ஆய்வக உதவியாளர் பணிக்கு நாளை சான்றிதழ் சரிபார்ப்பு
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

21 ஏப்
2017
00:32

சென்னை : 'அரசு பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் பணிக்கான, சான்றிதழ் சரிபார்ப்பு, எம்.சி.சி., பள்ளியில், நாளை நடத்தப்படும்' என, கல்வித்துறை அறிவித்து உள்ளது.

தமிழகம் முழுவதும் அரசு உயர், மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 4,362 ஆய்வக உதவியாளர் பணிக்கு, தேர்வுத்துறை மூலம் எழுத்து தேர்வு நடந்தது. மார்ச்சில் முடிவுகள் அறிவிக்கப்பட்டு, ஏப்., 9 முதல், 11 வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது. தேர்வானோருக்கு, ஒரு வாரத்திற்கு முன், பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலால், சென்னை மாவட்டத்தில், நிறுத்தப்பட்ட சான்றிதழ்

சரிபார்ப்பு, நாளை நடத்தப்படுகிறது.

இதுகுறித்து, சென்னை மாவட்ட, சி.இ.ஓ.,

அனிதா வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சைதாப்பேட்டை பனகல் மாளிகையில் உள்ள முதன்மை கல்வி அதிகாரி அலுவலகம்; சைதாப்பேட்டை, மத்திய சென்னை மாவட்ட கல்வி அலுவலகம்; எழும்பூரில் உள்ள வட சென்னை, தென் சென்னை மாவட்ட கல்வி அலுவலகங்கள்; சூளைமேட்டில் உள்ள கிழக்கு சென்னை மாவட்ட கல்வி அலுவலகம் ஆகியவற்றில், சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வானோர்

பட்டியல் ஒட்டப்பட்டுள்ளது.

மேலும், ceomadras கூகுள் இணைய பக்கத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பு பணி, ஏப்., 22, காலை, 9:30 மணிக்கு, சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலையில் உள்ள, எம்.சி.சி., பள்ளியில் நடக்கும். பள்ளி வளாகத்தில், சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வானோரின் பட்டியலை, தேர்வர்கள் பார்த்து

கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.