'மற்றவர்களுக்கு பயனுள்ள வாழ்க்கை வாழ்ந்தவர் எஸ்.ஆர்.ஜி.,'
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

13 ஆக
2017
00:06

சென்னை:''மற்றவர்களுக்கு பயனுள்ள வாழ்க்கை எப்படி வாழ வேண்டும் என்பதை வாழ்ந்து காட்டியவர் எஸ்.ஆர்.ஜி.,'' என, அவரது நுாற்றாண்டு விழாவில், எழுத்தாளர் சிவசங்கரி புகழாரம் சூட்டினார்.பேராசிரியர் எஸ்.ஆர்.கோவிந்தராஜன், 1917ல், கும்பகோணத்தில் பிறந்தார். தன் கல்லுாரி படிப்பை, திருச்சி செயின்ட் ஜோசப் கல்லுாரியிலும், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்திலும் முடித்தார்.


பின், பல கல்லுாரிகளில் பேராசிரியராக பணியாற்றி, சிறந்த மாணவர்களை உருவாக்கியுள்ளார். இயற்பியலில் சிறப்பு வகுப்புகளை நடத்தி, தேசத்திற்கு சிறந்த விஞ்ஞானிகளை உருவாக்கியவர்.


பேராசிரியர், எஸ்.ஆர்.கோவிந்தராஜனின் குடும்பத்தினர், மருத்துவ ஆராய்ச்சி மையம் ஆகியவை இணைந்து நடத்திய, எஸ்ஆர்.ஜி.,யின் நுாற்றாண்டு விழா, சென்னை கல்லுாரி சாலையில் உள்ள சங்கர நேத்ராலயா மருத்துவமனை அரங்கில் நேற்று நடந்தது.

இதில், சமூக ஆர்வலர் ராமகிருஷ்ண ராஜா பேசுகையில், ''நான், எஸ்.ஆர்.ஜி.,யின் மாணவர் என்பதில் பெருமையடைகிறேன். மாதா, பிதாவிற்கு அடுத்து குரு எனும் மூன்றாம் ஸ்தானத்திற்கு, எஸ்.ஆர்.ஜி., மிகவும் பொருத்தமானவர்,'' என்றார்.

எழுத்தாளர் சிவசங்கரி பேசியதாவது:என் எழுத்துக்களின் விமர்சகராக அறிமுகமானவர், எஸ்.ஆர்.ஜி., பின், அவரின் குடும்ப நண்பராக நான் மாறிவிட்டேன். என் இலக்கிய அறிவின் குருவே அவர் தான். பிறப்பு, இறப்பு என்பதற்கு இடையில், மற்றவர்களுக்கு பயனுள்ள வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்பதை வாழ்ந்து காட்டியவர்.இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில், பேராசிரியர்கள் சந்தானம், ராஜகோபால், சங்கரன், மருத்துவர் பத்ரிநாத், 'அரிமா' ஹரிதாஸ் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர். எஸ்.ஆர்.கோவிந்தராஜனின் மகன் சுந்தர்ராஜன், விருந்தினர்களை கவுரவித்தார். முன்னதாக, மருத்துவர் சுரேந்திரன் வரவேற்றார்.

இறுதியில், பின்னணி பாடகி வாணி ஜெயராமின் பிராத்தனை நிகழ்ச்சிநடந்தது.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.