மரம் நட விரும்புவோர் மாநகராட்சியை அணுகலாம்
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

19 மார்
2017
03:11

சென்னை: சென்னையில் பசுமை போர்வையை அதிகரிக்கும் வகையில், பொது இடங்களில் மரக்கன்றுகள் நட விரும்புவோர், மாநகராட்சியை அணுகலாம். இதுகுறித்து, மாநகராட்சி வகுத்துள்ள நிபந்தனைகள், இணையதளத்தில்

வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பரில் வீசிய, 'வர்தா' புயலால், சென்னையின் பசுமை போர்வை பாதியாக குறைந்துவிட்டது. இழந்த பசுமையை மீட்பதோடு சுற்றுச்சூழலையும் பாதுகாக்கும் வகையில், சென்னையில் மரக்கன்றுகள் நட வேண்டிய அவசியம்

ஏற்பட்டுள்ளது.

இதனால், மரக்கன்றுகள் நடுவதற்கான அனுமதியும், நட விரும்புவோருக்கான வழிமுறைகள் மற்றும் நிபந்தனைகள், நிபுணர்களை கொண்டு மாநகராட்சி உருவாக்கி உள்ளது. மாநகராட்சி விதிக்கும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு தான், பொது இடங்களில் இனி மரம் நட முடியும்.

அதே போல, 7 மீட்டருக்கும் குறைவான அகலம் கொண்ட சாலை; 7 முதல் 12 மீ., அகல சாலை; 12 மீ., மேல் அகலம் கொண்ட சாலைகளில், எந்தெந்த வகையான மரக்கன்றுகள் நடலாம் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த மரக்கன்றுகளை

எப்படி நட வேண்டும் என்பன போன்ற வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

நடும் மரக்கன்றுகளுக்கு கூண்டு அமைக்க வேண்டும்; ஓராண்டுக்கு பராமரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட, ஐந்து நிபந்தனைகள் மட்டுமே மாநகராட்சி விதிக்கிறது. இந்த விபரங்கள், www.chennaicorporation.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அசோக் வளன் - Chuan Chou,சீனா
19-மார்-201711:49:01 IST Report Abuse
அசோக் வளன் நம் நாட்டு பாரம்பரிய வகை மரங்களை மட்டுமே நாடா வேண்டும் என்று கேட்டு கொண்டிருப்பது வரவேற்க தக்கது . ஓராண்டு பராமரிக்க வேண்டும் என்பது கோடி கணக்கில் மரம் நடுவதாக அறிவிக்கும் அரசியல் காட்சிகள் கண்டிப்பாக கடைபிடிக்குமாறு வலியுறுத்த வேண்டும். 1) மரம் நட்ட பின் அதே குழியில் ஒரு மண்பானையை பக்க வட்டில் ஓவர் துளை ஒட்டு மரம் நட்ட குழியிலே புதைத்து விட வேண்டும் . மரத்திற்கு நீர் ஊற்றும் பொது இந்த பணியையும் நீர் நிரப்ப வேண்டும். 2) மரத்தை சுற்றிலும் மூடாக்கு போடா வேண்டும் . காய்ந்த இலை தலைகளை போட்டு மூட வேண்டும் . மரப்பொடி அல்லது தேங்காய் நாரை அடுக்கி வைத்து நீர் ஆவியாகாமல் தடுக்க வேண்டும் . 3) கம்பி வெலிக்கு பதில் முள் வெளி வைப்பது நல்ல பலன் தரும் . முள் வெலி யை சுருட்டி ஓலை யால் செய்யப்பட்ட கிடுவு கொண்டு காற்று மோதாத வாறு அடைத்து வைக்க வேண்டும் . அனல் காற்றிலிந்தும் வேகமான காற்றிலிருந்தும் பாதுகாக்கும் . 4) உங்கள் இருப்பிடத்துக்கு அருகிலேயே இடத்தை தேர்ந்து எடுங்கள் . 5) உங்கள் வீட்டு சிறுவர் சிறுமிகளையோ அல்லது மற்றவர்களையோ நீர் ஊற்ற ஊக்குவியுங்கள் . 6) மரம் நட ஆடி மாதம் நல்லது . பராமரிப்பு குறையும் 7) மரத்தை சுற்றி பல வகையான பூ அல்லது மூலிகை செடிகளை வளர்க்க வேண்டும் . இது மற்றவர்களை நீர் ஊற்ற ஊக்குவிக்கும் . மூலிகை செடிகள் கால்நடைகளுக்கு தீவனமாகும் .
Rate this:
Share this comment
Cancel
raghavan - Srirangam, Trichy,இந்தியா
19-மார்-201711:47:15 IST Report Abuse
raghavan நன்றி. பல பெரிய சாலைகளில் மரங்கள் பல கிலோமீட்டர்களுக்கு ஒன்றிரண்டுதான் தென்படுகின்றன. உதாரணத்துக்கு மேடவாக்கம் நெடுஞ்சாலை, பல்லாவரம் ரேடியல் சாலைகளை சொல்லலாம். ஈச்சங்காடு சந்திப்பில் மேம்பாலம் கட்டும் பணி நடப்பதால் பஸ் பயணிகளுக்கான நிழற்குடை கூட கிடையாது. பொது மக்கள் சுட்டெரிக்கும் வெயிலில் நிற்க வேண்டியுள்ளது. இங்கெல்லாம் சரி வளர்ந்த மரங்களை உடனடியாக நட்டு தேவையான நிழற்குடைகளையும் அமைக்கவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.