கிடங்குகளில் பதுங்கியிருப்பதால் அரிசி விலை... உயர்வு! வருமான வரித்துறையால் வியாபாரிகள் 'கலக்கம்'
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

21 மார்
2017
05:22

தனியார் அரிசி ஆலை மற்றும் கிடங்குகளில், நெல் மற்றும் அரிசி இருப்பு அதிகரித்துள்ளதால், அரிசி விலை உயர்ந்துள்ளது. இதை, வருமான வரித்துறையின் கண்காணிப்பால் வியாபாரிகள் கலக்கமடைந்து உள்ளனர்.


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள அரிசி ஆலை, கிடங்கு மற்றும் மொத்த விற்பனை கடைகளில், நெல் மற்றும் அரிசி மூட்டைகள் தாராளமாக இருப்பில் உள்ளன.கடந்தாண்டு நவம்பரில், பணம் மதிப்பிழப்பு நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டது. இதனால், சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் உள்ள அரிசி ஆலை உரிமையாளர்கள், வியாபாரிகள் தங்களது மொத்த பணத்தையும் முதலீடு செய்து, ஆந்திர விவசாயிகளிடம் இருந்து நெல் மூட்டைகளை வாங்கி இருப்பு வைத்தனர்.


ஆறு மாதங்கள் இருப்பு வைக்கப்படும் நெல், அரிசியாக உற்பத்தி செய்யப்பட்டால், 'பழையது' என்ற தகுதிக்காக, கூடுதல் விலையில் கணிசமான லாபம் கிடைக்கும். அதற்காக அவர்கள், பி.பி.டி., எனப்படும், பாபட்லா பொன்னி ரக நெல் மூட்டைகளை வாங்கி இருப்பு வைத்தனர்.அதிலும், 75 கி., அரிசி மூட்டை விற்பனையில் லாபமில்லை என, 25 கி., சிறு மூட்டைகளாக தயாரித்து விற்பனை செய்கின்றனர்; இது வியாபாரிகளுக்கும், நுகர்வோருக்கும் வசதியாக உள்ளது.


அறுவடை முடிந்ததும் வாங்கப்படும் நெல், இருப்பு வைக்காமல் அரிசியாக்கி, 'புதியது' என விற்கின்றனர். இந்த அரிசி, 25 கிலோ எடையுள்ள, ஒரு மூட்டைக்கு, 100 - 200 ரூபாய் வரை விலை குறையும்.ஆனால் நுகர்வோர், 'சாப்பாடு குழையாமல் இருக்கும்' என்பதால், புதியதை விட, ஆறு மாத பழைய அரிசியைத் தான் விரும்பி வாங்குவர்.அதனால், ஒரு மூட்டை, 1,300 ரூபாய்க்கும்; 1 கிலோ அரிசி, 52 ரூபாய்க்கும் உயர்ந்துள்ளது. அடித்தட்டு மற்றும் நடுத்தர மக்கள், ஒரு கிலோ அரிசி, 40 ரூபாய்க்கு வாங்கவே சிரமப்படுகின்றனர். ஆனால், சில்லரை விற்பனையில், 40 ரூபாய் அரிசி, 44 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.


தமிழகத்தின் அரிசி உற்பத்தியில் முக்கிய இடம் வகிக்கும் செங்குன்றம் நெல் மார்க்கெட்டிற்கு, ஆந்திராவிலிருந்து தினமும், 80 - 100 லாரிகளில், 2,000 டன் நெல் இறக்குமதியாகிறது. அவற்றின் மூலம் உமி, நொய் போன்ற கழிவு நீங்கலாக, 1,200 - 1,300 டன் அரிசி உற்பத்தி செய்யப்படுகிறது.அரிசி, ஆலை மற்றும் கிடங்குகளில், நெல் இருப்பு அதிகரிக்க அதிகரிக்க, அரிசி விலை மேலும் அதிகரிக்கும் என்ற அச்சம் ஏற்பட்டு உள்ளது.


கண்காணிப்பு

தமிழக வியாபாரிகள், பணம் மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின், தங்களிடம் உள்ள, பழைய, 500 - 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக, ஆந்திராவிலிருந்து நெல் மூட்டைகளை வாங்கிக் குவித்தனர். அதனால், சென்னை சுற்றுவட்டார அரிசி ஆலை மற்றும் கிடங்குகளில், 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட மூட்டைகள் இருப்பில் உள்ளன. வியாபாரிகள் நெல் வாங்கியதற்காக, வங்கிகள் மூலம் பணப் பரிமாற்றம் செய்த விபரங்களை, வருமான வரித்துறையினர் சேகரித்து வருகின்றனர். இதனால், நெல் மற்றும் அரிசி மொத்த வியாபாரிகள் கலக்கத்தில் உள்ளனர்.


வீழ்ச்சியடையும்

போதிய அளவு நெல் மற்றும் அரிசி கையிருப்பில் இருப்பது பாதுகாப்பானது. ஆனால், அதையே காரணமாக்கி, நுகர்வோரின் விருப்பத்தை பலவீனமாக்கி, விலை உயர்வை கட்டுப்படுத்தாவிட்டால், நியாயமான வியாபாரம் வீழ்ச்சியடையும்.

-நுகர்வோர், சமூக ஆர்வலர்கள்


- நமது நிருபர் -

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.