750 கிலோ புகையிலை பொருட்கள் சிக்கியது
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

21 ஏப்
2017
00:30

சென்னை : சிந்தாதிரிபேட்டையில் நடந்த வாகன சோதனையில், 750 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவை, வெளி மாநிலத்தில் இருந்து ஆம்னி பேருந்தில் கொண்டு

வரப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது.

சிந்தாதிரிபேட்டையில், நேற்று முன்தினம் இரவு, போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த, 'டாடா ஏஸ்' வாகனத்தை மறித்து சோதனையிட்டதில், 30 மூட்டை பான்பராக் பாக்கெட்டுகள் இருந்தன; அவற்றின் மொத்த எடை, 750 கிலோ.

போலீசார், அவற்றை பறிமுதல் செய்து, சென்னை மாநகராட்சி அதிகாரிகளிடம் போலீசார் ஒப்படைத்தனர். உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுடன் இணைந்து, இந்த புகையிலை பொருட்களை அழிக்க, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதற்கிடையே, எங்கிருந்து புகையிலை பொருள் கொண்டு வரப்

பட்டது என, போலீசார் விசாரணை நடத்தினர்.

ஆம்னி பேருந்துகள் மூலம் பெங்களூரில் இருந்து கொண்டுவரப்படும் பான்பராக் பாக்கெட்டுகள், மின்வாரிய அலுவலகத்திற்கு பின்புறம் உள்ள சாலையில், பேருந்தில் இருந்து மினி வேன்களுக்கு மாற்றப்படும்; பின், பாரிமுனையில் உள்ள குடோனுக்கு கொண்டு செல்லப்படும் என்பது தெரியவந்தது.

இது குறித்து தொடர் விசாரணை நடந்து வருகிறது.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.