வாழ்த்துகள்! ஊர் கூடி ஏரியை தூர் வாரிய மடிப்பாக்கம் மக்கள்:நமக்கு நாமே என களமிறங்கி பெரும் சாதனை
Advertisement
 
 
Advertisement
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

28 ஜூலை
2017
20:48
பதிவு செய்த நாள்
ஜூலை 28,2017 20:45

மடிப்பாக்கம் பகுதியில் உள்ள நீர்நிலைகளை துார் வார, அரசு முன்வராததால், அப்பகுதி மக்களே ஒன்று திரண்டு, ஐந்து லட்சம் ரூபாய் செலவில், ஏரி மற்றும் குளங்களை சீர்படுத்தினர். இதற்கு, சமூக ஆர்வலர்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.


சென்னை மாநகராட்சி எல்லையில் உள்ள மடிப்பாக்கத்தில், 62 ஏக்கர் பரப்பளவில் ஏரி உள்ளது. இதன், கரை பகுதி, 1.2 கி.மீ., துாரம் கொண்டது.பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள, இந்த ஏரியில் துார் வாரி, 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகின்றன. இதனால், ஒவ்வொரு மழைக்கும், இந்த ஏரியில் அதிகளவு நீரை சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டது.


ஆக்கிரமிப்பு


மடிப்பாக்கம் பேருந்து நிலையம் அருகில் உள்ள, ஓதேஸ்வரர் குளம், 5 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த குளத்தின் ஒரு பகுதி, ஆக்கிரமிப்பில் சிக்கி உள்ளது. அதை மீட்கும் எண்ணமே, அதிகாரிகளுக்கு இல்லை.சாலை மட்டம் வரை, குளத்தில் சகதி இருந்ததால், மழைநீரை சேமிக்க முடியவில்லை.


இந்த குளத்தில் இருந்து, 1.5 கி.மீ., துாரத்தில், 2 ஏக்கர் பரப்பளவு கொண்ட நாயக்கன்மார் குளம் உள்ளது. இந்த குளத்தின் ஒரு பகுதியை மூடி, 'அம்மா' உணவகம், ரேஷன் கடை, வி.ஏ.ஓ., அலுவலகம் ஆகியவை கட்டப்பட்டது. மற்றும், ஆக்கிரமிப்பாளர்களும், மீதமுள்ள குளத்தின் பகுதியையும், மெல்ல சுரண்டி வருகின்றனர்.ஏரி மற்றும் இரண்டு குளங்களில், அதிகளவு நீர் சேமிக்க வழியிருந்தால், மடிப்பாக்கம் பகுதியில், நிலத்தடி நீர்மட்டம், அதள பாதாளத்திற்கு சென்று இருக்காது.


நம்பி பயனில்லை


இந்த நீர்நிலைகளை மீட்க மற்றும் பாதுகாக்க, 20 ஆண்டுகளாக, உள்ளாட்சி மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஒவ்வொரு மழையின் போது, துார் வாருகிறோம் என்ற பெயரில், புல், குப்பையை அகற்றி, மக்களின் வரிப்பணம் லட்சக்கணக்கான ரூபாய், 'ஏப்பம்' விடப்பட்டது. இதுவரை, ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுத்ததில்லை.மடிப்பாக்கம் பகுதி நலச் சங்கங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இணைந்து, தொடர்ந்து கோரிக்கை வைத்தும், 'நடவடிக்கை எடுக்கப்படும்' என்ற பதில் தான், பல ஆண்டுகளாக, அதிகாரிகளிடம் இருந்து வந்துள்ளது. மக்கள் பிரதிநிதிகளும், இதை கண்டுகொள்ளவில்லை.அதிகாரிகளையும், மக்கள் பிரதிநிதிகளையும் நம்பினால், மடிப்பாக்கம் பாலைவனமாகி விடும் என, இரண்டு மாத்திற்குமுன், மடிப்பாக்கம் பகுதிமக்கள் ஒன்று கூடி பேசினர். இதனால் அவர்களே, நீர்நிலைகளை துார் வார முன்வந்தனர்.


ஊக்குவித்த 'தினமலர்'


ஏரி, குளம் ஆக்கிரமிப்பில் சிக்கி, கழிவுநீரால் மாசடைகிறது என, அடிக்கடி சுட்டிக்காட்டி செய்தி வெளியிடும், 'தினமலர்' நாளிதழ் தான், எங்களை இந்த பணியை செய்ய துாண்டியது. ஒவ்வொரு வீடாக சென்று, நிலைமையை எடுத்து கூறி, நிதி கேட்டு, இரண்டு லட்சம் ரூபாய் செலவில், 10 அடி வரை ஆழப்படுத்தி, இரண்டு குளங்களை சீரமைத்து உள்ளோம்.


சீனு.சேதுராமன்,மடிப்பாக்கம் நீர்நிலை புனரமைப்பு குழு


மடிப்பாக்கம் ஏரியை பாதுகாக்க கோரி, 20 ஆண்டுகளில், நுாற்றுக்கு மேற்பட்ட முறை, அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் அறை கதவை தட்டி உள்ளோம்; எந்த நடவடிக்கையும் இல்லை. நிலத்தடி நீர் இல்லாமல், ஊரை காலி செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என்பதை உணர்ந்து, மக்களிடம் ஆதரவு கேட்டோம். ஒன்றரை மாதத்தில், ஏரிக்குள், மேடான பகுதியை துார் வாரி, அந்த மண்ணால் கரையை பலப்படுத்தி உள்ளோம்.ராமகிருஷ்ணன்,மடிப்பாக்கம் ஏரி புனரமைப்பு குழு


ரூ 45 லட்சத்தை 'ஆட்டை' போடுவர்!மூன்று நீர்நிலைகளில், பொதுமக்கள் மேற்கொண்ட பணியை கணக்கிட்டால், இதே பணிக்கு, அரசு, 50 லட்சம் ரூபாய்க்கு மேல் ஒதுக்கி இருக்கும்; ஆனால், மடிப்பாக்கம் மக்கள், ஐந்து லட்சம் ரூபாய் செலவில், மூன்று நீர்நிலைகளையும் முழுமையாக சுத்தப்படுத்தி உள்ளனர்.அரசின் நலத்திட்டங்களுக்கு, அதிகளவு மக்கள் வரிப்பணத்தை ஒதுக்கி, அதை கமிஷன், லஞ்சம் என்ற பெயரில், அதிகாரிகளும், அரசியல்வாதிகளும், ஒப்பந்த

தாரர்களும் கொள்ளையடித்துள்ளனர். இதை தடுக்க, நேர்மையான ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.


-நமது நிருபர்-

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (8)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Gopi - Chennai,இந்தியா
31-ஜூலை-201713:40:19 IST Report Abuse
Gopi இதப்பத்தி எல்லாம் கமலஹாசனும் ரஜினியும் பேசமாட்டாங்க. ஆனா அவங்களப்பத்தி தான் நாம பத்தி பத்தி யா படிப்போம் எழுதுவோம் இல்லாட்டி பிக் பாஸ் பாப்போம்
Rate this:
Share this comment
Cancel
Sundar - Madurai,ஐக்கிய அரபு நாடுகள்
29-ஜூலை-201717:36:05 IST Report Abuse
Sundar By continuing this the tax payers money will be credited in ruling party and its cadres accounts. ஒவ்வொரு மழையின் போது, துார் வாருகிறோம் என்ற பெயரில், புல், குப்பையை அகற்றி, மக்களின் வரிப்பணம் லட்சக்கணக்கான ரூபாய், 'ஏப்பம்' விடப்பட்டது.
Rate this:
Share this comment
Cancel
christ - chennai,இந்தியா
29-ஜூலை-201710:23:32 IST Report Abuse
christ நம் நாடு வளம் பெற, நாட்டில் ஊழல் செய்பவர்களையும் , லஞ்சம் வாங்குபவர்களையும் தூக்கில் போட வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
Rajarajan - Thanjavur,இந்தியா
29-ஜூலை-201709:23:38 IST Report Abuse
Rajarajan இந்த ஓத்தீஸ்வரர் குளம் ஆக்கிரமிப்பு சம்பந்தமாக, சுமார் 15 வருடங்களுக்கு முன்பே, தினமலரில் ஒரு கட்டுரை வெளியானது. விசாரணையும் நடந்ததாக கேள்விபட நேர்ந்தது. இந்த கோவில் ஓத்தீஸ்வரர் குளத்தை சுற்றி ஆக்கிரமித்து கடைகள் மற்றும் வீடுகளை கட்டியோர் அனைவரும் தி.மு.க. வினர் என்றும், இதற்க்கு துணைபோனவர், அன்றைய பஞ்சாயத்து தலைவரான திரு. அரிகிருஷ்ணன் (தி.மு.க.) மற்றும் திரு. பொன்னுசாமி (அ.தி.மு.க.) என்றும் தெரிய வந்தது. இந்த இருவருமே இந்த ஆக்கிரமிப்பை, தங்களது கட்சியினர் மூலம் செய்து, குளக்கரையின் ஆவணங்களை தங்களுக்கு ஏற்றவாறாக, கட்டிட நிலங்களாக, தாங்களே பொதுக்குழுவை கூட்டி திருத்திக்கொண்டனர் என்றும், தங்களது கட்சி காரர்களுக்கு சரிபாதியாக பகிர்ந்துகொடுத்தனர் என்றும் தெரியவந்தது. இந்த ஆக்கிரமிப்பை அகற்ற முயற்சிக்கையில், இவர்கள் அரசு அதிகாரிகளை தாக்கினர் என்ற செய்தியும் உண்டு. இந்த செய்திகள் தி.மு.க. வட்டாரத்தில், சில வருடங்களுக்கு முன்பு மிகவும் பிரபலம். சிவன் சொத்து, குல நாசம்.
Rate this:
Share this comment
Cancel
Chanemougam Ramachandirane - pondicherry ,இந்தியா
29-ஜூலை-201708:26:45 IST Report Abuse
Chanemougam Ramachandirane இதுபோல் நீர்நிலை ஆக்கிரிமிப்புகள் மற்ற ஆக்கிரிமிப்புகள் என்று தெரிந்தால் அகற்ற முன் வரவேண்டும்
Rate this:
Share this comment
Cancel
kundalakesi - VANCOUVER,கனடா
29-ஜூலை-201707:38:25 IST Report Abuse
kundalakesi "வெட்க மான ஈன ரோஷ மிச்ச மீதி ஏதுமற்ற" என பாடத் தோன்றுகிறது இந்த நிலை கெட்ட ...சை நினைத்தால்.
Rate this:
Share this comment
Cancel
Manian - Chennai,இந்தியா
29-ஜூலை-201706:51:52 IST Report Abuse
Manian தினமலர் பொதுவாக செய்யும் சேவைகள் , அதன் மூல கர்த்தா ராமசுப்பையர் வழியில் செல்கிறது. மற்ற ஊடகங்கள் அரசியல்வாதிகள் கூஜாக்களாக இருப்பது வருந்ததக்கதே. மக்கள் தங்கள் கொடுத்த வரி பணத்தை ( 1 %) ஓட்டுக்கு பதில் பெறுகிறார்கள். ஆகவே, அரசாங்கம் மக்களே தங்களுக்கு தேவையான மாற்றங்களை ஓட்டுக்கு வாங்கின காசில் செய்யட்டும் என்றே எதுவும் செய்யவில்லை. 5 ல ட்சம் செலவுதான். ஆனால் அது மக்களை (எல்லோரையும் இல்லை) களத்தில் இறங்கி உள்ளது. இதேபோல நானும் என் நண்பரும் கைக்காசு செலவு செய்து ஏமாந்தோம். அதையே இப்போது மக்கள் செய்கிறார்கள். ஆனால் தமிழ் நாடு பூராவும் இது பரவவில்லையே என்பது வருத்தமாக இருக்கிறது. கோயம்புத்தூர், ராமநாத புரம் போன்ற இடங்களில் சில கிராமங்கள் இதை செய்தன. மற்றவர்கள் அரசாங்கம் செய்ய வேண்டும், ஓட்டுக்கு காசும் தரவேண்டும் என்று நினைக்கிறார்கள். தண்ணீரின்றி அவர்கள் சாவது நிச்சயம். ராஜஸ்தான் பாலைவனைத்திலேயே தடுப்பணை கட்டி தண்ணீர் சேமிக்கிறார்கள். இங்கோ விவசாயிகள் ஒன்றாக கூடி துயர்வற முன்வராமல், டெல்லி போயி காசு பார்க்க நினைப்பது வெட்கக்கேடு. துடைப்பாடல் தலையில் அடிப்பட்டு ஒருவித திராவிட நாட்டியம் என்று வேடிக்கை பார்கிரார்கள். பண்பி முடிந்த அரசாங்க வேலையாட்கள், கல்லூரி மாணவர்கள் இம்மாதிரி சேவை செய்தல் மட்டுமே ரேஷன் கொடுக்க வேண்டும். ஒதுக்கீட்டில் இந்த சேவையும் சேர்க்கப்படவேண்டும். வைகை கரை உடைந்த உடன் பிட்டு விற்ற பாண்டியன் ஈசனையே வேலையாளாக வைத்துக் கொள்ளவில்லையா? அந்த தன மனம் இப்பொது எங்கே?
Rate this:
Share this comment
Cancel
vasu - Sydney,ஆஸ்திரேலியா
29-ஜூலை-201702:57:23 IST Report Abuse
vasu வாழ்த்துக்கள். இதே மக்கள் தானே ஓட்டும் போடுகின்றனர், ஏன் பழைய கட்சிகளுக்கே ஓட்டு போடவேண்டும் ? மாற்றி யோசியுங்கள். ஒரு நாளாவது ஆளை தேர்ந்து எடுங்கள். நாடும் வீடும் முன்னேறும்,
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.