கல்குவாரிகளில் நீர் திருட்டு அதிகரிப்பு - சென்னை குடிநீருக்கு புதிய சிக்கல்
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

21 ஏப்
2017
00:31


கல்குவாரி குட்டைகளில் நீர் திருட்டு அதிகரித்துள்ளதால், சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில் புதிய சிக்கல் எழுந்துள்ளது.

சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்கு, நாள்தோறும், 83 கோடி லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புழல், சோழவரம், செம்பரம்பாக்கம், பூண்டி ஆகிய நான்கு ஏரிகள், வறண்டுவிடும் கட்டத்தில் உள்ளன.

இதனால், தென்சென்னையை ஒட்டி உள்ள, காஞ்சிபுரம் மாவட்டத்தின் கல்குவாரி குட்டைகளில் உள்ள நீரை, குடிநீருக்கு பயன்

படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக, மாங்காடு, திருநீர்மலை, பம்மல், நன்மங்கலம், குன்றத்துார் உள்ளிட்ட இடங்களில், 31 கல்குவாரி குட்டைகளை, சென்னை குடிநீர் வாரியம் தேர்வு செய்துள்ளது. இந்த கல்குவாரி குட்டைகளில் இருந்து நீர் எடுப்பதற்கான ஏற்பாடு

தீவிரமாக நடந்து வருகிறது.

இந்த நீரை வைத்து, சென்னையின், இரண்டு மாத குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியும்.

இந்நிலையில், குடிநீர் வாரியம் தேர்வு செய்த கல்குவாரிகள் மட்டுமின்றி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள, 70க்கும் அதிகமான கல்குவாரிகளில் இருந்தும், தனியார் தேவைக்காக, நீர் திருடுவது அதிகரித்துள்ளது. பொதுப்பணித்துறை, குடிநீர் வாரியம், காவல் துறை, உள்ளூர் அரசியல்வாதிகள் ஆசியுடன், இந்த

நீர் திருட்டு அரங்கேறி வருகிறது.

சென்னையில் உள்ள ஓட்டல்கள், வர்த்தக நிறுவனங்கள் போன்றவற்றின் தேவைக்காக, இந்த தண்ணீர் எடுத்து செல்லப்பட்டு வருகிறது.

இதேநிலை தொடர்ந்தால், சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில் சிக்கல் ஏற்படும் வாய்ப்புள்ளது. எனவே, கல்குவாரிகளில் அதிகாரிகள் ஆசியுடன் நடக்கும் நீர் திருட்டை தடுப்பதற்கான ஏற்பாடுகளை அரசு செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளது.


-நமது நிருபர் -

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.