80 அடி அகல கோவிலம்பாக்கம் கால்வாயில் 60 அடி... ஆக்கிரமிப்பு மின் இணைப்பு வழங்கி துணை போகும் வாரியம்
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

20 மார்
2017
06:01

மூன்று ஏரிகளின் உபரிநீர் செல்லும், 80 அடி அகல, கோவிலம்பாக்கம் கால்வாயின் பெரும் பகுதி ஆக்கிரமிக்கப்படுவதால், மழை காலங்களில்,

குடியிருப்புகளுக்கு நீர் புகும் ஆபத்து அதிகரித்து உள்ளது. இந்த ஆக்கிரமிப்பு கட்டடத்துக்கு, மின்

வாரியமும், மின் இணைப்பு வழங்கியுள்ளது.

கடந்த, 2015 டிசம்பரில்

வந்த பெரு வெள்ளத்தில்,

சென்னை மாநகராட்சியை ஒட்டியுள்ள, காஞ்சிபுரம் மாவட்டம், கோவிலம்பாக்கம்,

நன்மங்கலம் ஊராட்சிக்கு

உட்பட்ட பல்வேறு

குடியிருப்பு பகுதிகள் மூழ்கின.

வீட்டை விட்டு வெளியேற

முடியாத அளவுக்கு,

குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்தது. பிற பகுதிகளை விட, இங்கு வெள்ள பாதிப்பு அதிகரிக்க, ஆக்கிரமிப்பே முக்கிய காரணமாக உள்ளது. வெள்ள பாதிப்புக்கு பின், உயர் நீதிமன்ற உத்தரவின் படி, காஞ்சிபுரம் மாவட்ட பகுதியில் உள்ள நீர்நிலைகளில் ஆய்வு நடந்தது.

கோவிலம்பாக்கம் பகுதியில், சர்வே எண்: 122, 365, 373, 374, 375, 376 ஆகிய புல எண்கள், பொதுப்பணித்துறை பராமரிப்பில் உள்ள நீர்வழிப்பாதை மற்றும் புறம்போக்கு நிலங்கள் என கண்டறியப்பட்டது.

கீழ்கட்டளை, நெமிலிச்சேரி, நன்மங்கலம் ஆகிய ஏரியிலிருந்து வெளியேறும் உபரிநீர், 80 அடி அகலம் கொண்ட, கோவிலம்பாக்கம்

கால்வாய் வழியாக,

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை அடைகிறது.

கோவிலம்பாக்கம், சிண்டிகேட் காலனி பகுதியில் உள்ள சர்வே எண்: 122ல், கால்வாய் இடம் உள்ளது. இந்த, 80 அடி அகல கால்வாயில், 60 அடியை ஆக்கிரமித்து, சில நாட்களுக்கு முன், கட்டடம் கட்டப்பட்டது.

இந்த ஆக்கிரமிப்பை

ஆதரிக்கும் விதமாக, மின் வாரியம் தனி கம்பம் நட்டு, மின் இணைப்பு கொடுத்துள்ளது.

இங்கு, கடந்த, 2016ல், ஏழு நாட்களுக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என, பொதுப்பணித்துறை

எச்சரிக்கை பலகை வைத்தது. அன்றைய தினம் இரவே,

எச்சரிக்கை பலகையை,

ஆக்கிரமிப்பாளர்கள் அப்புறப்

படுத்தினர். அதன்பின்பும், பொதுப்பணித்துறை எந்தவித

நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஆக்கிரமிப்பு ஒருபுறமெனில்,

தொழிற்சாலை மற்றும் கழிப்பறை கழிவுநீரை கால்வாயில் விடுவதால், சுகாதார பாதிப்பு அதிகரித்துள்ளது.

ஏரி உபரிநீர் தடையின்றி செல்ல, கோவிலம்பாக்கம் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு

களை அகற்றி, கால்வாயை மீட்க வேண்டும் என,

பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


- நமது நிருபர் -

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
samuelmuthiahraj - Canberra /kancheepuram,இந்தியா
21-மார்-201716:42:09 IST Report Abuse
samuelmuthiahraj காஞ்சிபுரம் ஊராட்சியில் காஞ்சிபுரம் பெரு நகராட்சியில் அநேக வாய்க்கால் புறம்போக்குகள் நீராதாரங்கள் அனைத்தும் ஆக்கிரமிப்புகளை உள்ளாகியும் எவரும் கண்டுகொள்ளுவதில்லை அனைத்து அரசியல்வாதிகளும் அநேக அரசு ஊழியர்களும் ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் காஞ்சிபுரம் காஞ்சி போன புறமாக மாறிக்கொண்டு வருகிறது
Rate this:
Share this comment
Cancel
GenX Man - Syeney,ஆஸ்திரேலியா
21-மார்-201703:27:09 IST Report Abuse
GenX Man இதெயெல்லாம் எதிர்த்து யாரும் மெரினாவில் போராட்டம் நடத்தப்போவதில்லை.
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
20-மார்-201709:20:01 IST Report Abuse
Srinivasan Kannaiya இருக்கும் பொது துறை நிறுவனங்களில் தமிழ் நாடு மின்சார வாரியத்தில் உதவி பொறியாளர் பதவி மிகுந்த விலைக்கு அரசால் விக்க படுகிறது... பல லட்சங்கள் கொடுத்து பதவியில் அமர்ந்த பொறியாளர்கள் அந்த செலவழித்த தொகையை வசூலிக்க வேண்டாமா... அதுதான் இப்பிடி விதி மீறி இணைப்புகள் கொடுக்கிறார்கள்..... மேலும் வாங்கிய பணததை பதவிக்கு தகுந்தவாறு நேர்மையாக பங்கு பிரித்துக்கொள்ளுகிறார்கள்... நேர்மை பணியில் இல்லை என்றாலும் பங்கு பிரிப்பதில் உள்ளது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.