருக்காக மக்கள் அங்குமிங்குமாக அலைகின்றனர். சில இடங்களில், பணம் கொடுத்து வாங்குகின்றனர்.


இதேநிலை தொடர்ந்தால், கோடை காலத்தை சமாளிக்க முடியாத அளவிற்கு, குடிநீர் பஞ்சம் ஏற்படும். அப்படியொரு சூழலை தடுக்க, தனியார் கிணற்று நீரை வாங்கி, தொட்டிகளில் நிரப்பி குளோரின் கலந்து வினியோகிக்க, நகராட்சி அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.இதற்காக, சோமங்கலம் அடுத்த பூந்தமண்டலம் கிராம கிணற்று நீரை எடுத்து, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய பரிசோதனைக்கு அனுப்பினர்.


இதில், அந்த நீர் குடிநீருக்கு உகந்தது என்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த கிணற்றிலிருந்து, நாள் ஒன்றுக்கு, 11 லோடு தண்ணீரை லாரியில் எடுத்து வர ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது.

இதன் மூலம் பம்மல், அனகாபுத்துார் மக்களின் குடிநீர் தேவையை ஓரளவிற்கு பூர்த்தி செய்ய

முடியுமென, அதிகாரிகள் கருதுகின்றனர்.


பாலாற்று குடிநீர் கிடைக்குமா?

தாம்பரம்- - பல்லாவரம் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம், பாலாற்றிலிருந்து குடிநீர் கொண்டு வரப்பட்டு, வினியோகிக்கும் திட்டமும் நடந்து

வருகிறது.

இத்திட்டத்தை செயல்படுத்திய போது, பல்லாவரத்தை ஒட்டியுள்ள பம்மல், அனகாபுத்துார் நகராட்சிகளிலும், குழாய் பதிக்கப்பட்டது. அது, இன்று வரை பயன்பாடின்றியே கிடக்கிறது. இதனால், குடிநீர் பிரச்னையை சமாளிப்பதற்கான, நாள் ஒன்றுக்கு, 6 - 10 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்க வேண்டும் என, இந்த நகராட்சிகள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதை, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளும் ஒப்புக் கொண்டுள்ளதால், விரைவில் பாலாறு குடிநீரும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.


10 ஆழ்துளை கிணறுகள்

ஒவ்வொரு கோடையிலும், குடிநீர் பிரச்னை ஏற்படுகிறது. இம்முறை குடிநீருக்காக, 30 லட்சம் ரூபாயை, தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. இதில், 10 இடங்களில் ஆழ்துளை கிணறுகள் போடப்பட்டுள்ளன. இதன் மூலம், ஓரளவிற்கு தண்ணீர் வினியோகிக்க முடியும். மேலும், கிணற்று நீரை வாங்கி வினியோகம் செய்ய முடிவு செய்துள்ளோம்.

-அனகாபுத்துார் நகராட்சி அதிகாரிகள்

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (5)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R chandar - chennai,இந்தியா
20-மார்-201713:39:59 IST Report Abuse
R chandar Kindly speed up and increase diesalination of water capacity at Nemily as told by CM in assembly under section 110 to through out the city immediately
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
19-மார்-201709:40:32 IST Report Abuse
Srinivasan Kannaiya ஆழ் துளை மூலம் தண்ணீர் எடுத்தால் எந்த வித கட்டுப்பாடும் இன்றி நீரை செலவு செய்கிறார்கள். எனவே எல்லா வீட்டிலும் இனி கிணறு அமைத்து தண்ணீர் வாளியால் சேர்ந்த வேண்டும் என்று வந்தால். தண்ணீரை சிக்கனமாக செலவு செய்வார்கள். ஓரளவு தண்ணீர் பஞ்சமும் வராது...
Rate this:
Share this comment
Cancel
christ - chennai,இந்தியா
18-மார்-201711:51:28 IST Report Abuse
christ ஏரிகளையும் ,குளங்களையும் கூறுபோடாமல் கிடைக்கும் மழை நீரை சேமித்து வைத்தால் நிலத்தடி நீர்மட்டம் உயரும் குடிநீர் பஞ்சமும் ஏற்படாது மனிதர்கள் சிந்தீர்ப்பார்களா ?
Rate this:
Share this comment
Cancel
Kumar Katna - chennai,இந்தியா
18-மார்-201710:31:41 IST Report Abuse
Kumar Katna அனகாபுத்தூர் நகராட்சியில் 35 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்கிறார்கள் இங்கனம் அனகாபுத்தூர் மக்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.