தோப்பூர் 'சேட்டிலைட் சிட்டி' நான்கு வழிச்சாலையுடன் இணைப்பு ..! நான்கு வருவாய் பிரிவுகளில் 9557 பிளாட்டுகள் ஒதுக்கீடு
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

25 மார்
2017
01:26

மதுரை, மதுரையில் வீட்டு வசதி வாரியம் மூலம் உச்சப்பட்டி - தோப்பூர்
'சேட்டிலைட் சிட்டி' பணிகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில்,
கப்பலுார் நான்கு வழிச்சாலையுடன் 'சேட்டிலைட் சிட்டி' இணைக்கப்பட்டுள்ளது.
ஐந்தாண்டுகளுக்கு முன் மாநில அரசு 'சேட்டிலைட் சிட்டி' திட்டத்தை அறிவித்தது. இதற்காக உச்சப்பட்டி மற்றும் தோப்பூரில் 586.86 ஏக்கர் நிலத்தை கையகப் படுத்தி அதில் 218 கோடி ரூபாயில் 19,500 வீடுகள் கட்டும் திட்டத்தை அறிவிப்பு செய்தது.
இதற்கான தனி அலுவலகம் அமைக்கப்பட்டு நிலஆர்ஜிதப்பணிகள் நடந்து வருகிறது. தற்போதும் சில பகுதிகளில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளதால்இப்பணி முழுமை பெறவில்லை. அதேசமயம் ரோடு, குடிநீர், வடிகால் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. 'சேட்டிலைட் சிட்டி'க்கு நான்கு வழிச்சாலையில் இருந்து நேரடியாக தொடர்பு ஏற்படுத்தும் வகையில் ரோடு அமைக்கும் பணிகள் நடந்து வந்தன. இதற்காக தனியார்களிடம் இருந்து நிலம் கையகப்படுத்தப்பட்டது.
இதிலும் ஒரு பிளாட்டை கையகப்படுத்தும் பணி தேக்கமடைந்ததால், இந்த இணைப்பு ரோடும் முழுமை பெறவில்லை. சில நாட்களுக்கு முன் இதற்கான தடையும் நீங்கியது. இதனால் இந்த ரோடு முழு பயன்பாட்டிற்கு வருகிறது.
வீடுகள் கட்டி விற்கும் திட்டத்திற்கு வரவேற்பு இருக்காது என்பதால் பிளாட்டுகளாக வழங்க வீட்டுவசதி வாரியம் முடிவு செய்துள்ளது. இதன் அடிப்படையில் 9557 பிளாட்டுகள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
இதில் உயர்வருவாய் பிரிவு 567, மத்திய வருவாய் பிரிவு - 1 ல் 481, மத்திய வருவாய் பிரிவு 2 ல் 1825, குறைந்த வருவாய் பிரிவில் 2235, பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவு 4449 பிளாட்டுகள் வழங்கப்பட உள்ளன.
செயற்பொறியாளர் மூர்த்தி கூறியதாவது: அடிப்படை கட்டமைப்பு பணிகள் நடந்து வருகின்றன.
70 சதவீதம் பணிகள் நிறைவடைந்த பின்னர் தான் இதுதொடர்பான அறிவிப்புகள் வெளிவரும். பொதுமக்களிடம் இருக்கும் ஆர்வத்தை பொறுத்து வீடுகள் கட்டி வழங்கும் திட்டங்களும் செயல்படுத்தும் வாய்ப்புகளும் உள்ளன.
தற்போது நான்கு வழிச்சாலையுடன் 'சேட்டிலைட் சிட்டி' இணைக்கப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து
எளிமையாக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே திட்டமிட்டபடி அனைத்து வசதிகளும் முழு
அளவில் ஏற்படுத்தப்படும், என்றார்.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Harinathan Krishnanandam - Chennai,இந்தியா
25-மார்-201712:47:57 IST Report Abuse
Harinathan Krishnanandam வீட்டு வசதி வாரியம் அனைத்து மனைகளையும் எங்கள் கட்சியிடம் தந்தால் அனைத்து தரப்பினரும் மகிழும்படி அவற்றை பொதுமக்களுக்கு நல்ல விலையில் விற்று சம்பந்தப்பட்ட அனைவரும் பயன் அடையும்படி வழி வகை செய்யப்படும் என்று தெரிவித்துக்கொள்கிறோம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.