வண்டலூர் பேருந்து நிலைய வரைபடம்திருப்தியில்லை! புதிய குழு அமைக்க சி.எம்.டி.ஏ., உத்தரவு
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

19 ஏப்
2017
01:44
பதிவு செய்த நாள்
ஏப் 19,2017 01:43

வண்டலுார் கிளாம்பாக்கத்தில் அமையவுள்ள புதிய பேருந்து நிலையத்துக்கு, ஒப்பந்த

நிறுவனம் தயாரித்த வரைபடம் திருப்திஅளிக்க வில்லை என்பதால், புதிய குழு அமைக்க, சி.எம்.டி.ஏ., உறுப்பினர் செயலர் சி.விஜயராஜ் குமார் உத்தரவிட்டுள்ளார்.


சென்னை கோயம்பேட்டில் உள்ள புறநகர் பேருந்து நிலையத்தில், போக்குவரத்து நெரிசல் வெகுவாக அதிகரித்துள்ளது. இதனால், தென் மாவட்டங்களில் இருந்து வரும் பேருந்துகளுக்காக, வண்டலுாரை அடுத்த கிளாம்பாக்கத்தில், புதிய பேருந்து நிலையம் அமைக்க முடிவு

செய்யப்பட்டது.


இதற்காக வருவாய் துறை, 85 ஏக்கர் நிலத்தை சி.எம்.டி.ஏ.,வுக்கு ஒப்படைத்துள்ளது. இந்நிலத்தில் அமைய உள்ள பேருந்து நிலையத்துக்கான வரைபடம் தயாரிப்பது திட்டத்தை நிறைவேற்றுவதற்கான கலந்தாலோசனை பணிக்கான தனியார் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது.


ஒப்பந்தம் பெற்றதில் இருந்து, மூன்று மாதங்களுக்குள், புதிய பேருந்து நிலையத்தின் வரை

படத்தை அளிக்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டிருந்தது. இதன்படி, சம்பந்தப்பட்ட ஒப்பந்த நிறுவனம் மாதிரி வரைபடத்தை, சி.எம்.டி.ஏ.,வுக்கு அளித்தது.


இந்த வரைபடத்தை ஆய்வதற்கான கூட்டம், சி.எம்.டி.ஏ., அலுவலகத்தில் அண்மையில் நடந்தது. அதில் ஒப்பந்த நிறுவனம் தயாரித்த வரைபடம் குறித்து விளக்கப்பட்டது.

ஆனால், ஒருங்கிணைந்த தன்மை இன்றி, தனியான பேருந்து நிலையமாக அது இருந்ததால், சி.எம்.டி.ஏ., உறுப்பினர் செயலர் அதிருப்தி அடைந்தார். அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மட்டும் பயன்படுத்தும் வகையில் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதை, அதிகாரிகள் ஏற்க மறுத்தனர். இதனால் வண்டலுார் பேருந்து நிலைய திட்டம் சிக்கலாகியுள்ளது.


மாற்றம்!


தென் மாவட்ட பேருந்துகளை மட்டும் கருத்தில் கொண்டு செயல்படாமல், மாநகர பேருந்துகள், மெட்ரோ, மோனோ, புறநகர் மின்சார ரயில் சேவைகளுடன் இணைப்பது, தனியார் வாகனங்கள் வந்து செல்வது என, ஒருங்கிணைந்த வகையில், வரைபடத்தை மாற்றி தாக்கல் செய்ய உறுப்பினர் செயலர் உத்தரவிட்டுள்ளார்.இதற்காக, இரண்டு தலைமை திட்ட அதிகாரிகள், இரண்டு மூத்த திட்ட அதிகாரிகள் அடங்கிய குழுவை அமைத்து உத்தரவிடப்பட்டுஉள்ளது. இக்குழுவினர், ஒப்பந்த நிறுவனத்துடன் கலந்து பேசி, புதிய வரைபடத்தை தயார் செய்வர்.

சி.எம்.டி.ஏ., உயரதிகாரி


சர்ச்சை!


முதல்வர் சட்டசபையில் அறிவித்த, இந்த திட்டத்தை செயல்படுத்தும் போது, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் அலட்சியமாக இருப்பது இதில் தெரியவருகிறது.இதற்கான டெண்டரில், 'ஒருங்கிணைந்த' என்ற நோக்கம் தெளிவாக குறிப்பிடப்படாததால், கலந்தாலோசனை நிறுவன வரைபடம் நிராகரிக்கப்படும் நிலைக்கு சென்றுள்ளது. இது போன்ற அலட்சிய அதிகாரிகளை வைத்து, எந்த திட்டத்தையும் முறையாக செயல்படுத்த முடியாது.நகரமைப்பு வல்லுனர்கள்

- நமது நிருபர் -

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (6)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mupaco - Madurai,இந்தியா
19-ஏப்-201717:00:16 IST Report Abuse
mupaco மாடி பகுதியில் மெட்ரோ ரயில் செல்ல , தரையடியில் மோனோ ரயில் செல்ல, எட்டு வெளியேறும் வழிகள், முன்பகுதியில் மாநகர பேருந்து தொட்டு செல்ல , பார்க்கிங், இணையம், நகரும் படிக்கட்டுக்கள், , வணிக வளாகம், ஒய்வு மையம், விசாரணை இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.
Rate this:
Share this comment
Cancel
Subramanian Sundararaman - Chennai,இந்தியா
19-ஏப்-201716:24:48 IST Report Abuse
Subramanian Sundararaman For the past six years the proposal is hanging on the fire. It is not clear whether CMDA has given the terms of reference based on which the proposal is to be drawn up. When the neighboring AP has completed many projects including linking of a river , it is unfortunate that we have come to the same starting point after a time overrun . This will push up the project cost. What we can doubt is whether the project is delayed by vested interests or non-availabity of funds. If even a Bus Terminal can not be brought into operation how are we going to build 13 smart cities in TN ?.
Rate this:
Share this comment
Cancel
thiru - Chennai,இந்தியா
19-ஏப்-201713:52:42 IST Report Abuse
thiru வண்டலுார் கிளாம்பாக்கத்தில் அமையவுள்ள புதிய பேருந்து நிலையத்தினால் பயன் இருக்காது.. தற்போது இருக்கும் வாஹனப்பெருக்கம் மற்றும் நெரிசலை தவிர்க்க செங்கல்பட்டு மேல்மருவத்தூர் இடையே அமைத்தால் அடுத்த 10 வருடங்களுக்கு நெரிசல் இருக்காது..
Rate this:
Share this comment
Cancel
Nagarajan Thamotharan - Panagudi, Tirunelveli,இந்தியா
19-ஏப்-201712:42:44 IST Report Abuse
Nagarajan Thamotharan குறைந்த பட்சமாக மழை நீர் சேமிப்பு மற்றும் வடிகால் இருக்கிற மாதிரி வரைபடத்தை, சி.எம்.டி.ஏ. புதிய பேருந்து நிலையம் அமைக்க முடிவு செய்ய வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Ganesh Subramaniam - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
19-ஏப்-201708:56:45 IST Report Abuse
Ganesh Subramaniam This project is already delayed by 6 years CMDA is right we should Integrate BUS, Metro, Train for better transport facilities. The day GOVT decide to construct Vandaloor Bus stand they should keep in mind to construct a Road over bridge to avoid traffic congestion....Am sure they would have learnt a lesson from Koyambedu Now they are constructing a flyover after 12 years
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
19-ஏப்-201704:29:59 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் கமிஷன் தகையவில்லையாம் மக்களே..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.