மாநகராட்சிகளாக தரம் உயர்கிறது விரைவில்....தாம்பரம், ஆவடி புறநகர் பகுதிகளின் வளர்ச்சியை முறைப்படுத்த வாய்ப்பு
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

24 மார்
2017
22:16


சென்னை மாநகராட்சிக்கு வெளியில், வெவ்வேறு நிலை உள்ளாட்சிகளாக உள்ள பகுதிகளை
ஒருங்கிணைத்து, தாம்பரம், ஆவடி நகராட்சிகளை, மாநகராட்சிகளாக உயர்த்துவதற்கான நிர்வாக பணிகள் துவங்கியுள்ளன.சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான, சி.எம்.டி.ஏ., எல்லைக்குள், பல்வேறு பகுதிகள் வெவ்வேறு நிலை உள்ளாட்சிகளாக இருப்பதால், வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றுவதில், சிக்கல் ஏற்படுகிறது.இதனால், புறநகர் பகுதிகளை ஒருங்கிணைத்து, புதிய மாநகராட்சிகள் ஏற்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய, 2007ல், உயர் நிலை குழு அமைக்கப்பட்டது. இக்குழு பரிந்துரைகள் அடிப்படையில், பொது மக்களிடம் கருத்து கேட்டு, மூன்று பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை, அரசுக்கு அளிக்கப்பட்டது.விரிவாக்கம்
அதன்படி, 'மாநகராட்சியின் எல்லையை விரிவாக்கம் செய்வது, தாம்பரம், ஆவடி அல்லது அம்பத்துாரை தலைமையிடமாக கொண்டு, புதிய புறநகர் மாநகராட்சிகளை ஏற்படுத்துவது' என,
தெரிவிக்கப்பட்டது.
இதன் அமலாக்கத்துக்காக, 2011 அக்டோபரில் தமிழக அரசு, இதற்கான அரசாணையை பிறப்பித்தது. அதில், சி.எம்.டி.ஏ., தெரிவித்த பரிந்துரைகளில் ஒன்றான, மாநகராட்சி எல்லை, 176 ச.கி.மீட்டரில் இருந்து, 426 ச.கி.மீ., ஆக
விரிவாக்கம் செய்யப்பட்டது.
இந்த அரசாணையில் எஞ்சிய இரண்டு பரிந்துரைகளான, தாம்
பரம், ஆவடி நகராட்சிகளை, மாநகராட்சிகளாக உயர்த்தும் திட்டம் கிடப்பில் போடப்பட்டது.
பூர்வாங்க பணிகள்
இது குறித்து, நகராட்சி நிர்வாகத்துறை உயர் அதிகாரி ஒருவர்
கூறியதாவது:
மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி, அம்ரூத் போன்ற திட்டங்களுக்கான நிதி உதவிகள் பெறுவதில், உள்ளாட்சி அமைப்பு நிலை வேறுபாடு, ஒரு தடையாக உள்ளது. பாதாள சாக்கடை, குடிநீர் வழங்கல் திட்டங்களை உருவாக்குவதிலும் சிக்கல் ஏற்படுகிறது.
இதை கருத்தில் கொண்டு, ஊராட்சிகளை அருகில் உள்ள நகராட்சிகளுடன் இணைத்து, ஒருங்கிணைந்த மாநகராட்சிகளை உருவாக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. இதற்காக, 2011ல் பிறப்பிக்கப்பட்ட அரசாணையின் படி, ஒருங்கிணைப்பு மற்றும் தரம் உயர்த்துவதற்கான பூர்வாங்க அறிக்கைகள், உள்ளாட்சி அமைப்புகளிடம் இருந்து பெறப்பட்டு வருகிறது.
இதில், தாம்பரத்துடன் எந்தெந்த உள்ளாட்சிகளை இணைப்பது, ஆவடியுடன் எந்தெந்த உள்ளாட்சிகளை இணைப்பது என்பதற்கான ஆய்வு நடந்து வருகிறது. இதில் அரசு தான் இறுதி முடிவு எடுக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
இந்த விஷயத்தில் தமிழக அரசு தெளிவான முடிவு எடுத்து செயல்படுத்தினால், புறநகர் பகுதிகளின் வளர்ச்சி முறைப்படுத்த வாய்ப்பு ஏற்படும் என்பதே மக்களின்
எதிர்பார்ப்பு. - நமது நிருபர் -

 

மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Shiva Kumar - Chennai,இந்தியா
25-மார்-201721:30:39 IST Report Abuse
Shiva Kumar வளர்ச்சி என்றல் என்ன? 1 ) நல்ல ரோடு போடுவது 2 ) கடை, மார்க்கெட் வசதி செய்து தருவது 3 ) மின்சாரம் தங்கு தடை இன்றி வழங்குவது 4 ) தண்ணீர் - குழாய் வழியாக வீடுகளுக்கு தருவது... 5 ) பஸ் ஸ்டாண்ட் கட்டி தருவது 6 ) பஸ் வசதி செய்து தருவது... எல்லாம் இருக்கட்டும் எவ்ளோ ஏக்கர் நிலங்களை இதற்காக அழிப்பீர்கள். எவ்ளோ பெரி ராக்ஷஸ பம்ப் செட் போட்டு தண்ணீர் உறிஞ்சுவீர்கள் எவ்ளோ தண்ணீர் வேஸ்ட் பண்ணுவீர்கள். கடைசியில்... நிலத்தடி நீர் காலி ... இப்படித்தான்யா கோயம்பேடு பண்ணினீங்க.... கோயம்பேட்டில் எவ்ளவு பெரிய ஏரி இருந்தது தெரியுமா..... இப்போ இருக்கற CMDA பஸ்ஸ்டாண்ட் + மார்க்கெட் ( பூ , பழம் மற்றும் காய்கறி ) + கோயம்பேடு மெட்ரோ ஸ்டேஷன் எல்லாம் சேர்ந்தது ஒரு பெரிய ஏரி. எல்லாம் இந்த ADMK ( MGR மற்றும் PC அலெக்சாண்டர் ) ரெண்டு பெரும் சேர்ந்து தன 1983 ல் அடிக்கல் நாடினாங்க ... இப்போ கோயம்பேட்டுலையும் தண்ணீர் தட்டுப்பாடு வந்திடுச்சு... ரொம்போ கொசு தொல்லையும் வந்திடுச்சு.. - இதுதான் உங்க வளர்ச்சின்னு சொன்ன... அது வளர்ச்சியே இல்லை.
Rate this:
Share this comment
Cancel
Harinathan Krishnanandam - Chennai,இந்தியா
25-மார்-201712:55:42 IST Report Abuse
Harinathan Krishnanandam தரம் உயர்த்தப்பட்ட மா நகராட்சிகளை ஒரு மா இருமா மூன்று மா என்று வகைப்படுத்தி உலக வங்கி, அமெரிக்க அரசு மற்றும் அனைத்து வகை நிதி நிறுவனங்களிடமும் 500 ஆண்டுகள் கடன் பெற்று மக்கள் மகிழும் வகையில் கட்டமைப்பு செய்ய அரசு முடிவு செய்து உள்ளது அதற்க்கு தேவை மக்கள் மக்கள் பிரதிநிதிகளின் ஒப்புதல் மட்டுமே நிதி கிடைத்த 100 ஆண்டுகளில் அனைத்து கட்டமைப்புகளையும் போர்க்கால அடிப்படையில் உலக தரத்தில் செய்து முடிக்க தயார் நிலையில் உள்ளது மக்களுக்கு அரசின் மேல் நம்பிக்கை மட்டுமே தேவை
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
25-மார்-201709:38:37 IST Report Abuse
Srinivasan Kannaiya அப்போ இனி நடக்கும் வேலைகளும் நடக்க போவதில்லை... கௌன்சிலர்கள் எல்லாவற்றிக்கும் பெரும் கையூட்டும் அதிகரிக்க போகிறது... லஞ்சலாவண்யம் தலை விரித்தாட போகிறது...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X