தமிழகத்தில் மேலும் 110 இடங்களில் அமைகிறது பெட்ரோலிய கிணறுகள்
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

13 ஆக
2017
07:05

தஞ்சாவூர், ''தமிழகத்தில் ஏற் கெனவே ஆய்வுப்பணிகள் முடிந்த, 110 இடங்களில் பெட் ரோலிய கிணறுகள் அமைக்கப்பட உள்ளது,'' என, ஓ.என்.ஜி.சி., காவிரி சொத்து செயல் இயக்குனர் குல்பீர்சிங் தெரிவித்தார்.


தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் அவர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: ஓ.என்.ஜி.சி., தமிழகத்தில் காவிரி படுகையில், 30 ஆண்டுகளுக்கும் மேலாக கச்சா எண்ணெய் எடுத்து வருகிறது. இதனால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி யில் முக்கிய பங்கு வகிக்கிறது.கதிராமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் கச்சா எண்ணெய் பூமிக்கடியிலிருந்து உறிஞ்சப்பட்டு வருகிறது. இதில், 30ம் தேதி, "குத்தாலம் 35" என்ற எண்ணெய் கிணறு அருகே கசிவு ஏற்பட்டு, அன்று மாலையே கசிவு சரி செய்யப்பட்டது. இதுதொடர்பாக, தொடரப்பட்ட வழக்கை திரும்ப பெறும் எண்ணம் இல்லை. தமிழகத்தில், ஏற்கெனவே பல ஆண்டுகளுக்கு முன், ஆய்வு செய்யப்பட்ட, 110 இடங்களில் தான் எண்ணெய் கிணறு அமைக்கப்படவுள்ளது. புதிய இடங்களில் எண்ணெய் கிணறு அமைக்கப்படவில்லை. ஓ.என்.ஜி.சி., நிறுவனம், தமிழகத்தில் மீத்தேன், ஷேல்கேஸ் போன்ற எந்த திட்டப் பணிகளிலும் ஈடுபடவில்லை. தமிழகத்தில், ஓ.என்.ஜி.சி., நிறுவனத்தின் மீது, பொதுமக்களுக்கு வெறுப்பு ஏற்படும் வகையில் சமூக வலைதளங்களில் பரப்பப்படும் செய்திகளை நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையெனில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். கதிராமங்கலத்தில், ஓ.என்.ஜி.சி., நிறுவனத்தால் நிலத்தடி நீர் பாதிக்கப்படவில்லை. எங்களுடைய ஆய்வு மீண்டும், உறுதி செய்து உள்ளது. கதிராமங்கலத்தில் குழாய் உடைப்பு ஏற்பட்டது குறித்து ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


 

Advertisement
மேலும் தஞ்சாவூர் மாவட்ட  செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.