'நோட்டீஸ்' வழங்கியும் நடைபாதை ஆக்கிரமிப்பு அதிகாரிகள் கையூட்டு பெறுவதாக குற்றச்சாட்டு
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

19 மே
2017
21:19

வளசரவாக்கம்:வருவாய் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பணம் பெற்று, ஆக்கிரமிப்புகளை அகற்ற முன்வராததால், ஸ்ரீதேவிகுப்பம் பிரதான சாலையில், ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகின்றன.வளசரவாக்கம் மண்டலம், 149வது வார்டு, ஸ்ரீதேவிகுப்பம் பிரதான சாலை, வளசரவாக்கம், ஆற்காடு சாலை - மதுரவாயல், பூந்தமல்லி நெடுஞ்சாலையை இணைக்கும் முக்கிய சாலையாக உள்ளது.அதன் நடைபாதையில், ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் மூலம், வரிசையாக கடைகள் அமைத்து, ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது.

இதில், சாலையோரம் உள்ள சர்வே எண். 80, 81, 93 ஆகிய வண்டிப்பாட்டை அரசு நிலங்களில், சிலர் கடைகளை கட்டி வாடகைக்கு விட்டு உள்ளனர். இதற்கு சில அதிகாரிகளும், முன்னாள் கவுன்சிலர்களும் உறுதுணையாக இருப்பதாகக் கூறப்படுகிறது.தற்போது இந்தக் கடைகள், நிரந்தர கட்டடமாக மாற்றப்பட்டுள்ளன. இந்த நிலங்கள், வருவாய் துறை பராமரிப்பிலும், சாலை மாநகராட்சி பராமரிப்பிலும் வருகின்றது. ஆனால், இரு துறைகளும் இதை கண்டுகொள்ளவில்லை.

இந்நிலையில், வருவாய் துறையினர் சர்வே செய்து கொடுத்தால், உடனடியாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.இதையடுத்து, இரண்டு மாதங்களுக்கு முன், வருவாய்துறையினர், ஆக்கிரமிப்பு பகுதியை சர்வே செய்து, மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர்.

இதையடுத்து, ஆக்கிரமிப்பு கடைகளுக்கு, 'நோட்டீஸ்' வழங்கப்பட்டது. ஆனால், இதுவரை கடைகள் அகற்றப்படவில்லை. தற்போது அப்பகுதியில், மேலும் சில கடைகள் முளைத்துள்ளன.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.