சென்னையில் கிருஷ்ண ஜெயந்தி விழா
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

13 ஆக
2017
00:09

சென்னை:கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, கிருஷ்ணர் கோவில்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஆவணி மாதம் தேய்பிறை, அஷ்டமி திதி, ரோகிணி நட்சத்திரம் சேர்ந்த நாள், கிருஷ்ணர் அவதார திருநாள். இந்த நாள், கிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது.

சென்னை, சோழிங்கநல்லுார், அக்கரையில் உள்ள இஸ்கான் கோவிலில், நாளை மாலை, 3:00 மணிக்கு, கிருஷ்ண யாகம் நடத்தப்படுகிறது. மேலும் ஆக., 15ல், காலை முதல் நள்ளிரவு வரை சிறப்பு தரிசனம் நடக்கிறது. இரவு, 10:30 மணி முதல் சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.

சென்னை, கோபாலபுரத்தில் உள்ள, 90 ஆண்டுகள் பழமைவாய்ந்த வேணுகோபால சுவாமி கோவிலில், கடந்த மாதம் முதல் தினமும் கச்சேரிகள், உபன்யாசங்கள் நடந்து வருகின்றன. இங்கு, நாளை இரவு, 7:30 மணிக்கு, தாமல் ராமகிருஷ்ணனின், 'கிருஷ்ண ஜனனம்' சொற்பொழிவு நடக்கிறது. மேலும், முத்தங்கி சேவை அலங்காரத்துடன் சுவாமி அருள்பாலிக்கிறார்.

சென்னை, மயிலாப்பூர், நந்தலாலாவில், இன்று காலை, 7:00 மணிக்கு, கோ பூஜையுடன் விழா துவங்குகிறது. மாலை, விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் நடக்கிறது. நாளை மாலை, கிருஷ்ண ஜனன வைபவம் நடக்கிறது. நாளை மறுநாள், அமிர்தம் கடைதல், குசேலர் வைபவம், உறியடி உற்சவம் நடக்கிறது.


 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.