சென்னை ஸ்மார்ட் சிட்டி திட்டம் இனி வேகம் பிடிக்கும்; தலைமை செயல் அதிகாரி நியமனம்
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

20 ஏப்
2017
07:07

சென்னை : சென்னை ஸ்மார்ட் சிட்டி நிறுவனத்திற்கான தலைமை செயல் அதிகாரி, நிறுவன செயலர்நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் இனி வேகம் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மத்திய அரசின், ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு, முதல்கட்ட தேர்விலேயே, சென்னை மாநகராட்சி இடம் பிடித்தது. பொதுமக்கள் கருத்துக்களை பெற்று, தி.நகரை, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேம்படுத்த திட்டம் வகுக்கப்பட்டது. எந்தெந்த வகையான மேம்பாட்டு திட்டங்களை, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் செய்யலாம் என, தனியார் நகரமைப்பு வல்லுனர்களை கொண்டு, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது. மத்திய அரசின் ஒப்புதலும் பெறப்பட்டது.


இதைத் தொடர்ந்து, இத்திட்டத்தை செயல்படுத்த வசதியாக, சென்னை ஸ்மார்ட் சிட்டி நிறுவனம் உருவாக்கப்பட்டது. இந்த நிறுவனம், மாநகராட்சி தலைமை அலுவலக வளாகத்தில் உள்ள, 'அம்மா' மாளிகையில் இருந்து இயங்கும் என அறிவிக்கப்பட்டது.இந்த நிறுவனத்திற்கு தலைமை செயல் அதிகாரி, நிறுவன செயலர் தலைமை கணக்கு அதிகாரி ஆகியோரை, ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யவும், அதற்கான தகுதியை நிர்ணயித்து, தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும், அறிவிப்பு வெளியிடப்பட்டது.


இதன்படி தலைமை செயல் அதிகாரி, நிறுவன செயலாளர் பதவிகளுக்கு, விண்ணப்பங்கள் குவிந்தன. இதில், சென்னை சிட்டி கனெக்ட் நிறுவனத்தின் திட்ட இயக்குனர் ராஜ் ஷெருபல், சென்னை ஸ்மார்ட் சிட்டி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டார்.

நகர போக்குவரத்து மேலாண்மையில் தனித்துவம் பெற்ற இவர், சென்னை மாநகராட்சியின், மோட்டார் வாகனமில்லா போக்குவரத்து கொள்கை உருவாக முக்கிய காரணமாக இருந்தவர்.

இந்த கொள்கையின்படி அமைக்கப்படும், நடைபாதை திட்டங்களுக்கு வடிவமைப்பு செய்தவர். கடந்த, 17ம் தேதி, ராஜ் ஷெருபல் பதவியேற்றுக் கொண்டார்.


அதே போல ஹரிஷ்குமார், சென்னை ஸ்மார்ட் சிட்டி நிறுவன செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். தலைமை கணக்கு அதிகாரி பதவி மட்டும் காலியாக உள்ளது. இதற்கு தகுதியான நபர்கள் கிடைக்கவில்லை.வெகு விரைவில் இந்த பதவியும் நிரப்பப்பட்டு, ஸ்மார்ட் சிட்டி நிறுவனம் முழுவீச்சில் செயல்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


சென்னை ஸ்மார்ட் சிட்டி நிறுவன, தலைமை செயல் அதிகாரி நியமனத்தை தொடர்ந்து, தி.நகரில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கான முதல் கட்ட பணிகள் வேகமாக துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Advertisement


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.