துரைப்பாக்கம் குடிநீர் திட்ட பணிகள் ஜவ்வு! குடிநீர் வாரியம் தனி கவனம் செலுத்துமா?
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

20 ஏப்
2017
06:39

துரைப்பாக்கத்திற்கு குடிநீர் வழங்கும் திட்டம் துவக்கப்பட்டு, மூன்று ஆண்டுகள் ஆகியும், ஆமை வேகத்தில் பணிகள் நடப்பதால், அடுத்த கோடையிலாவது குடிநீர் கிடைக்குமா என்ற, சந்தேகம் எழுந்துள்ளது. எனவே, குடிநீர் வாரிய அதிகாரிகள் தனி கவனம் செலுத்தி, இத்திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.



ராஜிவ் காந்தி சாலையில் அமைந்து உள்ளது துரைப்பாக்கம். அது ஊராட்சியாக இருந்தபோது, 20 ஆயிரம் பேர் மட்டுமே வசித்து வந்தனர். அப்பகுதி மாநகராட்சியாக மாற்றப்பட்டு, இரண்டு

வார்டுகளாக பிரிக்கப்பட்டது. ஏராளமான, ஐ.டி., நிறுவனங்களின் வரவு, பழைய மகாபலிபுரம் சாலையை, ஆறு வழிப்பாதையாக அமைத்தது, ராஜிவ்காந்தி சாலையாக மற்றப்பட்டது ஆகியவற்றின் காரணமாக தற்போது, துரைப்பாக்கம் பகுதியில், 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.



பெருங்குடி குப்பை கிடங்கால், 20 ஆண்டுகள் முன்பே, துரைப்பாக்கம் பகுதி முழவதும், நிலத்தடி நீர் மாசடைந்து, உவர்ப்பு தன்மை கொண்டதாக மாறிவிட்டது. ஊராட்சியாக இருந்தபோது, அப்பகுதி மக்கள், வினியோகிக்கப்பட்ட தண்ணீரை நம்பி மட்டுமே வசித்து வருகின்றனர்.


இந்நிலையில், மூன்று ஆண்டுகளுக்கு முன், சென்னை குடிநீர் வாரியத்தின் மூலம், 47.89 கோடி ரூபாய் மதிப்பில், குடிநீர் திட்டப்பணிகள் துவக்கப்பட்டன. அப்பணிகள் ஆமை வேகத்தில் நடப்பதால், 40 சதவீத பணிகள் கூட நிறைவடையவில்லை. எனவே, குடிநீர் திட்டப் பணிகளை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.



இது குறித்து, பகுதிவாசிகள் கூறியதாவது: துரைப்பாக்கம் பகுதி முழுவதும் உள்ள தண்ணீர், குடிப்பதற்கு லாயக்கற்ற, உவர்ப்பு தன்மை கொண்டது. குடிநீருக்கு, 'கேன் வாட்டரை' பயன்படுத்தி வருகிறோம். ஊராட்சியாக இருந்தபோது, பல இடங்களில் ஆழ்துளை கிணறு அமைத்து, தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டது. அதை இந்த பகுதி மாநகராட்சியுடன் மாற்றப்பட்ட பின், பல காரணங்களுக்காக, ஊராட்சி சார்பில் வினியோகித்த தண்ணீரும் நிறுத்தப்பட்டது.



இதனால், விநாயகா நகர், ஆனந்தாநகர் விரிவு, எகிரேட்பார்க், டி.வி.எச்., அறிஞர் அண்ணாநகர், வெங்கடேஸ்வரன்நகர் உள்ளிட்ட பகுதிகள், கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. நாங்கள், டேங்கர் லாரி தண்ணீரை பயன்படுத்தி வருவதால், குடிநீர் மற்றும் தண்ணீருக்காக, எங்கள் வருவாயின் ஒரு பகுதி செலவழிக்கப்படுகிறது. எனவே, சென்னை குடிநீர் வாரியத்தினரும், மாநகராட்சியினரும், இந்த வார்டுக்கு தனி கவனம் செலுத்தி, தேவையான குடிநீர் மற்றும் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும். மேலும், குடிநீர் திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.



விரைவில் குடிநீர் வினியோகம்

குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது: குடிநீர் வாரியத்தின் மூலம், துரைப்பாக்கம் பகுதிக்கு, 47.89 கோடி ரூபாய் மதிப்பிலான குடிநீர் திட்டப் பணிகள் நடந்து வருகின்றன. நெம்மேலி கடல் நீர் குடிநீராக்கும் திட்டம், வீராணம் குடிநீர் திட்டம் ஆகியவற்றின் மூலம், குடிநீர் பெற்று வினியோகிக்கப்பட உள்ளது. இதற்காக, துரைப்பாக்கம் பகுதியில், குடிநீர் குழாய்கள் புதைக்கும் திட்டம் பெரும்பாலும் முடிக்கப்பட்டுள்ளது. மேலும், தலைமை செயலக குடியிருப்பில்,

55 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட கீழ்நிலை, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்டப்பட்டு வருகின்றன. அதேபோல, கங்கையம்மன் கோவில் தெருவில், 16 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்படுகிறது. இப்பணிகள் முடிந்ததும் விரைவில் குடிநீர் வினியோகம் செய்யப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.



-நமது நிருபர் -

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.